அந்த இந்திய வீரருக்கு மாற்றுவீரர் இந்த உலகத்துலயே இல்ல. கண்டிப்பா இல்ல – ஷேன் வாட்சன் கருத்து

Watson
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் இன்னும் சில நாட்களில் டி20 உலக கோப்பை தொடரானது துவங்க உள்ளது. ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் இம்மாதம் 16-ஆம் தேதி துவங்கும் இந்த தொடரானது நவம்பர் 13-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான அனைத்து அணிகளும் தற்போது தயாராகி வரும் வேளையில் இந்திய அணியும் ரோகித் சர்மா தலைமையில் முழுவீச்சில் தயாராகி வருகிறது.

IND Japrit Bumrah

- Advertisement -

இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் இந்திய அணி அறிவிக்கப்பட்டது. அதையடுத்து இந்த இந்திய அணி உலக கோப்பையை வெல்லுமா? வெல்லாதா ?என்ற பெரிய பேச்சையே சமூகவலைதளத்தை ஆக்கிரமித்து வருகிறது. இந்நிலையில் இந்திய அணியின் முக்கிய வீரராக பார்க்கப்படும் பும்ரா எதிர்வரும் இந்த டி20 உலககோப்பை தொடரில் இருந்து முதுகு வலி காரணமாக விலக இருக்கிறார் என்ற செய்தி வெளியானது.

அதனைத்தொடர்ந்து இந்த உலகக்கோப்பை தொடரில் இருந்து பும்ரா வெளியேறினால் அது இந்திய அணிக்கு ஏற்படவுள்ள பெரிய இழப்பாக பார்க்கப்படுகிறது. அதோடு பும்ராவின் காயம் குணமடைய நான்கு முதல் ஐந்து மாதங்கள் தேவை என்பதால் அவர் இந்திய அணியில் மீண்டும் இணைய நீண்ட மாதங்கள் ஆகும் என்று தெரிகிறது.

Bumrah 1

இந்நிலையில் பும்ராவின் இந்த விலகல் இந்திய அணிக்கு மிகப்பெரிய இழப்பு என்று ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டனான ஷேன் வாட்சன் தனது கருத்தினை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் :

- Advertisement -

பும்ராவிற்கு மாற்று வீரர் உலகில் யாரும் உலகில் இல்லை. டி20 உலக கோப்பையில் பும்ரா இல்லை என்றால் அது இந்திய அணிக்கு மிகப்பெரிய இழப்புதான். நம்ப முடியாத திறமை படைத்த பும்ரா சிறந்த பந்துவீச்சை வழங்கக்கூடியவர். அவர் இல்லாமல் இந்திய அணி பெரும் சவாலை சந்திக்கும் என கூறியுள்ளார்.

இதையும் படிங்க : ப்ளேயிங் லெவனில் தேவையற்ற அடிக்கடி மாற்றங்கள் ஏன் – அனைவரின் கேள்விக்கும் ராகுல் டிராவிட் அளித்த பதில்

இந்திய அணியானது தற்போது தங்களது சொந்த மண்ணில் தென்னாப்பிரிக்க அணியை எதிர்த்து 3 போட்டிகள் கொண்ட டி20 விளையாடி வருகிறது. இந்த தொடரில் இருந்தும் வெளியேறிய பும்ரா தற்போது பெங்களுருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் சிகிச்சை எடுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement