விராட் கோலியின் பார்ம் மோசமாக மாறியதற்கு பிசிசிஐ தான் காரணம் – முன்னாள் வீரர்கள் குற்றசாட்டு

BCCI
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடர் மிகுந்த விறுவிறுப்புடன் நடைபெற்று வரும் நிலையில் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெற்ற 36-ஆவது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வெறும் 68 ரன்களுக்கு சுருட்டிய ஹைதராபாத் 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அப்போட்டியில் 68 ரன்களுக்கு சுருண்ட பெங்களூரு வரலாற்றிலேயே தனது 2-வது குறைந்தபட்ச ஸ்கோரை பதிவு செய்து பரிதாப சாதனை படைத்தது. அதைவிட அந்தப் போட்டியில் பெங்களூருவின் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி முதல் பந்திலேயே கோல்டன் டக் அவுட்டானது அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்தது.

Virat Kohli

- Advertisement -

ஏனெனில் இந்த வருடம் ஆரம்பம் முதலே தடுமாற்ற பேட்டிங்கை வெளிப்படுத்தி வரும் லக்னோக்கு எதிரான 6-வது போட்டியில் கோல்டன் டக் அவுட்டான நிலையில் இந்த போட்டியிலும் கோல்டன் டக் அவுட்டாகி ரசிகர்களை ஏமாற்றினார். இப்படி அடுத்தடுத்த போட்டிகளில் அவர் கோல்டன் டக் அவுட்டாவது வரலாற்றில் இதுவே முதல் முறையாகும்.

மோசமான பார்ம்:
இந்தியாவை போலவே ஐபிஎல் தொடரிலும் பெங்களூர் அணிக்காக ரன் மெஷினாக விளையாடி வரும் அவர் ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்கள் அடித்த பேட்ஸ்மேன் என்ற சாதனை படைத்துள்ளார். இருப்பினும் கடந்த 2019க்கு பின் சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு சதம் அடிக்க முடியாமல் திணறி வரும் அவர் அதே ஃபார்மை ஐபிஎல் தொடரிலும் வெளிப்படுத்தி வருகிறார். அதிலும் கடைசியாக 2019இல் ஒரு சதம் அடித்த அவர் அதன்பின் டெஸ்ட், ஒருநாள், டி20 மற்றும் ஐபிஎல் என அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் சேர்த்து 101* போட்டிகளாக சதமடிக்க முடியாமல் திண்டாடி வருகிறார்.

Virat Kohli vs CSK

இத்தனைக்கும் கடந்த 2017 – 2021 வரை கேப்டனாக இருந்த அவர் அந்த பணிச்சுமை தனது பேட்டிங்கை பாதித்ததாக உணர்ந்த காரணத்தால் கடந்த ஜனவரி மாதம் முழுமையாக அனைத்துவித கேப்டன் பதவிகளுக்கும் முழுக்கு போட்டார். அதன் காரணமாக சுதந்திரமாக விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதைவிட மோசமாக விளையாடி வருவது அவரின் ரசிகர்களை கவலையடைய வைத்துள்ளது.

- Advertisement -

கேப்டன்ஷிப் போனதே காரணம்:
இந்நிலையில் விராட் கோலியின் இந்த மோசமான பார்முக்கு அவர் கேப்டன்ஷிப் பதவி பறியோனதே காரணம் என்று முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் ஷேன் வாட்சன் தெரிவித்துள்ளார். இதுபற்றி தற்போது டெல்லி அணியின் பயிற்சியாளராக இருக்கும் அவர் பேசியது பின்வருமாறு. “கடைசியாக டெல்லிக்கு எதிரான போட்டியில் அவரைப் பார்த்தபோது அவரின் எனர்ஜி சற்று குறைந்து காணப்பட்டது. ஏனெனில் ஒவ்வொரு முறையும் அவர் களமிறங்கும் போது முழு மூச்சுடன் முழு எனர்ஜியுடன் ஒரு சூப்பர்மேனை போல் விளையாடுவார். ஆனால் அந்த நாளில் அவரின் பேட்டரி சற்று குறைந்தது போல எனக்கு காட்சியளித்தார்”

Watson-1

“குறிப்பாக இந்திய கேப்டன் பதவியில் இருந்து அவர் விலகியது அவரின் எனர்ஜியை நிறைய குறைத்து விட்டதாக தோன்றுகிறது. அவர் இந்திய கேப்டன் பதவியில் இருந்து விலகியது ஏதோ ஒரு வகையில் அவரிடம் சிறிய அளவிலான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் இப்போதும்கூட களத்தில் இறங்கி ஃபீல்டிங் செய்யும் போது மீண்டும் அந்த எனர்ஜியை கொண்டு வருகிறார். எனவே விரைவில் அவர் ஃபார்முக்கு திரும்புவார் என்று நம்புகிறேன்” என தெரிவித்தார்.

- Advertisement -

இதே விஷயத்தைப் பற்றி முன்னாள் இந்திய வீரர் வாசிம் ஜாபர் கூறியது பின்வருமாறு. “6 மாதங்களுக்கு முன்பு விராட் கோலி தான் அனைத்து கிரிக்கெட்டிலும் கேப்டனாக இருந்தார். ஆனால் திடீரென்று இப்போது எந்த ஒரு போட்டியிலும் கேப்டனாக இல்லை என்ற அம்சம் கண்டிப்பாக அவரின் மனதில் விளையாடுகிறது. அதனால் அவரால் தொடர்ந்து ரன்களை அடிக்க முடியவில்லை. எனவே இதிலிருந்து புத்துணர்ச்சி அடைந்து மீண்டும் பலத்துடன் பார்முக்கு திரும்புவதற்கு 3 வாரம் முதல் 2 மாதம் வரையிலான பிரேக் அவருக்கு தேவைப்படுகிறது” என்று கூறினார்.

Jaffer

அவர்கள் கூறுவது போல சாதாரண வீரராக இருக்கும்போது ரன் மழை பொழிந்த நிறைய வீரர்கள் கேப்டனானதும் அதன் அழுத்தம் காரணமாக பேட்டிங்கில் தடுமாறியதை பார்த்துள்ளோம். ஆனால் கேப்டனாக பொறுப்பேற்ற பின்பு தான் விராட் கோலி சக்கை போடு போட்டு ரன்கள் குவித்ததையும் நாம் கண்கூடாக பார்த்தோம்.

- Advertisement -

அப்படிபட்ட நிலைமையில் ஒரு உலகக் கோப்பை வாங்கித்தரவில்லை என்பதற்காக விமர்சனங்களுக்கு உள்ளான அவர் டி20 கேப்டன் பதவியில் இருந்து விலகிய போது ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கான கேப்டன் பதவியில் தொடர்ந்து நீடிக்க விரும்புவதாகத் தெரிவித்திருந்தார். ஆனால் அதை பயன்படுத்திய பிசிசிஐ ஒருநாள் கேப்டன் பதவியில் இருந்து அவரை வலுக்கட்டாயமாக நீக்கி ரோகித் சர்மாவை கேப்டனாக நியமித்தது. அதனால் மனமுடைந்த அவர் வெற்றிகரமான டெஸ்ட் கேப்டன் என சாதனை படைத்த போதிலும் கடந்த ஜனவரி மாதம் டெஸ்ட் போட்டிக்கான கேப்டன் பதவியிலிருந்தும் விலகினார்.

இதையும் படிங்க : வரலாற்றில் கிங் கோலியை முதல் பந்திலேயே கோல்டன் டக் அவுட் செய்த 5 பவுலர்களின் – லிஸ்ட் இதோ

அந்த அடுத்தடுத்த திருப்பங்கள் தான் விராட் கோலியை மனதளவில் பாதித்து தற்போது முன்பைவிட மோசமான பார்முக்கு தள்ளிவிட்டுள்ளதாக வாசிம் ஜாபர், ஷேன் வாட்சன் போன்றவர்கள் தெரிவிக்கின்றனர். மொத்தத்தில் விராட் கோலியின் இந்த மோசமான பார்முக்கு பிசிசிஐ ஒரு முக்கிய காரணமாக இருப்பது இதிலிருந்து தெளிவாக தெரிகிறது.

Advertisement