- Advertisement -
இந்திய கிரிக்கெட்

டாப் ரன்ஸ், விக்கெட்ஸ், சதமடிச்சும் இந்தியா தோல்வி.. இதுக்கு தான் கோலி வேணுங்கிறது.. ஸ்டீவ் ஹார்மிசன்

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து மண்ணில் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட மெகா தொடரில் விளையாடி வருகின்றது. 3 போட்டிகளின் முடிவில் 2 – 1* என்ற கணக்கில் இங்கிலாந்து முன்னிலை வகிக்கும் அத்தொடரின் 3வது போட்டி ஜூலை 23ஆம் தேதி துவங்கிறது. இந்நிலையில் இந்தத் தொடரில் பெரும்பாலான நாட்களில் இந்தியா சிறப்பாக விளையாடியதாக முன்னாள் இங்கிலாந்து வீரர் தெரிவித்துள்ளார்.

ஆனால் முக்கியமான அழுத்தமான நேரங்களில் அனுபவமின்மையால் இளம் இந்திய அணியினர் சொதப்பியதாக அவர் கூறியுள்ளார். அங்கே தான் விராட் கோலி போன்ற அனுபவமிக்க வீரர் தேவைப்படுவதாக ஹார்மிசன் தெரிவித்துள்ளார். குறிப்பாக லார்ட்ஸில் நடைபெற்ற 3வது போட்டியில் விராட் கோலி இருந்திருந்தால் இந்தியா வென்றிருக்கும் என்று அவர் கூறியுள்ளார்.

- Advertisement -

இதுக்கு தான் கோலி வேணும்:

இது பற்றி ஹார்மிசன் பேசியது பின்வருமாறு. “இந்தத் தொடரில் இந்தியா அதிக சதங்கள், டாப் ஆர்டர் ரன்கள், புதிய பந்தில் விக்கெட்டுகள் எடுத்துள்ளது. ஆனால் அதையும் தாண்டி இங்கிலாந்து வெற்றி பெறும் வழியைக் கண்டறிந்துள்ளது. ஒவ்வொரு செசனிலும் வெற்றிக்கு வித்திடக்கூடிய தருணங்களை உருவாக்குவது போட்டியின் போக்கை மாற்ற வல்லது. என்னைப் பொறுத்த வரை இந்தியா நம்பத் துவங்க வேண்டும்”

“அங்கே தான் விராட் கோலி நம்ப முடியாதவராக இருந்தார். ஒருவேளை விராட் கோலி அந்தப் போட்டியில் விளையாடியிருந்தால் 4வது இன்னிங்ஸில் சேசிங் செய்த இந்தியாவுக்கு கட்சிதமாக வெற்றியைப் பெற்றுக் கொடுத்திருப்பார். லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற போட்டியை அவர் இந்தியாவுக்காக கச்சிதமாக வென்றிருப்பார்” என்று கூறினார்.

- Advertisement -

அசத்தும் இளம் இந்தியா:

அவர் கூறுவது போல முதல் போட்டியில் 5 சதங்கள் அடித்து இந்தியா வரலாறு காணாத சாதனை படைத்தது. ஆனால் 7 கேட்ச்கள் தவற விட்டதால் 5 சதங்களை அடித்தும் தோல்வியை சந்தித்த முதல் அணியாக இந்தியா பரிதாப சாதனை படைத்தது. 3வது போட்டியிலும் முதல் இன்னிங்ஸில் சிறப்பாக பேட்டிங் செய்த இந்தியாவுக்கு ரிஷப் பண்ட் ரன் அவுட்டானது தோல்விக்கான திருப்பு முனையாக அமைந்தது.

இதையும் படிங்க: அதுல கம்பீர் சேவை போதும்.. அவரும் மனுஷன் தான்.. இனியாச்சும் இந்திய அணி ஸ்ப்லிட் பண்ணனும்.. ஹர்பஜன் பேட்டி

மொத்தத்தில் இளம் இந்திய அணி அனுபவமின்மையால் முக்கிய தருணங்களில் தடுமாறியது 2 தோல்விகளைக் கொடுத்தது. ஆனால் 3வது போட்டியில் இங்கிலாந்தை பஸ்பால் அதிரடி ஆட்டத்தை விளையாட விடாமல் இந்தியா மடக்கிப் பிடித்தது. அந்தளவுக்கு இங்கிலாந்துக்கு சொந்த மண்ணில் சவாலைக் கொடுக்கும் இந்திய அணி 4வது போட்டியில் வென்று தொடரை சமன் செய்ய முயற்சிக்கும் என்று நம்பலாம்.

- Advertisement -