மொத்தமாக நிறுத்தப்பட்ட மோக்கா விளம்பரம், இந்தியா – பாக் போட்டிக்கான புதிய விளம்பரத்துக்கு வரவேற்பு

Star Sports AD
- Advertisement -

ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் 2022 டி20 உலகக்கோப்பை வரும் அக்டோபர் 16ஆம் தேதியன்று துவங்குகிறது. இந்த தொடரில் கோப்பையை வெல்லப் போவது யார் என்ற எதிர்பார்ப்புக்கு நிகராக பரம எதிரிகளான இந்தியா – பாகிஸ்தான் மோதும் போட்டிக்கு எதிர்பார்ப்பு நிலவுகிறது. ஏனெனில் எல்லைப் பிரச்சினை காரணமாக கடந்த 10 வருடங்களாக இருதரப்பு தொடர்களை தவிர்த்துள்ள இவ்விரு நாடுகளும் இது போன்ற உலக கோப்பை மற்றும் ஆசிய கோப்பையில் மட்டுமே மோதுகின்றன.

அதனால் இவ்விரு அணிகள் மோதும் போட்டிக்கு மவுசு முன்பை விட பன்மடங்கு எகிறியுள்ள நிலையில் கடந்த 1992 முதல் உலக கோப்பையில் இவ்விரு அணிகள் மோதிய அத்தனை போட்டிகளிலும் பாகிஸ்தானை தோற்கடித்து தொடர்ச்சியாக வென்ற இந்திய வீரர் நடைபோட்டது. அதனால் இந்தியா – பாகிஸ்தான் மோதும் உலகக் கோப்பை போட்டி என்றாலே அதில் இந்தியா தான் வெல்லும் என்ற கருத்து அனைவரிடமும் ஏற்பட்டது. அதற்கேற்றார்போல் 2015, 2019 ஆகிய உலக கோப்பைகளில் அபாரமாக செயல்பட்ட இந்தியா ஒரு தலைப்பட்சமாக பாகிஸ்தானை தோற்கடித்தது.

- Advertisement -

மோக்கா மோக்கா:
அதனால் உலகக் கோப்பை என்றாலே நிச்சயமாக பாகிஸ்தானை தோற்கடித்து விடுவோம் என்ற 100% நம்பிக்கை முன்னாள் இந்திய வீரர்களிடமும் ரசிகர்களிடமும் ஏற்பட்டது. அதனால் இந்தியர்களிடம் லேசாக ஏற்பட்ட கர்வ தீயில் அதை ஒளிபரப்பும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி நிறுவனம் நிறையவே எண்ணையை ஊற்றியது. அதாவது இந்தியாவை பாகிஸ்தான் தோற்கடிக்கும் என்ற எண்ணத்துடன் அதை கொண்டாடுவதற்காக பட்டாசுகளை தயார் செய்து கொண்டு வரும் பாகிஸ்தான் ரசிகர் இறுதியில் தோற்கும் போது ஏமாற்றத்துடன் திரும்புவதை போன்ற விளம்பரத்தை அந்நிறுவனம் செய்தது.

அதிலும் 2011 உலகக் கோப்பை சமயங்களில் இளமையாக இருந்த அவர் சமீப காலங்களில் வயதானவராக தோற்றமளிக்க வைத்து “மோக்கா மோக்கா” என்ற பாடலுடன் பாகிஸ்தானை உதாசீனப்படுத்தும் வகையில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் விளம்பரம் செய்தது உலக அளவில் பிரபலமானது. ஆனால் விளையாட்டாக இருந்தால் என்றோ ஒருநாள் தோற்றாக வேண்டும் என்ற விதிப்படி கடந்த வருடம் துபாயில் நடைபெற்ற உலக கோப்பையில் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தானிடம் விராட் கோலி தலைமையிலான இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்தில் தோற்று முதல் முறையாக மண்ணைக் கவ்வியது.

- Advertisement -

அப்போது தலை குனிந்தாலும் நம்மை தோற்கடிக்க எதிரிக்கு 30 வருடங்கள் தேவைப்பட்டதை நினைத்து கர்வம் தணிந்து பெருமைப்பட்ட இந்திய ரசிகர்கள் “மோக்கா மோக்கா” விளம்பரத்தைப் போட்டு கர்வத்தை ஏற்படுத்திய ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியை சமூக வலை தளங்களில் கடுமையாக விமர்சித்தனர். அதனால் வேறு வழியின்றி சமீபத்திய ஆசிய கோப்பையில் இந்தியா – பாகிஸ்தான் மோதிய போது அந்த விளம்பரங்களை தவிர்த்த ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தற்போது உலக கோப்பைக்காக இரு தரப்புக்கும் சரிசமமான வகையில் புதிய விளம்பரத்தை உருவாக்கியுள்ளது.

அதிலும் கடந்த வருடம் முதல் முறையாக தோற்ற போது இந்திய ரசிகர்கள் கொடுத்த ரியாக்சனை தற்போது தான் உண்மையாகவே அந்நிறுவனம் உருவாக்கியுள்ளது. அதாவது “தர்தனாப்புர்” எனும் ஊரைச் சேர்ந்த இளம் இந்திய ரசிகர் தன்னுடைய மல்யுத்த குடும்பத்தில் இருக்கும் உறவினர் இளைஞர்கள் சூடான அடுப்பில் கையைவிட்டு தின்பண்டங்களை அள்ளிப் போடும் போதும், கார் கதவை மூடும் போது சந்திக்கும் காயத்தை விடவும், பைக்குகளை அசால்டாக தூக்கும்போது கூட சந்திக்காத வலியை 2021 டி20 உலக கோப்பையில் முதல் முறையாக பாகிஸ்தானிடம் தோற்ற போது சந்தித்த அதிகப்படியான வலியால் கண்ணீர் விட்டு அழுதார்கள் என்பதால் இம்முறை எப்படியாவது வென்று விடுங்கள் என ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணிக்கு கோரிக்கை வைக்கும் வகையில் புதிய விளம்பரம் உருவாக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

நீண்ட நாட்களுக்குப்பின் எதிரணியையும் மதித்து அவர்களை குறைத்து மதிப்பிடாமல் கடைசி மோதலில் கிடைத்த முடிவையும் அதற்கு இந்தியா கொடுத்த உண்மையான ரியாக்சனையும் வைத்து இரு தரப்புக்கும் சமமாக அதேசமயம் நிதர்சனத்தை விளக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த விளம்பரம் :

இதையும் படிங்க : அந்த இந்திய வீரருக்கு மாற்றுவீரர் இந்த உலகத்துலயே இல்ல. கண்டிப்பா இல்ல – ஷேன் வாட்சன் கருத்து

“மோக்கா மோக்கா” விளம்பரத்தை விட தார்மீக அடிப்படையில் நேர்மையாக உள்ளதென்று நிறைய இந்திய ரசிகர்கள் வரவேற்பு தெரிவிக்கின்றனர். இப்படி ஆரம்பத்திலேயே ஆட்டம் போடாமல் களத்தில் திறமையை வெளிப்படுத்தி வெற்றி பெறுவதே எப்போதும் நிலைக்கும் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

Advertisement