ஐசிசி 2025 சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகள் முதல் செமி ஃபைனலில் மோதுகின்றன. முன்னதாக இந்தத் தொடருக்காக அறிவிக்கப்பட்ட இந்திய அணியில் கடைசி நேரத்தில் நீக்கப்பட்ட ஜெய்ஸ்வாலுக்கு பதில் வருண் சக்கரவர்த்தி தேர்வு செய்யப்பட்டார். ஏற்கனவே ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ் ஆகிய 4 ஸ்பின்னர்கள் இருந்த நிலையில் ஐந்தாவதாக வருண் தேர்வு செய்யப்பட்டது விமர்சனங்களை எழுப்பியது.
இருப்பினும் கம்பேக் கொடுத்தது முதல் டி20 கிரிக்கெட்டில் அபாரமாக பவுலிங் செய்த அவர் தற்போது நல்ல ஃபார்மில் இருக்கிறார். அதனால் கடைசி நேரத்தில் சாம்பியன்ஸ் டிராபியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அவருக்கு நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் விளையாடும் வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பில் 5 விக்கெட்டுகளை எடுத்த வருண் ஆட்டநாயகன் விருது வென்று இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார்.
கடைசி நேரத்தில் வருண்:
இந்நிலையில் அந்த சிறப்பான முடிவின் பின்னணியை கேப்டன் ரோஹித் சர்மா பகிர்ந்துள்ளார். குறிப்பாக துபாயில் நடைபெற்ற 2025 ஐஎல் டி20 தொடரை 2 மாதங்களாக உற்று நோக்கி அங்குள்ள பிட்ச் சுழலுக்கு சாதகமாக இருப்பதைக் கண்டறிந்ததாக ரோகித் கூறியுள்ளார். அதனாலேயே இந்த முடிவை எடுத்ததாக தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “வருண் விளையாடுவதற்காக நாங்கள் ஒரு பேட்ஸ்மேனை தியாகம் செய்ய வேண்டும்”
“இந்தத் தொடரில் 5 போட்டிகள் மட்டுமே இருக்கிறது. எனவே காயத்தை சந்திக்காத வரை அந்த எக்ஸ்ட்ரா பேட்ஸ்மேன் விளையாட மாட்டார் என்று நாங்கள் கருதினோம். அதே சமயம் காயத்தை சந்தித்தால் நீங்கள் அவரை விளையாட அழைக்க வேண்டும். ஆனால் வருண் காயத்தை சந்திக்காமல் விளையாடுவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்பது எங்களுக்குத் தெரியும்”
ரோஹித் விளக்கம்:
“எங்களிடம் 4 ஸ்பின்னர்கள் இருந்தால் அவர்களை விளையாட வைக்க வாய்ப்பு இருக்கும் என்பதும் தெரியும். துபாயில் கடந்த 2 மாதங்களாக என்ன நடந்தது என்பதைப் பற்றி உன்னிப்பாக கேட்டோம். இங்கே நிறைய போட்டிகள் விளையாடப்பட்டன. அதிலும் இங்கே நடைபெற்ற ஐஎல் டி20 தொடரை நாங்கள் பார்த்தோம். அதில் மெதுவாக வீசும் பவுலர்களுக்கு உதவி கிடைப்பதாக நாங்கள் கருதினோம்”
இதையும் படிங்க: ஆஸி அணியில் 2 பலவீனம் இருக்கு.. துபாயில் சேசிங் பண்ணா இந்தியா ஜெய்க்கலாம்.. கவாஸ்கர் கணிப்பு
“எனவே பேட்ஸ்மேன் தேவைப்பட்டால் அதை சமாளிக்க ரிசப் பண்ட் இருக்கிறார். அதனால் சுழல் பந்து வீச்சில் எக்ஸ்ட்ரா தேர்வை தேர்ந்தெடுக்கலாம் என்ற நோக்கத்துடன் வருணை தேர்ந்தெடுத்தோம். அவரை போட்டிகளில் பயன்படுத்த வாய்ப்பு ஏற்படும் என்றும் நினைத்தோம். இது தான் அவரை அணியில் தேர்ந்தெடுப்பதற்காக பின்புலத்தில் நாங்கள் சிந்தித்த அம்சங்களாகும்” எனக் கூறினார்.



