தோற்றாலும் தோனி எங்களை அதுலருந்து அழகா காப்பாத்திட்டாரு.. பயிற்சியாளர் பிளெமிங் பாராட்டு

Stephen Fleming
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் டெல்லியிடம் 20 ரன்கள் வித்தியாசத்தில் தோற்ற நடப்புச் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் தங்களுடைய முதல் தோல்வியை பதிவு செய்தது. விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி டேவிட் வார்னர் 52, பிரிதிவி ஷா 43, கேப்டன் ரிசப் பண்ட் 51 ரன்கள் எடுத்த உதவியுடன் 192 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.

ஆனால் அதை சேசிங் செய்த சென்னைக்கு கேப்டன் ருதுராஜ் 1, ரச்சின் ரவீந்திரா 2, சமீர் ரிஸ்வி 0 ரன்களில் அவுட்டாகி பெரிய பின்னடைவை கொடுத்தார்கள். அதன் காரணமாக ரகானே 45, டேரில் மிட்சேல் 34, சிவம் துபே 18, ஜடேஜா 21*, எம்எஸ் தோனி 37* ரன்கள் அடித்துப் போராடியும் 20 ஓவரில் 171/6 ரன்கள் மட்டுமே எடுத்த சிஎஸ்கே வெற்றி காண முடியவில்லை.

- Advertisement -

காப்பாற்றிய தோனி:
அதனால் முதல் வெற்றி பெற்ற டெல்லி சார்பில் அதிகபட்சமாக முகேஷ் குமார் 3 விக்கெட்டுகள் எடுத்தார். முன்னதாக இந்த தொடரின் முதல் 2 போட்டிகளில் பேட்டிங் செய்யாத தோனி இப்போட்டியில் கடைசி நேரத்தில் களமிறங்கி 4 பவுண்டரி 3 சிக்ஸருடன் 37* (16) ரன்கள் விளாசியது சிஎஸ்கே ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக அமைந்தது.

குறிப்பாக அன்றிச் நோர்ட்ஜே வீசிய கடைசி ஓவரில் ஒற்றைக் கையில் சிக்ஸரை அடித்த அவர் ஒரே ஓவரில் 20 ரன்கள் விளாசி ரசிகர்களை குதூகலப்படுத்தினார். அந்த வகையில் 42 வயதானாலும் ஸ்டைல் மாறாது என்பதற்கு அடையாளமாக தோனி விளையாடினார் என்றே சொல்லலாம். இந்நிலையில் இப்போட்டியில் தோல்வியை சந்தித்தாலும் கடைசி நேரத்தில் அதிரடியாக விளையாடிய தோனி தங்களுடைய ரன்ரேட் மோசமாக சரியாமல் காப்பாற்றியதாக சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் பாராட்டியுள்ளார்.

- Advertisement -

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “அவருடைய ஆட்டம் அழகாக இருந்ததல்லவா? குறிப்பாக மிட் விக்கெட் மேலே ஒற்றைக் கையில் சிக்ஸர் அடித்தார். தொடர் துவங்குவதற்கு முன்பாகவே அவர் பயிற்சியில் அவர் அபாரமாக விளையாடினார். கடினமான அறுவை சிகிச்சையிலிருந்து மீண்டும் வந்துள்ள தோனி நன்றாக குணமடைந்து வருகிறார்”

இதையும் படிங்க: நீங்க பண்ணது தவறு.. ரிஷப் பண்டிற்கு 12 லட்சம் அபராதம் விதித்த ஐ.பி.எல் நிர்வாகம் – நடந்தது என்ன?

“ஆனால் அவருடைய பேட்டிங் சூப்பராக இருந்தது. இது போன்ற செயல்பாடு தோல்வியை சந்தித்த மோசமான நாளின் இறுதியில் உங்களுக்கு நேர்மறையான எண்ணங்களை கொடுக்கிறது. எனவே 20 ரன்கள் வித்தியாசத்தில் மட்டுமே தோற்ற நாங்கள் ரன்ரேட்டில் பெரிய இழப்பை சந்திக்கவில்லை என்பது தோனியும் அறிவார். அவர் விளையாடிய விதம் அற்புதமாக இருந்தது” என்று கூறினார்.

Advertisement