WTC Final : நாக்பூர் மாதிரி லண்டனும் இந்தியாவுக்கே சாதகமா இருக்கு, ஆனா ஜெயிக்க போறது எங்க ஆட்டம் தான் – ஸ்டீவ் ஸ்மித் பேட்டி

Steve Smith
- Advertisement -

டெஸ்ட் கிரிக்கெட்டின் 2வது சாம்பியனை தீர்மானிக்கும் 2023 ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் மாபெரும் இறுதி போட்டி வரும் ஜூன் 7 முதல் 11 வரை இங்கிலாந்தின் புகழ்பெற்ற லண்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. அதில் லீக் சுற்றின் முடிவில் புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்த ஆஸ்திரேலியாவை 2வது இடம் பிடித்த இந்தியா எதிர்கொள்கிறது. கடந்த முறை விராட் கோலி தலைமையில் நியூசிலாந்திடம் ஃபைனலில் சொதப்பி நழுவ விட்ட கோப்பையை இம்முறை ரோகித் சர்மா தலைமையில் வென்று 2013க்குப்பின் ஐசிசி தொடர்களில் தொடர்ந்து சந்தித்து வரும் தோல்விகளுக்கு இந்தியா முற்றுப்புள்ளி வைக்குமா என்ற எதிர்பார்ப்பு இந்திய ரசிகர்களிடம் காணப்படுகிறது.

IND vs AUS

- Advertisement -

அதே சமயம் இந்தியாவுக்கு சவாலை கொடுத்து முதல் முறையாக இந்த உலக கோப்பையையும் வெல்ல ஆஸ்திரேலியா போராட உள்ளது. அதற்காக இரு அணிகளைச் சேர்ந்த வீரர்களும் போட்டி நடைபெறும் லண்டனில் வலைப்பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். பொதுவாகவே இங்கிலாந்தில் ஸ்விங் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான மைதானங்கள் இருந்தாலும் இப்போட்டி நடைபெறும் லண்டன் ஓவல் மைதானம் மட்டும் சற்று சுழலுக்கு சாதகமாக இருந்து வருகிறது. குறிப்பாக 1972இல் ஸ்பின்னர் பிஎஸ் சந்திரசேகர் 6 விக்கெட்களை எடுத்து அந்த மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிராக இந்தியாவின் முதல் சரித்திர வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார்.

தயாரான ஸ்மித்:
அந்த வகையில் இந்த போட்டியிலும் முதல் 3 நாட்களுக்குப் பின் ஓவல் மைதானம் நன்றாகவே சுழல ஆரம்பிக்கும் என்பதால் அஸ்வின் – ஜடேஜா 2 உலகத்தரம் வாய்ந்த ஸ்பின்னர்களை கொண்ட இந்தியாவுக்கு சாதகமாக இருக்கும் என்றே சொல்லலாம். இந்நிலையில் இந்திய மண்ணில் சமீபத்தில் நடைபெற்ற பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடரில் இருந்தது போன்ற மைதானங்களைப் போலவே லண்டன் ஓவல் மைதானம் இருக்கும் என்று எதிர்பார்ப்பாக ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார்.

Steve Smith Harsha Bhogle

முன்னதாக நாக்பூரில் தங்களை வீழ்த்துவதற்காக வேண்டுமென்றே இந்தியா சுழலுக்கு சாதகமான மைதானங்களை உருவாக்கியிருப்பதாக அவர் குற்றம் சாட்டியது மிகப்பெரிய சர்ச்சையாக மாறியது. இருப்பினும் அதில் சிறப்பாக பேட்டிங் செய்த இந்தியா வெற்றியைப் பெற்று ஆஸ்திரேலியர்களின் குற்றச்சாட்டுகளை பொய்யாக்கியது. அந்த நிலைமையில் தற்போது குற்றம் சாட்டவில்லை என்றாலும் ஓவல் மைதானம் இந்தியாவுக்கு மிகவும் பிடித்த சுழலுக்கு சாதகமாக இருக்கும் என்று ஸ்டீவ் ஸ்மித் கூறியுள்ளார்.

- Advertisement -

ஆனால் இதற்கு முன் அந்த மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிராக விளையாடிய அனுபவத்தைக் கொண்டுள்ளதால் இந்தியாவுக்கு எதிராக இப்போட்டியில் ஆஸ்திரேலியா அசத்தும் என்று நம்பிக்கை தெரிவிக்கும் அவர் இது பற்றி பயிற்சிக்கு மத்தியில் பேசியது பின்வருமாறு. “ஓவல் மைதானத்தில் போட்டி நடைபெற நடைபெற முக்கிய நேரங்களில் சுழலுக்கு சாதகமாக இருக்கும். குறிப்பாக சமீபத்தில் இந்தியாவில் நாங்கள் விளையாடிய மைதானங்களை போலவே இங்கு சுழல் இருப்பதற்கு அதிக வாய்ப்புள்ளது”

Smith

“ஆனால் ஓவல் மைதானம் விளையாடுவதற்கு மிகவும் சிறந்த இடமாகும். குறிப்பாக வெளிப்புற மைதானங்கள் பட்டதும் பவுண்டரி பறக்கும் அளவுக்கு வேகமாக இருக்கும். மேலும் ஸ்கொயர் திசையில் எளிதாக அடிக்கலாம். அப்படிப்பட்ட சூழ்நிலையில் இங்கிலாந்தில் இருக்கும் வழக்கமான வேகம் மற்றும் பவுன்ஸ் ஆகியவை இந்த மைதானத்திலும் கிடைத்தால் பேட்டிங் செய்வதற்கு அற்புதமாக இருக்கும். எனவே இந்த போட்டியில் விளையாடுவதற்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்” என்று கூறினார்.

இதையும் படிங்க:WTC Final : மறுபடியும் அந்த அம்பயரா? அப்டினா இந்தியா கப் ஜெயிக்க போறதில்ல, இந்திய ரசிகர்கள் சோகம் – நடந்தது என்ன

அந்த வகையில் இதற்கு முன் ஓவல் மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிராக சிறப்பாக விளையாடியுள்ள ஸ்மித் டெஸ்ட் கிரிக்கெட்டில் 97.75 என்ற மிகப்பெரிய சராசரியை கொண்டுள்ளார். அத்துடன் என்ன தான் சுழலுக்கு சாதகமாக இருந்தாலும் இந்தியாவில் இருந்த மைதானங்களைப் போல ஓவல் மைதானம் நிச்சயமாக தாறுமாறாக சுழலாது. அதனால் மார்னஸ் லபுஸ்ஷேன், வார்னர், ஸ்மித் போன்ற பேட்ஸ்மேன்கள் இந்தியாவுக்கு மிகப்பெரிய சவாலாக இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement