WTC Final : இந்தியாவை பொளந்து கட்டுவதற்காகவே பிறந்த ஸ்டீவ் ஸ்மித் – கவாஸ்கர், பாண்டிங், ஹைடனை மிஞ்சி புதிய சாதனை

Steve Smith
- Advertisement -

இங்கிலாந்தின் லண்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் ஜூன் 7ஆம் தேதியன்று துவங்கிய 2023 ஐசிசி டெஸ்ட் உலக சாம்பியன்ஷிப் கோப்பையின் மாபெரும் இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் வந்து வீசுவதாக அறிவித்தது. குறிப்பாக வானிலையை கருத்தில் கொண்டு அந்த முடிவை எடுத்ததாக தெரிவித்த ரோகித் சர்மா அதே காரணத்தால் ஐசிசி தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் டெஸ்ட் பவுலராக இருக்கும் அஷ்வினை கழற்றி விட்டது ரசிகர்களை அதிருப்தியில் ஆழ்த்தியது. அதைத்தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலியாவுக்கு ஆரம்பத்திலேயே உஸ்மான் கவாஜா டக் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தாலும் 2வது விக்கெட்டுக்கு 69 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த டேவிட் வார்னர் 43 ரன்கள் எடுத்து அவுட்டானார்.

அவருடன் மறுபுறம் அசத்திய உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேன் மார்னஸ் லபுஸ்ஷேன் 26 ரன்களில் அவுட்டாகி சென்றார். அதனால் 72/3 என தடுமாறிய ஆஸ்திரேலியாவை அடுத்ததாக களமிறங்கிய டிராவிஸ் ஹெட் இந்திய பவுலர்களை அதிரடியாக எதிர்கொண்டு ஆரம்ப முதலே விரைவாக ரன்களை சேர்த்தார். மறுபுறம் நம்பிக்கை நட்சத்திரம் ஸ்டீவ் ஸ்மித் நங்கூரமாக பேட்டிங் செய்த நிலையில் எதிர்ப்புறம் டெஸ்ட் கிரிக்கெட்டில் டி20 போன்ற அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய டிராவிஸ் ஹெட் டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் சதமடித்த முதல் வீரராக சாதனை படைத்தார்.

- Advertisement -

குறிப்பாக உணவு இடைவெளிக்கு பின் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியின் திட்டங்களை தவிடு பொடியாக்கிய இந்த ஜோடி வேகமாக ரன்களை எடுத்ததால் முதல் நாள் முடிவில் 237/3 ரன்கள் எடுத்து வலுவான துவக்கத்தை பெற்றது இந்திய ரசிகர்களை கவலையடைய வைத்தது. அந்த நிலைமையில் இன்று துவங்கிய 2வது நாளில் 95 ரன்களில் இருந்த ஸ்டீவ் ஸ்மித் தன்னுடைய 31வது சதத்தை பதிவு செய்து இந்தியாவுக்கு தொடர்ந்து சவாலை கொடுத்தார்.

1. மேலும் எப்போதுமே இந்திய அணிக்கு எதிராக சிறப்பாக செயல்படும் வழக்கத்தை கொண்டுள்ள அவர் 9வது சதத்தை அடித்து டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு எதிராக அதிக சதங்கள் அடித்த வீரர் என்ற ஜோ ரூட் சாதனையை சமன் செய்தார். அந்த பட்டியல்:
1. ஸ்டீவ் ஸ்மித் : 9*
2. ஜோ ரூட் : 9
3. ரிக்கி பாண்டிங்/சர் விவ் ரிச்சர்ட்ஸ்/சர் கேர்பீல்டு சோபர்ஸ் : தலா 8

- Advertisement -

2. அத்துடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்த 3வது ஆஸ்திரேலிய வீரர் என்ற ஹெய்டன் சாதனையையும் அவர் உடைத்தார். அந்த பட்டியல்:
1. ரிக்கி பாண்டிங் : 41
2. ஸ்டீவ் வாக் : 32
3. ஸ்டீவ் ஸ்மித் : 31*
4. மேத்தியூ ஹைடன் : 30
5. டான் பிராட்மேன் : 29

3. அத்துடன் இந்தியா – ஆஸ்திரேலியா மோதிய போட்டிகளில் அதிக சதங்கள் அடித்த 2வது வீரர் என்ற சாதனையும் படைத்தார். அந்த பட்டியல்:
1. சச்சின் டெண்டுல்கர் : 11
2. ஸ்டீவ் ஸ்மித் : 9*
3. சுனில் கவாஸ்கர்/விராட் கோலி/ரிக்கி பாண்டிங் : தலா 8

- Advertisement -

4. அது போக நவீன கிரிக்கெட்டில் அதிக டெஸ்ட் சதங்கள் அடித்த ஓய்வு பெறாத வீரர் என்ற சாதனையும் படைத்தார். அவருக்கு அடுத்தபடியாக ஜோ ரூட் 29 சதங்களுடன் 2வது இடத்திலும் கேன் வில்லியம்சன் மற்றும் விராட் கோலி ஆகியோர் தலா 28 சதங்களுடன் 3வது இடத்திலும் உள்ளனர்.

அப்படி சாதனைகளை படைத்த அவருடன் தொடர்ந்து மறுபுறம் அசத்திய டிராவிஸ் ஹெட் ஒரு வழியாக 4வது விக்கெட்டுக்கு 285 ரன்கள் மெகா பார்ட்னர்ஷிப் அமைத்து 25 பவுண்டரி 1 சிக்சருடன் 163 (174) ரன்களில் சிராஜ் வேகத்தில் அவுட்டாக அடுத்து வந்த கேமரூன் கிரீன் 6 ரன்களில் ஷமி வேகத்தில் நடையை கட்டினார். அடுத்த சில ஓவர்களிலேயே மறுபுறம் மிகப்பெரிய சவாலை கொடுத்த ஸ்மித் 19 பவுண்டரியுடன் 121 ரன்களில் தாக்கூர் வேகத்தில் கிளீன் போல்டானார்.

இதையும் படிங்க:WTC Final : இந்தியாவை பொளந்து கட்டுவதற்காகவே பிறந்த ஸ்டீவ் ஸ்மித் – கவாஸ்கர், பாண்டிங், ஹைடனை மிஞ்சி புதிய சாதனை

அதை தொடர்ந்து வந்த ஸ்டார்க் 5 ரன்னில் ரன் அவுட்டானாலும் அலெக்ஸ் கேரி 22* ரன்களும் கேப்டன் கமின்ஸ் 2* ரன்களும் எடுத்து விளையாடி வருவதால் 2வது நாள் உணவு இடைவெளியில் ஆஸ்திரேலியா 422/7 ரன்கள் குவித்து இப்போட்டியில் மேலும் வலுவான நிலையை எட்டியுள்ளது. மறுபுறம் உணவு இடைவெளிக்குள் ஆல் அவுட் செய்யும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்தியா மீண்டும் விக்கெட்டுகளை எடுப்பதற்கு திணறலாகவே செயல்பட்டு வருகிறது.

Advertisement