தோனி பண்ணா கரெக்ட்டு. பண்ட் பண்ணா தப்பா? – கொதித்தெழுந்த ரசிகர்கள் – நடந்தது என்ன?

Pant
- Advertisement -

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 34-வது லீக் ஆட்டத்தில் டெல்லி அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் தோல்வியை சந்தித்தது. இந்த போட்டியில் டெல்லி அணிக்கு கடைசி ஓவரில் 6 பந்துகளில் 36 ரன்கள் தேவைப்பட்ட போது மெக்காய் வீசிய அந்த கடைசி ஓவரின் முதல் மூன்று பந்துகளையும் ராவ்மன் பவல் சிக்ஸருக்கு அடித்திருந்தார். இதன் காரணமாக போட்டி இறுதிநேரத்தில் மிகவும் விறுவிறுப்பானது. மேலும் மெக்காய் வீசிய அந்த கடைசி ஓவரின் 3-வது பந்து கிட்டத்தட்ட பவலின் நெஞ்சுவரை வந்ததால் நோபால் என்று அனைவரும் நினைத்தனர்.

Umire Rovman Powell

- Advertisement -

ஆனால் களத்தில் இருந்த அம்பயர்கள் அதனை நோபால் இல்லை என்று அறிவித்தார்கள். இதன் காரணமாக டெல்லி அணியின் வீரர்கள் இடையே மிகப்பெரிய ஆவேச அலை எழுந்தது. குறிப்பாக கோபத்தின் உச்சத்துக்கு சென்ற டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் மைதானத்திலிருந்து வீரர்களை உடனடியாக வெளியேற சொன்னார். அது மட்டுமின்றி தங்களது அணியின் உதவி பயிற்சியாளர் பிரவின் ஆம்ரேவை களத்திற்குள் அனுப்பி நடுவர்கள் உடன் விவாதம் செய்தார்.

ரிஷப் பண்ட்டின் இந்த எல்லை மீறிய செயல் காரணமாக அவருக்கு போட்டி ஊதியத்தில் இருந்து 100 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டது. அதோடு டெல்லியில் மற்றொரு வீரரான ஷர்துல் தாகூருக்கு 50 சதவீத அபராதமும், பிரவீன் ஆம்ரேவுக்கு 100 சதவீத அபராதம் மற்றும் ஒரு போட்டியில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது. மேலும் ரிஷப் பண்ட்டின் இந்த செயல் பல்வேறு வீரர்கள் மத்தியிலும் பெரிய கண்டனத்தை பெற்றது.

dhoni

ஆனால் இதே போன்று ஒரு சம்பவம் 2019ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணிக்கு எதிராக அரங்கேறியது. அப்போது சென்னை அணியின் கேப்டனாக இருந்த தோனி நோபால் கேட்டு மைதானத்துக்குள் நுழைந்து அம்பயர்களிடம் வாக்குவாதம் செய்தார். பொதுவாகவே அமைதியாக இருக்கும் தோனி அன்று ஆக்ரோஷம் அடைந்தது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது. ஆனால் அப்போது அம்பயருடன் சண்டையிட்ட தோனிக்கு பெரிய எதிர்ப்பு எழவில்லை.

- Advertisement -

இந்நிலையில் இந்த இரண்டு விவகாரங்களையும் சுட்டிக்காட்டியுள்ள ரசிகர்கள் அன்று தோனி செய்தது சரியா? இப்போது பண்ட்க்கு மட்டும் ஏன் இவ்வளவு கண்டனங்கள் குவிகின்றன? என்று சரியான கேள்விகளை கேட்டு வருகின்றனர். ரசிகர்கள் கூறுவது போலவே ரிஷப் பண்ட்டிற்கு இவ்வளவு தண்டனை விதிக்கப்பட்டாலும் அன்று தோனிக்கு எந்த கண்டனமும், எச்சரிக்கையும் விடப்படவில்லை.

இதையும் படிங்க : முதல்ல அந்த அம்பயரை தடை பண்ணுங்க, ரசிகர்களே வெறுக்கும் அந்த ஐ.பி.எல் அம்பயர் யார்? – என்ன பண்ணாரு?

ஆனால் பேச்சுக்கு அவருக்கு 50% அபராதம் மட்டும் விதிக்கப்பட்டது. இப்படி இருவர் செய்த செயலும் ஒன்று தான் என்றாலும் தோனிக்கு ஒரு நியாயம்? பண்ட்டுக்கு ஒரு நியாயமா என்பது போல ரசிகர்கள் பி.சி.சி.ஐ-யை நோக்கி தங்களது கேள்விகளை முன்வைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement