நீங்க பண்ணது தவறு.. ரிஷப் பண்டிற்கு 12 லட்சம் அபராதம் விதித்த ஐ.பி.எல் நிர்வாகம் – நடந்தது என்ன?

Rishabh-Pant
- Advertisement -

விசாகப்பட்டினம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளுக்கு இடையேயான நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 13-வது லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணியானது சி.எஸ்.கே அணியின் பந்துவீச்சை மிகச்சிறப்பாக எதிர்கொண்டு அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 191 ரன்கள் குவித்தது.

பின்னர் 192 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கு சென்னை அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது. அந்த கடினமான இலக்கினை துரத்திய சென்னை அணியானது 7 ரன்களுக்கே 2 விக்கெட்டுகளை இழக்க போட்டியின் ஆரம்பத்திலேயே சி.எஸ்.கே அணி சரிவை சந்தித்தது.\

- Advertisement -

பின்னர் ரஹானே மற்றும் டேரல் மிட்சல் ஆகியோர் சற்று நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தாலும் அவர்களுக்கு பின்னர் வந்த வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழக்க சென்னை அணி இலக்கை நோக்கி செல்வதில் சிக்கல் ஏற்பட்டது.

இறுதி கட்டத்தில் மகேந்திர சிங் தோனி 16 பந்துகளை சந்தித்து 4 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்கள் என 37 ரன்களை குவித்து இருந்தாலும் 20 ஓவர்களின் முடிவில் சென்னை அணியால் 6 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்களை மட்டுமே குவிக்க முடிந்தது. இதன் காரணமாக டெல்லி அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் இந்த போட்டியில் வெற்றி பெற்றது.

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டியின் போது டெல்லி அணியின் கேப்டனாக செயல்பட்ட ரிஷப் பண்டிற்கு போட்டி ஊதியத்தில் இருந்து 12 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளதாக ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி நேற்றைய போட்டியில் இரண்டாவதாக பந்துவீசிய டெல்லி அணியானது குறிப்பிட்ட நேரத்தில் பந்துவீசி முடிக்கவில்லை என்கிற காரணத்தினால் அவருக்கு இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : 280 டூ 16.67 ஸ்ட்ரைக் ரேட்.. சிஎஸ்கே தோல்விக்கு காரணமான ரச்சின்.. முரளி விஜய் முந்தி 13 வருட மோசமான சாதனை

இதுவரை மூன்று போட்டிகளில் விளையாடியுள்ள டெல்லி அணி முதல் முறையாக குறிப்பிட்ட நேரத்தில் பந்துவீசி முடிக்கவில்லை என்பதனாலே இந்த போட்டியில் ரிஷப் பண்டிற்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதோடு கடைசி இரண்டு ஓவர்களில் டெல்லி அணியின் 4 வீரர்கள் மட்டுமே வெளிவட்டத்திற்குள் பீல்டிங் செய்ய அனுமதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement