சிஎஸ்கே பிளே ஆஃப் போக ஆர்சிபி ப்ளூபிரிண்ட் வழி போதும்.. இல்லனா 2021, 2023 மாதிரி மாத்துவோம்.. பிளெமிங் பேட்டி

Stephen Fleming
- Advertisement -

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் திண்டாடி வருகிறது. இந்த வருடம் முதல் போட்டியில் வென்ற சென்னை அடுத்த 5 போட்டிகளில் வரலாற்றிலேயே முதல் முறையாக 5 தொடர் தோல்விகளை சந்தித்தது. அதன் பின் தோனி தலைமையில் லக்னோவுக்கு எதிராக வென்ற சென்னை தொடர்ந்து அசத்தும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

ஆனால் மீண்டும் மும்பைக்கு எதிராக தோற்ற சென்னை பிளே ஆஃ ப் சுற்றுக்கு செல்ல எஞ்சியுள்ள 6 போட்டிகளிலும் வென்றாக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இருப்பினும் பவர்பிளே ஓவர்களில் அதிரடியாக விளையாடத் தடுமாறும் சிஎஸ்கே அணிக்கு மிடில் ஓவர்களில் யாருமே வேகமாக ரன்களை குவிப்பதில்லை. அதே போல தோனி, ஜடேஜா போன்றவர்களாலும் பெரும்பாலான போட்டிகளில் வெற்றிகரமாக ஃபினிசிங் செய்ய முடிவதில்லை.

- Advertisement -

ஆர்சிபி வழி:

அதனால் இங்கிருந்து சென்னை பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிப் பெறாது என்பதே பலரது கண்டிப்பாக இருக்கிறது. இந்நிலையில் 2024இல் முதல் 7இல் 1 வெற்றி மட்டுமே பெற்ற பெங்களூரு பின்னர் 6 தொடர்ச்சியான வெற்றிகளைப் பெற்று பிளே ஆஃப் சென்றதாக சிஎஸ்கே பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் கூறியுள்ளார். அந்த வழியில் இங்கிருந்து சென்னை பிளே ஆஃப் செல்லும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இல்லையெனில் 2020, 2022இல் தோற்ற பின் 2021, 2023இல் கோப்பையை வென்றது போல 2026இல் கோப்பை வெல்வதற்குத் தேவையான அணியை உருவாக்கத் துவங்குவோம் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “நாங்கள் 6க்கு 6 வெற்றிகளைப் பெறுவோம் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறோம். சிலர் அதை சந்தேகப்பட்டாலும் கடந்த வருடம் ஆர்சிபி அதற்கான ப்ளூ பிரிண்ட்டை செட் செய்துள்ளது”

- Advertisement -

இல்லனா புதிய சிஎஸ்கே:

“ஒருவேளை அது நடைபெறவில்லையெனில் இந்த மோசமான சீசனை நாங்கள் அதிகம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதை அறிந்து வைத்துள்ளோம். எனவே அடுத்த சில வாரங்களில் எந்தப் போட்டியும் எங்களுக்கு பயனற்றதாக இருக்காது. எங்கள் வீரர்கள் அனைவரும் அதை அறிவார்கள். இது போன்ற சூழ்நிலையில் கடந்தக் காலங்களில் நாங்கள் செய்த உழைப்பு அதற்கடுத்த வருடம் வெற்றியைக் கொடுத்துள்ளது”

இதையும் படிங்க: என்னங்க பெரிய கிரிஸ் கெயில்லு.. யாஷஸ்வி ஜெய்ஸ்வால் மாதிரி வருமா? – முதல் பந்தில் செய்த சம்பவம்

“எனவே தற்சமயத்தில் என்ன செய்ய வேண்டும் எப்படி விளையாட வேண்டும் என்பதை நாங்கள் அறிந்திருக்க வேண்டும். நீங்கள் இளம் வீரர்களை கழிக்கவில்லை. கடந்தப் போட்டியில் ஆயுஷ் மாத்ரே அசத்தினார். அவரால் எங்களுக்கு வருங்காலத்தில் ஒரு கண் நன்றாக இருக்கிறது. ஆனால் அதற்காக நாங்கள் மொத்தமாக இளம் வீரர்களை பயன்படுத்த மாட்டோம். அதே சமயம் மூத்த வீரர்களை மட்டும் சார்ந்திருக்க மாட்டோம். சரியான திறமையும் பொறுமையும் கொண்ட வீரர்களை கலவையாக உபயோகிப்போம்” என்று கூறினார்

Advertisement