இனிமே நாங்க ரன் அடிக்கலனாலும் பரவாயில்லை. ஆனா இதை மட்டும் பண்ணமாட்டோம் – டூபிளெஸ்ஸிஸ் பேட்டி

Faf
- Advertisement -

நடப்பு ஐபிஎல் தொடரின் 36-வது லீக் போட்டி பிரபோர்ன் மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் டூபிளெஸ்ஸிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், கேன் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற வில்லியம்சன் பெங்களூரு அணியை முதலில் பேட்டிங் செய்ய பணித்தார். அதன்படி முதலில் விளையாடிய பெங்களூர் அணியானது துவக்கத்திலிருந்தே அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்க 20 ரன்களில் 4 விக்கெட்டுகளை இழந்து தவித்தது.

RCB vs SRH

- Advertisement -

பின்னர் எந்த ஒரு வீரரும் பெரிய ரன்களை எடுக்க முடியாததால் 16.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 68 ரன்களை மட்டுமே குவித்தது. பெங்களூர் அணி சார்பாக பிரபு தேசாய் 15 ரன்களும், மேக்ஸ்வல் 12 ரன்கள் குவித்தனர். பின்னர் 69 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணியானது 8 ஓவர்களில் ஒரு விக்கெட்டை இழந்து 72 ரன்கள் குவித்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் பெங்களூரு அணி விளையாடிய விதம் மீண்டும் பழைய மோசமான பெங்களூருவை கண்களுக்கு முன்னே நிறுத்தியது. இந்நிலையில் இந்த போட்டியில் அடைந்த மோசமான தோல்வி குறித்து பேசிய டூபிளெஸ்ஸிஸ் கூறுகையில் : முதல் 4 ஓவர்கள் நாங்கள் பார்த்து விளையாட வேண்டியது அவசியம். இதுபோன்று முதல் நான்கு ஓவர்களிலேயே அதிகமான விக்கெட்டுகளை விட்டுக் கொடுக்கக்கூடாது.

Virat Kohli SRH

போட்டியின் ஆரம்பத்திலேயே விக்கெட்டுகளை அடுத்தடுத்து விட்டு கொடுத்து விட்டதால் எங்களால் சரியான அடித்தளத்தை அமைக்க முடியவில்லை. இதனால் பெரிய ரன் குவிப்பிற்கு எங்களால் செல்ல முடியவில்லை. எனவே இனிவரும் போட்டிகளில் நல்ல அடித்தளத்தை அமைக்க விரும்புகிறோம். அதன் காரணமாக பவர்பிளே ஓவர்களில் நாங்கள் ரன்களை அடிக்காமல் இருந்தால் கூட பரவாயில்லை.

- Advertisement -

விக்கெட்டை விட்டுக்கொடுக்காமல் துவக்கம் சரியாக இருந்தால் நிச்சயம் இறுதியில் ரன்கள் வரும். போட்டியின் ஆரம்பத்திலேயே விக்கெட்டை இழப்பதனால் பெரிய அளவில் ரன்களை குவிக்க முடியவில்லை என்று வருத்தம் தெரிவித்தார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் : இனி வரும் போட்டிகளில் துவக்க ஓவர்களில் நிலையாக நின்று விக்கெட்டுகளை விடாமல் பின்வரிசையில் அதிரடியாக ஆடி ரன்களை குவிப்போம்.

இதையும் படிங்க : ஐபிஎல் போன்ற டி20 தொடர்களுக்காக டெஸ்ட்டுக்கு குட் பை சொன்ன நட்சத்திர வீரர் – வங்கதேச ரசிகர்கள் ஷாக்

இந்த போட்டியில் மார்கோ யான்சென் சிறப்பாக பந்து வீசினார் என்றும் கூறியிருந்தார். மேலும் இந்த தோல்வியின் காரணமாக தற்போது வருத்தம் இருந்தாலும் இனி வரும் போட்டிகளில் இந்த தவறுகளிலிருந்து பாடத்தைக் கற்றுக் கொண்டு முன்னேறிச் செல்வோம் என்று டூபிளெஸ்ஸிஸ் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement