வரலாற்றில் கிங் கோலியை முதல் பந்திலேயே கோல்டன் டக் அவுட் செய்த 5 பவுலர்களின் – லிஸ்ட் இதோ

Virat Kohli
- Advertisement -

இந்தியாவின் நட்சத்திர வீரர் விராட் கோலி ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் என்றே ஒரே அணிக்காக ஐபிஎல் தொடங்கப்பட்ட 2008 முதல் இன்று வரை தொடர்ச்சியாக விளையாடும் ஒரே வீரராக சாதனை படைத்து வருகிறார். இந்தியாவைப் போலவே ஐபிஎல் தொடரிலும் தனது அபார திறமையால் ரன் மழை பொழிந்து வரும் அவர் ஒரு ரன் மெஷினாக அதிரடியான ரன்களை குவித்து பெங்களூருவுக்கு பல வெற்றிகளை தேடிக்கொடுத்த இதயமாக கருதப்படுகிறார். இருப்பினும் கடந்த 2019க்கு பின் சரியத் தொடங்கிய அவர் சர்வதேச கிரிக்கெட்டிலும் ஐபிஎல் தொடரிலும் பெரிய அளவில் ரன்கள் அடிக்க முடியாமலும் ஒரு சதம் அடிக்க முடியாமலும் தவித்து வருகிறார்.

RCB Faf Virat

- Advertisement -

மோசமான பார்ம்:
அந்த பார்ம் தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் 2022 தொடரில் மிகவும் மோசமடைந்துள்ளது. ஏனெனில் இதுவரை அவர் பங்கேற்ற 8 போட்டிகளில் முதல் 6 போட்டிகளில் 41*, 12, 5, 48, 1, 12 என 119 ரன்கள் குவித்து தடுமாறி வந்த நிலையில் லக்னோ எதிரான 7-வது போட்டியிலும் நேற்று ஹைதராபாத்துக்கு எதிராக நடந்த 8-வது போட்டியிலும் அடுத்தடுத்து சந்தித்த முதல் பந்திலேயே கோல்டன் டக் அவுட்டானார். இப்படி அடுத்தடுத்த போட்டிகளில் கோல்டன் டக் அவுட்டாவது இதுவே முதல் முறையாகும். இன்னும் சொல்ல வேண்டுமெனில் 2008 – 2021 வரை 3 கோல்டன் டக் அவுட்டான அவர் 2022இல் முதல் 8 போட்டிகளிலேயே 2 கோல்டன் டக் அவுட்டாகியுள்ளார்.

இதுவரை 215 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 6402* ரன்களுடன் ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்கள் குவித்த பேட்ஸ்மேனாக அபார சாதனை படைத்துள்ளார். அதிலும் 2016 ஒரே ஆண்டில் 4 சதங்கள் உட்பட 973 ரன்களை தெறிக்கவிட்ட அவர் ஒரு சீசனில் அதிக ரன்கள், அதிக சதங்கள் அடித்த பேட்ஸ்மேன் என்ற சரித்திரத்தையும் படைத்துள்ளார். அதன் காரணமாக ரசிகர்களால் “கிங் கோலி” என கொண்டாடப்படும் அவரை ஐபிஎல் போட்டிகளில் இதுவரை கோல்டன் டக் அவுட் செய்த பவுலர்களை பற்றி பார்ப்போம்.

nehra

1. ஆஷிஷ் நெஹ்ரா: லக்னோ அணியின் தற்போதைய பயிற்சியாளராக இருக்கும் முன்னாள் இந்திய நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஆசிஸ் நெஹ்ரா கடந்த 2008 முதல் ஐபிஎல் தொடரில் மும்பைக்காக விளையாடியபோது பெங்களூருவுக்கு எதிரான போட்டியில் அப்போதைய இளம் வீரராக இருந்த விராட் கோலியை முதல் முறையாக முதல் பந்திலேயே கோல்டன் டக் அவுட் செய்தார். அந்தப் போட்டியில் இதர வீரர்களும் சொற்ப ரன்களில் நடையை கட்டியதால் 9 விக்கெட் வித்தியாசத்தில் சச்சின் டெண்டுல்கர் தலைமையிலான மும்பை அபார வெற்றி பெற்றது.

- Advertisement -

2. சந்தீப் சர்மா: கடந்த 2014 ஐபிஎல் தொடரில் சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற 31-வது லீக் போட்டியில் சொந்த ரசிகர்களுக்கு முன்னிலையில் பஞ்சாப் நிர்ணயித்த 199 ரன்கள் இலக்கை துரத்திய பெங்களூரு 32 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. அந்த போட்டியில் பஞ்சாப்பை சேர்ந்த இந்திய பவுலர் சந்திப் சர்மாவிடம் விராட் கோலி சந்தித்த முதல் பந்திலேயே அதுவும் கேப்டனாக முதல் முறையாக கோல்டன் டக் அவுட்டானர்.

Sandeep-1

3. நாதன் கோல்டெர் நைல்: கடந்த 2017-ஆம் ஆண்டு உலகப் புகழ்பெற்ற கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடந்த 27-வது லீக் போட்டியை எந்த ஐபிஎல் ரசிகர்களும் மறக்க மாட்டார்கள். அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தாவை வெறும் 131 ரன்களுக்கு பெங்களூரு சுருட்டியது. ஆனால் அடுத்து களமிறங்கிய பெங்களூரு கொல்கத்தாவின் அதிரடியான பந்துவீச்சில் சுக்குநூறாக உடைந்து வெறும் 49 ரன்களுக்கு சுருண்டு வரலாற்றிலேயே குறைந்தபட்ச ஐபிஎல் ஸ்கோரை பதிவு செய்து பரிதாப சாதனை படைத்தது.

- Advertisement -

அந்த போட்டியில் கிறிஸ் கெயிலுடன் தொடக்க வீரராக களமிறங்கிய விராட் கோலியை ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த வேகப்பந்து பந்து வீச்சாளர்கள் கோல்டெர் நைல் முதல் ஓவரிலேயே கோல்டன் டக் அவுட் செய்து பெங்களூருவின் வரலாற்றுத் தோல்விக்கு அடித்தளமிட்டர்.

Virat Kohli Golden Duck

4. துஷ்மந்தா சமீரா: இந்த வருடம் நவி மும்பையில் நடைபெற்ற 31-வது லீக் போட்டியில் லக்னோவை எதிர்கொண்ட பெங்களூரு முதலில் பேட்டிங் செய்தது. அதில் இலங்கையைச் சேர்ந்த துஷ்மந்தா சமீரா வீசிய முதல் ஓவரின் 5-வது பந்தில் இளம் வீரர் அனுஜ் ராவத் அவுட்டாக அடுத்ததாக களமிறங்கிய விராட் கோலி 5 வருடம் கழித்து முதல் பந்திலேயே கோல்டன் டக் அவுட்டானார். இருப்பினும் அந்த போட்டியில் பெங்களூரு போராடி 18 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

இதையும் படிங்க : இனிமே நாங்க ரன் அடிக்கலனாலும் பரவாயில்லை. ஆனா இதை மட்டும் பண்ணமாட்டோம் – டூபிளெஸ்ஸிஸ் பேட்டி

5. மேக்ரோ யான்சன்: ஹைதெராபாத்துக்கு எதிராக நேற்று மும்பை ப்ராபோர்ன் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூருவுக்கு எதிராக 2-வது ஓவரை தென்னாபிரிக்க இளம் வேகப்பந்து வீச்சாளர் மேக்ரோ யான்சென் வீசுனார். அதில் 2-வது பந்திலேயே சக தென்ஆப்பிரிக்கா வீரர் டு பிளசிசை 5 (7) ரன்களில் அவுட் செய்த அவர் அடுத்து களமிறங்கிய விராட் கோலியை அடுத்த பந்திலேயே கோல்டன் டக் அவுட் செய்து அவரை கோல்டன் டக் அவுட் செய்யும் 5-வது பவுலர் என்ற பெருமையைப் பெற்றார்.

Advertisement