- Advertisement -
இந்திய கிரிக்கெட்

அம்பயரை குறை சொல்லாதீங்க.. இந்தியா தான் தலையில் மண்ணை வாரி போட்டுக்கிட்டாங்க.. ஹார்மிசன் சாடல்

லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் 3வது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. ஜூலை 10ஆம் தேதி துவங்கிய அப்போட்டியில் முதலில் விளையாடிய இங்கிலாந்து 387 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஜோ ரூட் 104 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியாவுக்கு அதிகபட்சமாக ஜஸ்ப்ரித் பும்ரா 5 விக்கெட்டுகளை சாய்த்தார்.

அடுத்து விளையாடும் இந்தியா இரண்டாவது நாள் முடிவில் 145/3 ரன்கள் எடுத்துள்ளது. முன்னதாக அந்தப் போட்டியில் 2வது நாள் காலையில் 251/4 என்ற நிலையில் இங்கிலாந்து ஆட்டத்தை தொடர்ந்தது. அப்போது பென் ஸ்டோக்ஸ், ஜோ ரூட், கிறிஸ் ஓக்ஸ் ஆகியோரை சீரான இடைவெளிகளில் அவுட்டாக்கி ஜஸ்ப்ரித் பும்ரா அசத்தினார்.

- Advertisement -

அம்பயரை குறை சொல்லாதீங்க:

அதனால் இங்கிலாந்தை 350 ரன்களுக்குள் இந்தியா சுருட்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்போது பந்தின் வடிவம் மாறியதைக் கண்டறிந்த நடுவர்கள் வேறு பந்தை வழங்கினர். இத்தனைக்கும் முதல் நாள் மாலையில் மாற்றப்பட்ட அந்த பந்து 10.2 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்டது. இருப்பினும் அந்த பந்தில் 2.2 டிகிரி ஸ்விங் கிடைத்ததைப் பயன்படுத்தி இந்திய பவுலர்கள் 3 விக்கெட்டுகள் எடுத்தனர்.

அப்படிப்பட்ட பந்தை வடிவம் மாறியதாக சொல்லி நடுவர்கள் மாற்றியதை கேப்டன் சுப்மன் கில் ஏற்றுக்கொள்ளாமல் வாக்குவாதம் செய்தார். இருப்பினும் விதிமுறைப்படி கில் கோரிக்கையை நடுவர்கள் ஏற்க மறுத்தனர். ஆனால் அந்த புதிய பந்தில் இந்தியா பவுலிங் செய்த போது 1.3 டிகிரி மட்டுமே ஸ்விங்கானது. அதைப் பயன்படுத்திய இங்கிலாந்து 387 ரன்கள் குவித்து அசத்தியது.

- Advertisement -

ஹார்மிசன் சாடல்:

இந்நிலையில் அனைத்தும் சாதகமாக சென்று கொண்டிருந்த நிலையில் பந்தை மாற்றுமாறு இந்தியா கேட்டதாலேயே நடுவர்கள் மாற்றியதாக முன்னாள் இங்கிலாந்து வீரர் ஸ்டீவ் ஹார்மிஷன் தெரிவித்துள்ளார். அந்த வகையில் இந்தியா தங்களுடைய தலையில் தாங்களே மண்ணை வாரிப் போட்டதாக விமர்சிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “இந்தியாவுக்கு என்னிடம் எந்த அனுதாபமும் இல்லை”

இதையும் படிங்க: அவர் அடிக்கலன்னா இந்தியா 387 தாண்டுவது கஷ்டம்.. மடக்கி பிடிச்சு இங்கிலாந்து லீட் எடுக்கும்.. ரூட் பேட்டி

“ஏனெனில் பும்ரா ஸ்விங் செய்து அசத்திக் கொண்டிருந்தார். அவரிடம் பந்தை கொடுத்து மாற்றலாமா? என்று சிராஜ் கேட்கக் கூட இல்லை. அந்த பந்து இந்தியாவுக்கு சாதகமாகவே இருந்தது. அப்படியிருந்தும் ஏன் அவர்கள் அதை மாற்றினார்கள்? என்ற ஐடியா என்னிடம் இல்லை. திடீரென பழைய (3வது) பந்து கொடுக்கப்பட்டது. அது மாற்றப்பட்ட பந்தை விட மிகவும் பழையதாக இருப்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். ஆனால் அது மாற்றப்பட்டதால் 320 ரன்களுக்குள் அவுட்டாக வேண்டிய இங்கிலாந்து சுமார் 400 ரன்கள் எடுத்தது. நீங்கள் நன்றாக செயல்பட்ட பந்தை மாற்றினீர்கள். அதனாலேயே இந்தியாவுக்கு என்னிடம் அனுதாபமில்லை. அவர்கள் அதை செய்திருக்கக் கூடாது” என்று கூறினார்.

- Advertisement -