
ஐசிசி 2025 சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் முதல் அரை இறுதிப் போட்டியில் வலுவான இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. அதில் வென்று ஃபைனலுக்கு தகுதி பெறப்போகும் முதல் அணி யார் என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது. கடைசியாக 2023 உலகக்கோப்பை ஃபைனலில் இந்தியாவை அதன் சொந்த மண்ணில் தோற்கடித்த ஆஸ்திரேலியா சாம்பியன் பட்டத்தை வென்றது.
அகமதாபாத் நகரில் சுழலுக்கு சாதகமாக இருந்த பிட்ச்சில் பேட்டிங்கில் திணறிய இந்தியா வெறும் 240 ரன்கள் மட்டுமே அடித்து தோல்வியுற்றதை மறக்க முடியாது. அந்த நிலையில் இப்போட்டி நடைபெறும் துபாய் பிட்ச்சும் சுழலுக்கு சாதகமாக இருக்கிறது. அதில் 2023 உலகக் கோப்பை ஃபைனல் போல ஸ்பின்னை வைத்து ஸ்பின்னர்களை நன்றாக எதிர்கொண்டு இந்தியாவை தோற்கடிக்க தயாராக இருப்பதாக ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் மறைமுகமாக தெரிவித்துள்ளார்.
அதற்காக பிட்ச் பற்றிய விவரங்களை மைதானப் பராமரிப்பாளர்களிடம் கேட்டு திட்டங்களை வகுத்துள்ளதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “துபாயில் மட்டும் விளையாடுவதால் இந்தியாவுக்கு சாதகம் இருக்கலாம். எனக்குத் தெரியவில்லை. அனைத்து 3 போட்டிகளையும் அவர்கள் இங்கே விளையாடியதால் பிட்ச் எப்படி இருக்கும் என்பது அவர்களுக்குத் தெரியும்”
“மைதான பராமரிப்பாளரிடம் இப்போது தான் பேசிவிட்டு வந்தேன். அது காய்ந்து நிறைய ட்ராபிக்கை கொண்டிருக்கிறது. எனவே அது எப்படி விளையாடும் என்பதை நாங்கள் பார்த்துள்ளோம். எங்கே இந்தியா தங்களது அனைத்து போட்டிகளையும் நன்றாக விளையாடியது. எனவே அவர்களுடன் இந்த நல்ல எதிர்நோக்கி உள்ளோம். நாங்கள் பிட்ச்சின் சரியான எண்டை கணித்துள்ளோம்”
“நேற்றைய போட்டியின் முடிவுக்காக காத்திருந்த நாங்கள் இன்று இங்கே வந்து நாளை விளையாட உள்ளோம். அதனால் இங்குள்ள சூழ்நிலைகளுக்கு உட்படுத்தும் வாய்ப்பு கிடைக்கவில்லை. வருண் சக்கரவர்த்தி மட்டுமல்ல. இந்தியாவின் மற்ற ஸ்பின்னர்களும் தரம் நிறைந்தவர்கள் என்று நினைக்கிறேன். எங்களைப் பொறுத்த வரை ஸ்பின்னர்களை குறிப்பாக மிடில் ஓவர்களில் எப்படி எதிர்கொள்கிறோம் என்பதைப் பொறுத்து தான் வெற்றி தோல்வி இருக்கும்”
இதையும் படிங்க: 14க்கு 1 தான்.. இந்தியா மட்டுமே கம்ப்ளீட் டீம்.. வேறவங்களா இருந்தா தோத்துருப்பாங்க.. அக்ரம், யூனிஸ் பாராட்டு
“இது நல்ல சவாலாக இருக்கும். இந்த ஆடுகளத்தில் சுழல் இருக்கும் என்று நினைக்கிறேன். நாங்கள் அதை எதிர்க்க செய்ய வேண்டும்” என்று கூறினார். மறுபுறம் ஆஸ்திரேலியாவின் ஆடம் ஜாம்பா இந்திய பேட்ஸ்மேன்களுக்கு சவாலை கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இந்தப் போட்டி இரு அணிகளுக்குமே சவாலானதாக இருக்கும் என்று நம்பலாம்.