ஐபிஎல் போன்ற டி20 தொடர்களுக்காக டெஸ்ட்டுக்கு குட் பை சொன்ன நட்சத்திர வீரர் – வங்கதேச ரசிகர்கள் ஷாக்

Rahman
- Advertisement -

வங்கதேசத்தை சேர்ந்த வளர்ந்து வரும் நட்சத்திர கிரிக்கெட் வீரர் முஸ்தபிசுர் ரஹ்மான் கடந்த சில வருடங்களாக தனது அபார திறமையால் அந்த அணியின் நம்பிக்கை நட்சத்திர வீரராக உருவெடுத்துள்ளார். கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் முறையாக அறிமுகமான அவர் முதல் வருடத்திலிருந்தே தனது அபார திறமையால் வங்கதேசத்தின் நட்சத்திரமாக உருவெடுக்க தொடங்கினார். குறிப்பாக தனது அறிமுக தொடரிலேயே 13 விக்கெட்டுகளை எடுத்த அவர் ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுக தொடரில் அதிக விக்கெட்டுகள் எடுத்த வங்கதேச பவுலர் என்ற சாதனை படைத்தார். அதேபோல் அறிமுக ஒருநாள் மற்றும் அறிமுக டெஸ்ட் போட்டிகளில் ஆட்ட நாயகன் விருதை வென்ற முதல் வங்கதேச வீரர் என்ற அபார சாதனையும் படைத்தார்.

- Advertisement -

கடந்த 2015 வாக்கில் சொந்த மண்ணில் நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் எம்எஸ் தோனி தலைமையிலான இந்தியாவை 2 – 1 என்ற கணக்கில் தோற்கடித்த வங்கதேசம் வரலாற்றிலேயே முதல் முறையாக இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை வென்று சரித்திரம் படைத்தது. அந்த தொடரில் இவர் வங்கதேசத்தின் கருப்பு குதிரை செயல்பட்டார் என்றே கூறலாம்.

டெஸ்டுக்கு குட் பை:
இப்படி கடந்த சில வருடங்களாக 3 வகையான வந்த வங்கதேச கிரிக்கெட்டின் முக்கிய துருப்பு சீட்டு வேகப்பந்து வீச்சாளராக வலம் வந்த அவர் டி20 போன்ற வெள்ளை பந்து கிரிக்கெட்டின் மீதிருக்கும் ஆர்வத்தால் சமீப காலங்களாக டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒதுங்கியிருந்தார். கடைசியாக கடந்த 2021இல் சொந்த மண்ணில் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக நடந்த டெஸ்ட் தொடரிலும் அதன்பின் ஜிம்பாப்வே, பாகிஸ்தான், நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா என கடந்த ஒரு வருடமாக அனைத்து டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்காமல் இருந்து வருகிறார்.

bangladesh

அப்படிப்பட்ட நிலையில் 3 வகையான கிரிக்கெட்டுக்கும் தனித்தனியாக சம்பள ஒப்பந்தங்களை வங்கதேச கிரிக்கெட் வாரியம் சமீபத்தில் அறிவித்தது. எந்த வகையான கிரிக்கெட்டில் வீரர்கள் விளையாடுகிறார்களோ அதற்கு மட்டும் சம்பளம் என்ற புதிய மாற்றத்தை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் செய்துள்ளது. அதன் காரணமாக இனிவரும் காலங்களில் டி20 மற்றும் ஒருநாள் போன்ற வெள்ளை பந்து கிரிக்கெட்டில் மட்டும் கவனம் செலுத்துவதற்காக டெஸ்ட் போட்டிகளிலிருந்து விரைவில் விடைபெற உள்ளதாக முஸ்தபிசுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

டி20 போட்டிகளுக்காக:
இது பற்றி ஐசிசி அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “வங்கதேச கிரிக்கெட் வாரியத்துக்கு டெஸ்ட் கிரிக்கெட்டில் என்னுடைய நிலைப்பாட்டை தெரிவிக்க விரும்புகிறேன். இது பற்றி என்னுடைய ஒரு சில சீனியர் வீரர்கள் ஏற்கனவே பிசிபி தலைவரிடம் பேசி உள்ளதால் நானும் பேசவுள்ளேன். என்னை கண்டிப்பாக டெஸ்ட் போட்டிகளில் விளையாட வேண்டும் என பிசிசிஐ கட்டாயப்படுத்தவில்லை. அதே சமயம் டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்கான ஒப்பந்தமும் என்னிடம் செய்யப்படவில்லை. என்னை பொறுத்தவரை ஆரோக்கியமாக இருப்பது முக்கியமானதாகும். வங்கதேசத்திற்கு நான் நீண்ட நாட்கள் விளையாட விரும்பினால் அதற்கு நான் முதலில் ஆரோக்கியமாக உடல் தகுதியுடன் இருக்க வேண்டும்”

Mustafizur Rahman Test

“அதற்கு 3 வகையான கிரிக்கெட்டில் குறிப்பிட்ட தக்ககை தேர்வு செய்ய வேண்டும். அந்த வகையில் என்னுடைய புள்ளி விவரங்களை புரட்டிப் பார்க்கும்போது டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் நான் சிறப்பாக செயல்படுவதாக உணருகிறேன். எனவே அந்த 2 வகையான கிரிக்கெட்டில் மட்டும் கவனம் செலுத்த விரும்புகிறேன். இந்த உலகில் நிறைய வீரர்கள் அவர்களின் கேரியரை நீண்ட வருடங்கள் விளையாடுவதற்காக இதுபோன்ற முடிவை எடுத்துள்ளனர். அத்துடன் ஒரு அணி எப்போதும் ஒரு குறிப்பிட்ட வீரரை நம்பி இருக்காது” என்று கூறினார்.

- Advertisement -

ரசிகர்கள் ஷாக்:
தற்போது 26 வயது மட்டுமே நிரம்பியுள்ள முஸ்தபிசுர் ரஹ்மான் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் ஏற்கனவே தாம் சிறப்பாக விளையாடுவதாக உணர்ந்த காரணத்தால் அதில் கடைசி வரை கவனம் செலுத்தி சிறப்பாக விளையாடுவதற்காக டெஸ்ட் போட்டிகளில் விடைபெற உள்ளதாக அறிவித்துள்ளார். இதுபோன்ற முடிவை ஏற்கனவே நிறைய ஜாம்பவான்கள் எடுத்துள்ள நிலையில் தாமும் அதை பின்பற்ற உள்ளதாக கூறும் அவர் இது பற்றி விரைவில் வங்கதேச கிரிக்கெட் வாரியத்திடம் பேச உள்ளதாக தெரிவித்துள்ளார்.

Ban

தற்போது ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் அவர் இதுபோல தொடர்ந்து வெள்ளை பந்து கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்படுத்துவதற்காக டெஸ்ட் கிரிக்கெட்டை புறக்கணித்துள்ளது வங்கதேச ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. ஏனெனில் வெறும் 26 வயது மட்டுமே நிரம்பியுள்ள அவர் இதுவரை வெறும் 14 போட்டிகளில் மட்டுமே விளையாடி 30 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.

இதையும் படிங்க : தோனி பண்ணா கரெக்ட்டு. பண்ட் பண்ணா தப்பா? – கொதித்தெழுந்த ரசிகர்கள் – நடந்தது என்ன?

இவரைப் போன்ற ஒரு நல்ல தரமான பவுலர் இல்லாதது வங்கதேச டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு நிச்சயமாக பின்னடைவை ஏற்படுத்தும் என அந்நாட்டு ரசிகர்கள் கருதுகின்றனர்.

Advertisement