ஐசிசி 2025 சாம்பியன்ஸ் ட்ராபி கிரிக்கெட் தொடரில் இந்தியா தங்களது போட்டிகளை துபாயில் விளையாடி வருகிறது. அங்கு குரூப் சுற்றில் வங்கதேசம், பாகிஸ்தான், நியூசிலாந்தை தோற்கடித்த இந்தியா புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்தது. குறிப்பாக 2019 உலகக்கோப்பை செமி ஃபைனல் உட்பட எப்போதுமே சவாலை கொடுக்கக் கூடிய நியூசிலாந்தை 44 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து அசத்தியது.
அந்தப் போட்டியில் 30/3 என சரிந்த இந்தியா போராடி 249-9 ரன்களை குவித்து பின்னர் நியூசிலாந்தை 205க்கு சுருட்டி வெற்றிப் பெற்றது. பேட்டிங்கில் அதிகபட்சமாக ஸ்ரேயாஸ் ஐயர் 79 ரன்கள் எடுத்த நிலையில் பந்து வீச்சில் வருண் சக்கரவர்த்தி 5 விக்கெட்டுகளை எடுத்து வெற்றியில் பங்காற்றினர். இதைத்தொடர்ந்து மார்ச் நான்காம் தேதி துபாயில் வலுவான ஆஸ்திரேலியாவை தங்களது செமி ஃ பைனல் போட்டியில் இந்தியா எதிர்கொள்கிறது.
முழுமையான இந்தியா:
இந்நிலையில் இந்தத் தொடரில் இந்தியா மட்டுமே முழுமையான தரமான அணி என்று பாகிஸ்தான் ஜாம்பவான்கள் வாசிம் அக்ரம் மற்றும் வகார் யூனிஸ் ஆகியோர் பாராட்டியுள்ளனர். இது பற்றி செமி ஃ பைனலுக்கு முன் டென் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் வாசிம் அக்ரம் பேசியது பின்வருமாறு. “இந்திய அணியை நீங்கள் எவ்வளவு பாராட்டினாலும் அது குறைவாகவே இருக்கும்”
“ஏனெனில் இங்கிலாந்துக்கு எதிரான தொடர் உட்பட கடைசியாக விளையாடிய 6 போட்டிகளில் அவர்கள் 6 வெற்றியைப் பெற்றுள்ளார்கள். ஐசிசி தொடர்களில் அவர்கள் கடைசியாக விளையாடிய 14 ஒருநாள் போட்டிகளில் வெறும் 1 தோல்வியை மட்டுமே சந்தித்தனர். அது 2023 உலகக் கோப்பை ஃபைனலில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரானது. அது இந்திய அணி எந்தளவுக்கு ஆழமான திறமை மற்றும் தன்னம்பிக்கையைக் கொண்டுள்ளனர் என்பதைக் காண்பிக்கிறது”
ஜாம்பவான்கள் பாராட்டு:
“பிட்ச்சை சரியாக படிக்கும் அவர்கள் 4 ஸ்பின்னர்களை தேர்ந்தெடுத்தனர். ஆனால் 4 ஸ்பின்னர்கள் இருக்கக்கூடாது என்று பலரும் விமர்சித்தனர். அவர்களது ஸ்பின்னர்கள் 37 ஓவர்கள் போட்டு 4.42 என்ற நல்ல எக்கனாமியில் பௌலிங் செய்தனர். அவர்களுக்கு எதிராக 250 ரன்களை அடிக்க முடியாது” எனக் கூறினார். இது பற்றி யூனிஸ் பேசியது பின்வருமாறு.
இதையும் படிங்க: 2 மாதம்.. கடைசி நேரத்தில் தமிழக வீரர் வருணை தேர்ந்தெடுத்த காரணம் என்ன? திட்டத்தை பகிர்ந்த ரோஹித்
“செமி ஃபைனலில் இருக்கும் 4 அணிகளைப் பார்த்தால் இந்தியா மட்டுமே அனைத்து துறைகளையும் பூர்த்தியாக கொண்டுள்ள முழுமையான அணியாக இருக்கிறது. பேட்டிங்கில் கொஞ்சம் தடுமாற்றம் இருந்தாலும் 3 விக்கெட்டுகளை இழந்த போது நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்த இந்தியாவுக்கு ஜடேஜா – பாண்டியா முக்கிய ரன்கள் அடித்து 250 ரன்கள் எடுக்க உதவினர். நியூசிலாந்து பௌலிங் செய்த விதத்திற்கு வேறு அணியாக இருந்தால் 250 ரன்கள் எடுப்பது கடினமாக இருந்திருக்கும்” என்று கூறினார்.



