இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து மண்ணில் 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. 2 போட்டிகளின் முடிவில் சமநிலையில் இருக்கும் அத்தொடரின் 3வது போட்டி லண்டனில் இருக்கும் லார்ட்ஸ் மைதானத்தில் ஜூலை 10ஆம் தேதி துவங்கியது. அதில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்தும் 387 ரன்கள் குவித்து அசத்தியது.
அதிகபட்சமாக ஜோ ரூட் 104 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியாவுக்கு அதிகபட்சமாக ஜஸ்ப்ரித் பும்ரா 5 விக்கெட்டுகளை சாய்த்தார். அடுத்ததாக விளையாடும் இந்தியா 3வது நாள் முடிவில் 145/3 ரன்கள் குவித்துள்ளது. இந்திய அணிக்கு ஜெய்ஸ்வால் 8, கேப்டன் சுப்மன் கில் 16 ரன்களில் அவுட்டானார்கள். நிதானமாக விளையாட முயற்சித்த கருண் நாயர் 40 ரன்னில் விக்கெட்டை இழந்தார்.
ஜோ ரூட் எச்சரிக்கை:
மறுபுறம் நிதானமாக விளையாடும் ராகுல் 53* ரன்கள் எடுத்துள்ளார். அவருடன் ரிஷப் பண்ட் லேசான காயத்தையும் பொருட்படுத்தாமல் களமிறங்கி 19* ரன்கள் எடுத்துள்ளார். இந்நிலையில் இன்னும் 242 ரன்கள் பின்தங்கியிருக்கும் இந்தியா முன்னிலை பெறுவது கடினம் என்று ஜோ ரூட் தெரிவித்துள்ளார். ஏனெனில் லார்ட்ஸ் பிட்ச் பேட்டிங் செய்ய சவாலாக இருப்பதாக அவர் மறைமுகமாக எச்சரித்துள்ளார்.
எனவே ரிஷப் பண்ட் பெரிய ரன்கள் குவிக்காவிட்டால் இந்தியாவை மடக்கி தாங்கள் முன்னிலைப் பெறுவோம் என்று அவர் கூறியுள்ளார். இது பற்றி ரூட் பேசியது பின்வருமாறு. “பிட்ச் சவாலாக இருந்ததாலேயே நாங்கள் மெதுவாக பேட்டிங் செய்தோம். அது மிகவும் மெதுவாக இருப்பதால் ரன்கள் அடிப்பது கடினம். நேற்று 99 ரன்களில் இருந்ததால் இரவில் எழுந்த பின் மீண்டும் என்னால் தூங்க முடியவில்லை”
இந்தியாவை மடக்குவோம்:
“சதத்தை அடிப்பதற்காக காத்திருந்ததும், அடித்த பின் உடனடியாக அவுட்டானதும் விரக்தியைக் கொடுத்தது. அங்கிருந்து பெரிய ரன்கள் குவிக்காதது ஏமாற்றத்தைக் கொடுத்தது. இப்படி சதங்கள் அடித்து சாதனைப் பட்டியலில் மேலே நகர்வதற்காகவே உங்களுக்கு சம்பளம் கொடுக்கப்படுகிறது. ஜோப்ரா ஆர்ச்சர் மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவதைப் பார்ப்பது மகிழ்ச்சியளிக்கிறது”
இதையும் படிங்க: 47 ரன்ஸ்.. 2013 போல பொல்லார்ட் காட்டடி.. அமெரிக்காவில் சிஎஸ்கே’வை வீட்டுக்கு அனுப்பிய மும்பை
“நாங்கள் 3வது நாளில் 6 – 7 விக்கட்டுகளை வேகமாக எடுத்து முன்னிலை ரன்களை பெறுவது நன்றாக இருக்கும். புதிய பந்தை வைத்து ஏதேனும் செய்வதற்கு பிட்ச்சில் நிறைய உதவி காத்திருக்கிறது. இந்தியா ஸ்கோர் அடிப்பது மிகவும் கடினமானது. இருப்பினும் ரிஷப் பண்ட் தன்னுடைய வழியில் எதையாவது செய்வார். நாங்கள் புத்திசாலித்தனமாகவும், புதுமையாகவும் செயல்பட வேண்டும். சில நேரங்களில் இயற்கையான சூழ்நிலைகள் உங்களுக்கு சாதகமாக வேலை செய்ய நீங்கள் அனுமதிக்க வேண்டும்” என்று கூறினார்.



