முதல்ல அந்த அம்பயரை தடை பண்ணுங்க, ரசிகர்களே வெறுக்கும் அந்த ஐ.பி.எல் அம்பயர் யார்? – என்ன பண்ணாரு?

Nitin Menon
- Advertisement -

பல எதிர்பாராத திருப்பங்களுடன் பரபரப்பாக நடைபெற்று வரும் ஐபிஎல் 2022 தொடரில் ஏப்ரல் 22-ஆம் தேதி நடைபெற்ற 34-ஆவது லீக் போட்டியில் டெல்லியை தோற்கடித்த ராஜஸ்தான் 15 ரன்கள் வித்தியாசத்தில் சிறப்பான வெற்றியை பதிவு செய்தது. மும்பை வான்கடே மைதானத்தில் பரபரப்பாக நடைபெற்ற அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 222 ரன்கள் குவித்து இந்த வருடம் ஐபிஎல் தொடரில் அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த அணியாக அசத்தியது. அந்த அணிக்கு தொடக்க வீரராக களமிறங்கிய ஜோஸ் பட்லர் அதிரடி சரவெடியாக பேட்டிங் செய்து 9 பவுண்டரி 9 சிக்சர் உட்பட 116 (65) ரன்களை விளாசி இந்த வருடத்தில் தனது 3-வது சதத்தை விளாசினார்.

அவருக்கு உறுதுணையாக தேவ்தூத் படிக்கல் 54 (35) ரன்களும் கேப்டன் சஞ்சு சாம்சன் 46* (19) ரன்களும் எடுத்து அதிரடியான பினிஷிங் கொடுத்தனர். அதைத் தொடர்ந்து 223 என்ற இமாலய இலக்கை துரத்திய டெல்லிக்கு பிரித்திவி சா 37 (28), டேவிட் வார்னர் 28 (14), கேப்டன் ரிஷப் பண்ட் 44 (24), லலித் யாதவ் 37 (24) போன்ற வீரர்கள் அதிரடியாக ரன்கள் எடுத்து நல்ல தொடக்கத்தை பெற்ற போதிலும் பெரிய ரன்கள் எடுக்க முடியாமல் அவுட்டானார்கள். அதனால் 20 ஓவர்களில் 208/7 ரன்களை மட்டுமே எடுத்த டெல்லி போராடி தோல்வி அடைந்தது.

- Advertisement -

சர்ச்சை அம்பயர்:
அந்த போட்டியில் கடைசி ஓவரில் டெல்லியின் வெற்றிக்கு 36 ரன்கள் தேவைப்பட்ட போது ஒபேத் மெகாய் வீசிய அந்த ஓவரின் முதல் 3 பந்துகளில் அதை எதிர்கொண்ட ரோவ்மன் போவல் அதிரடியாக ஹாட்ரிக் சிக்சர்களை பறக்கவிட்டார். அதில் 3-வது பந்தை புல் டாசாக வீசப்பட்ட நிலையில் அதை போவல் சிக்சர் அடித்த போதிலும் அந்த பந்து இடுப்புக்கு மேலே வந்தது. ஆனால் அடிப்படை விதி முறைப்படி இடுப்புக்கு மேலே வந்தால் நோ பால் கொடுக்கவேண்டும் என்று தெரிந்தும் அம்பயர் அமைதியாக இருந்ததால் ஆத்திரமடைந்த டெல்லி கேப்டன் ரிஷப் பண்ட் உடனடியாக மைதானத்தில் இருந்த குல்தீப் யாதவ் மற்றும் ரோவ்மன் போவல் ஆகிய தனது அணி வீரர்களை பெவிலியனுக்கு அழைத்தார்.

அதேசமயம் டெல்லியின் துணை பயிற்சியாளர் பர்வீன் ஆம்ரே களத்திற்குள் நுழைந்து அம்பயரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இருப்பினும் கடைசி வரை எடுத்த முடிவிலிருந்து பின்வாங்காத அம்பயர் டெல்லி வீரர்களை வெளியே அனுப்ப மறுத்ததால் எஞ்சிய போட்டி சர்ச்சையுடன் நிறைவுபெற்றது. அந்தக் காரணத்துக்காக வான்கடே மைதானத்தில் கூடியிருந்த ரசிகர்கள் அம்பயரை “சீட்டர் சீட்டர்” என கோஷமிட்டு தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

- Advertisement -

அந்த நிலைமையில் அம்பயரின் தீர்ப்பே இறுதி என தெரிந்தும் அத்துமீறி நடந்துகொண்ட டெல்லி கேப்டன் ரிஷப் பண்ட்க்கு அந்த போட்டிக்கான 100% சம்பளத்தையும் ஷார்துல் தாகூருக்கு 50% சம்பளத்தையும் பயிற்சியாளர் பர்வின் ஆம்ரேக்கு 100 சதவீத அபராதத்துடன் கூடிய ஒரு போட்டி தடையையும் ஐபிஎல் நிர்வாகம் அதிரடியாக விதித்துள்ளது. இந்நிலையில் இந்த போட்டியை போல் கடந்த சில வருடங்களாகவே தொடர்ந்து மோசமாக அம்பயரிங் செய்து வரும் இந்திய அம்பயர் நிதின் மேனனை எப்போது தடை செய்யப் போகிறீர்கள் என்று ஐபில் நிர்வாகத்துக்கு ரசிகர்கள் கேள்வி எழுப்புகின்றனர். அதற்கான காரணத்தைப் பற்றி பார்ப்போம்:

1. கடந்த 2019 ஐபிஎல் தொடரில் சென்னை – மும்பை அணிகள் மோதிய போட்டியில் கடைசி ஓவரில் பேட்டிங் செய்த பொல்லார்ட்க்கு எதிராக சென்னையின் ப்ராவோ ஒயிட் பந்தை வீசினார். ஆனால் அதை அம்பயராக இருந்த நித்ய மேனன் வைட் கொடுக்க மறுத்ததால் கடுப்பான பொல்லார்ட் பேட்டை மேலே தூக்கி எறிந்து அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

- Advertisement -

2. மேலும் கடந்த 2020 ஐபிஎல் தொடரில் டெல்லி பஞ்சாப்புக்கு எதிரான பரபரப்பான சூப்பர் ஓவருக்குப் பின் டெல்லி வெற்றி பெற்றது. ஆனால் 19-வது ஓவரில் பஞ்சாப் வீரர் கிறிஸ் ஜோர்டான் 2 ரன்கள் எடுக்கும் போது க்ரீசை தொடவில்லை எனக்கூறிய அம்பயர் நிதின் மேனன் 1 ரன் மட்டுமே வழங்கினார்.

ஒருவேளை அந்தத் தவறு நடக்காமல் இருந்திருந்தால் சூப்பர் ஓவர் வரை போட்டியும் சென்றிருக்காது பஞ்சாப்பும் வெற்றி பெற்றிருக்கும். அத்துடன் அந்த தோல்வி அந்த வருட பிளே ஆப் சுற்றுக்கு பஞ்சாப் தகுதி பெற முடியாமல் போனதற்கு ஒரு மிகப்பெரிய காரணமாக அமைந்தது. அதன் காரணமாக அந்த அம்பயர் மீது பஞ்சாப் உரிமையாளர் நெஸ் வாடியா ஐபிஎல் நிர்வாகத்திடம் புகார் கூட எழுப்பியிருந்தார்.

இதையும் படிங்க : மலிங்காவால் கூட படைக்க முடியாத மிரட்டல் சாதனை படைத்த ரசல் – வேற லெவல் சாதனைகள் இதோ

இதுபோல மேலும் சில முடிவுகளை அம்பயர் நிதின் மேனன் தொடர்ந்து வழங்கி வருகிறார். எனவே 1990 மற்றும் 2000 ஆகிய காலகட்டங்களில் இந்தியாவிற்கு எதிராக வேண்டுமென்றே தவறான தீர்ப்புகளை வழங்கியே வெஸ்ட் இண்டீஸ் அம்பயர் ஸ்டீவ் பக்னரை போல ஐபிஎல் தொடரில் அனைத்து அணிகளின் வெற்றிகளில் பல சம்பவங்களை செய்து கையை வைக்கும் நித்தின் மேனனை தடை செய்யுமாறு பல இந்திய ரசிகர்கள் பிசிசிஐயிடம் கேட்கின்றனர்.

Advertisement