ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையே நேற்று பெங்களூரு மைதானத்தில் நடைபெற்ற நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 42-வது லீக் ஆட்டத்தில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது 11 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணியை வீழ்த்தி இந்த தொடரில் தங்களது ஆறாவது வெற்றியை பதிவுசெய்து புள்ளி பட்டியலில் மூன்றாவது இடத்திற்கு முன்னேறியது.
யாஷஸ்வி ஜெய்ஸ்வால் நிகழ்த்திய சாதனை :
அதன்படி நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்ய முதலில் விளையாடிய பெங்களூரு அணியானது ராஜஸ்தான் அணியின் பந்துவீச்சை மிகச் சிறப்பாக எதிர்கொண்டு நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 205 ரன்கள் குவித்தது. பெங்களூரு அணி சார்பாக அதிகபட்சமாக விராட் கோலி 70 ரன்களையும், தேவ்தத் படிக்கல் 50 ரன்களையும் குவித்து அசத்தினர்.
பின்னர் 206 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது துவக்கத்தில் இருந்தே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தாலும் இறுதி நேரத்தில் பெங்களூரு அணியின் சிறப்பான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 194 ரன்கள் மட்டுமே குவித்தது.
இதன் காரணமாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் ராஜஸ்தான் அணி தோல்வியை சந்தித்து இருந்தாலும் அந்த அணியின் நட்சத்திர துவக்க ஆட்டக்காரரான யாஷஸ்வி ஜெய்ஸ்வால் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 19 பந்துகளில் 7 பவுண்டரி மற்றும் 3 சிக்சர் என 49 ரன்கள் குவித்து அசத்தினார்.
அதிலும் குறிப்பாக இந்த போட்டியில் 206 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணி களமிறங்கிய போது முதல் பந்திலேயே ஜெய்ஸ்வால் தனது சாதனையை மீண்டும் தானே முறியடித்து அசத்தியுள்ளார். அந்த வகையில் இந்த சேசிங்கின் போது புவனேஸ்வர் குமார் வீசிய முதல் பந்தையே சிக்ஸருக்கு விரட்டி ஜெய்ஸ்வால் மிரட்டினார். ஐபிஎல் தொடரில் இதோடு சேர்த்து மூன்றாவது முறையாக போட்டியின் முதல் பந்தை சிக்ஸராக மாற்றியுள்ளார்.
இதையும் படிங்க : இந்தமுறை எல்லா ஏரியாவுகம் கவரா இருக்குது.. அதுதான் எங்களோட ஸ்ட்ரென்த் – ஆட்டநாயகன் ஹேசல்வுட் பேட்டி
இந்த பட்டியலில் ஏற்கனவே நமன் ஓஜா, மாயங்க் அகர்வால், சுனில் நரேன், விராட் கோலி, ராபின் உத்தப்பா, பிலிப் சால்ட், பிரியான்ஷ் ஆர்யா ஆகியோர் இருந்தாலும் அவர்கள் அனைவருமே ஒருமுறை மட்டுமே முதல் பந்தில் சிக்ஸர் அடித்துள்ளனர். ஆனால் ஜெய்ஸ்வால் தாற்போது மூன்றாவது முறையாக முதல் பந்திலேயே சிக்சர் அடித்து தான் ஒரு மிகச் சிறப்பான அதிரடி துவக்க வீரர் என்பதை நிரூபித்துள்ளது குறிப்பிடத்தக்கது.



