அதுல கம்பீர் சேவை போதும்.. அவரும் மனுஷன் தான்.. இனியாச்சும் இந்திய அணி ஸ்ப்லிட் பண்ணனும்.. ஹர்பஜன் பேட்டி

Harbhajan Singh 2
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளராக கௌதம் கம்பீர் 2024 டி20 உலகக் கோப்பை முதல் செயல்பட்டு வருகிறார். அவருடைய தலைமையில் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் இந்தியா ஓரளவு சிறப்பாக விளையாடி அசத்தி வருகிறது. குறிப்பாக 2025 சாம்பியன்ஸ் டிராபியை 12 வருடங்கள் கழித்து இந்தியா வென்று அசத்தியது.

ஆனால் கிரிக்கெட்டின் உயிர்நாடியான டெஸ்ட் போட்டிகளில் கௌதம் கம்பீர் தலைமையில் இந்தியா தடுமாற்றமாக விளையாடி வருகிறது என்றே சொல்லலாம். ஏனெனில் கம்பீர் வழிகாட்டுதழில் கத்துக்குட்டி வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை எதிர்பார்த்ததைப் போலவே இந்தியா எளிதாக வென்றது. ஆனால் நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் வரலாற்றிலேயே முதல் முறையாக இந்தியா ஒய்ட்வாஸ் படுதோல்வியைச் சந்தித்தது.

- Advertisement -

3 ஃபார்மட் போதும்:

அதே போல ஆஸ்திரேலியாவிடம் 10 வருடங்கள் கழித்து பார்டர் – கவாஸ்கர் கோப்பையை கோட்டை விட்ட இந்தியா 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு முதல் முறையாக தகுதி பெறாமல் வெளியேறியது. தற்போது நடைபெறும் இங்கிலாந்து தொடரிலும் 3 போட்டிகள் முடிவில் 2 – 1* (5) என்ற கணக்கில் இந்தியா பின்தங்கியுள்ளது. இந்நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் கௌதம் கம்பீரின் பயிற்சி போதுமென்று முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் மறைமுகமாக தெரிவித்துள்ளார்.

இனிமேலாவது இந்திய அணி டெஸ்ட் மற்றும் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டுக்கு தனித்தனியே பயிற்சியாளர்களை நியமிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார். ஏனெனில் 10 மாதங்கள் குடும்பத்தை விட்டு பிரிந்து கம்பீர் 3 வகையான கிரிக்கெட்டிக்கும் தகுந்தார் போல் திட்டங்களை வகுத்து இந்தியாவை வெற்றிகரமாக செயல்பட வைப்பது கடினம் என்று ஹர்பஜன் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

ஹர்பஜன் கருத்து:

“தனி தனி பயிற்சியாளர்களை நியமிப்பதில் தவறில்லை என்று நான் கருதுகிறேன். ஏனெனில் வித்தியாசமான ஃபார்மட்டுக்கு வித்தியாசமான வீரர்கள் விளையாடுகிறார்கள். எனவே அதை செய்வது நல்ல ஆப்ஷனாக இருக்கும். அது பயிற்சியாளரின் பணிச்சுமையையும் குறைக்கும். ஏனெனில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 5 போட்டிகள் போன்ற பெரிய தொடருக்கு பயிற்சியாளரும் தயாராவதற்குத் தேவையான நேரம் வேண்டும்”

இதையும் படிங்க: இளம் இந்திய அணி சீகிரம் உலகையே தோற்கடிக்கும்.. அவர் தான் வருங்காலத் தூணா இருப்பாரு.. ஹர்பஜன் ஆதரவு

“நீங்கள் ஒரே பயிற்சியாளருடன் அதிகமாக வேலை செய்தால் அதீத சுமை ஏற்படலாம். அந்தப் பயிற்சியாளருக்கும் குடும்பம் போன்ற இதர பொறுப்புகள் இருக்கிறது. குடும்பம் இல்லாமல் தொடர்ச்சியாக இந்திய அணியுடன் பயணிப்பது எளிது கிடையாது. எனவே என்னிடம் கேட்டால் சிவப்பு, வெள்ளைப்பந்து கிரிக்கெட்டுக்கு தனித்தனியே பயிற்சியாளர்களைப் பிரிப்பது நல்ல நகர்வாக இருக்கும் என்று சொல்வேன்” எனக் கூறினார்.

Advertisement