- Advertisement -
ஐ.பி.எல்

தேவாலட் ப்ரேவிஸ் சிஎஸ்கே’வுக்கு அறிமுகம் ஆகிறாரா? வெற்றியை பறிக்கும் 75 ரன்ஸ் பற்றியும்.. பிளெமிங் பேட்டி

ஐபிஎல் 2025 தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் ஏப்ரல் 25ஆம் தேதி ஹைதெராபாத் அணியை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் எதிர்கொள்கிறது. 5 கோப்பைகளை வென்று வெற்றிகரமான அணியாக திகழும் சென்னை இந்த வருடம் வழக்கத்துக்கு மாறாக மோசமாக விளையாடி வருகிறது. இதுவரை 8 போட்டிகளில் 2 வெற்றி 6 தோல்விகளை சந்தித்துள்ள சிஎஸ்கே அணி புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் திண்டாடி வருகிறது.

எனவே இங்கிருந்து பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற அடுத்த 6 போட்டிகளிலும் வென்றாக வேண்டிய கட்டாயத்திற்குள் சென்னை தள்ளப்பட்டுள்ளது. இருப்பினும் இதுவரை வெளிப்படுத்திய ஆட்டத்தை வைத்து இங்கிருந்து சென்னை பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிப் பெறாது என்பதை பலரது கண்டிப்பாக இருக்கிறது. ஒருவேளை அந்த கணிப்பை பொய்யாக்க வேண்டுமெனில் சிஎஸ்கே அதிரடியாக பேட்டிங் செய்வது முக்கியமாகிறது.

- Advertisement -

ப்ரேவிஸ் வருவாரா:

குறிப்பாக மிடில் ஆர்டரில் ராகுல் திரிபாதி, விஜய் சங்கர், தீபக் ஹூடா ஆகியோர் மோசமாக விளையாடுகின்றனர். எனவே அவருக்கு பதிலாக புதிதாக வாங்கப்பட்டுள்ள தேவாலட் ப்ரேவிஸ் சிஎஸ்கே அணிக்கு விளையாட வேண்டும் என்பது ரசிகர்களின் விருப்பமாக இருக்கிறது. இந்நிலையில் ஹைதராபாத்துக்கு எதிராக தேவைப்பட்டால் ப்ரேவிஸை அறிமுகமாகக் களமிறக்குவோம் என்று பயிற்சியாளர் ஸ்டீபன் பிளம்மிங் தெரிவித்துள்ளார்.

மேலும் 20 – 30 என்ற ரன்களை அடிக்கும் தங்களுடைய பேட்ஸ்மேன்களில் யாரேனும் ஒருவர் தொடர்ச்சியாக 50 – 75 ரன்கள் அடிக்கத் தவறுவதே தோல்விக்கு காரணமாவதாகவும் பிளம்மிங் வேதனை தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமானது. “ப்ரேவிஸ் நாங்கள் பார்க்கக்கூடிய ஒரு ஆப்ஷன். இந்தத் தொடர் முழுவதும் எங்களுடன் எங்களுக்காக விளையாடக் காத்திருக்கும் மற்ற வீரர்களும் இருக்கிறார்கள்”

- Advertisement -

பிளெமிங் வேதனை:

“ப்ரேவிஸ் பாதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட நல்ல தேர்வு. எனவே நாங்கள் அணிக்கு எது சரியாக இருக்கும் என்பதை சிந்தித்து செயல்பட வேண்டும். ப்ரேவிஸால் என்ன தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்பதைப் பார்க்க வேண்டும். அது விவாதத்தின் ஒரு அங்கம். எங்களுடைய அணியின் மிடில் ஆர்டர் பேட்டிங் துறையில் தன்னம்பிக்கை குறைவாக இருக்கிறது”

இதையும் படிங்க: சிஎஸ்கே பிளே ஆஃப் போக ஆர்சிபி ப்ளூபிரிண்ட் வழி போதும்.. இல்லனா 2021, 2023 மாதிரி மாத்துவோம்.. பிளெமிங் பேட்டி

“ஐபிஎல் கடினமானது. அதில் எங்களுடைய வீரர்கள் 20 – 30 ரன்கள் அடித்து நல்ல துவக்கத்தைப் பெறுகின்றனர். ஆனால் அதை எங்களால் பெரிய ஸ்கோராக மாற்ற முடியவில்லை. குறிப்பாக யாரேனும் ஒருவர் 75+ ரன்கள் இன்னிங்ஸ் அடித்தால் அது அணியில் உள்ள மற்ற வீரர்களுக்கு உதவும். ஆனால் இதுவரை யாரும் அப்படி விளையாடவில்லை. அந்த வகையில் எங்களுடைய பேட்டிங் ஆர்டர் கிளிக்காகவில்லை. இந்த வருடம் கௌரவ பலகையில் எழுதும் அளவுக்கு எங்களுடைய பேட்டிங் வரிசையில் ஒரு நல்ல செயல்பாடு கூட இல்லை” என்று கூறினார்.

- Advertisement -