தோனியும் ஒரு தமிழர் தான். பாராட்டு விழாவில் விளக்கத்துடன் கலக்கலாக பேசிய – முதல்வர் ஸ்டாலின்

Stalin-2
- Advertisement -

ஐபிஎல் வரலாற்றில் மிகப்பெரிய ஜாம்பவான் அணியாக பார்க்கப்படும் சென்னை சிஎஸ்கே அணியானது கடந்த 2020-ஆம் ஆண்டு பிளே ஆப் சுற்றுக்கு கூட தகுதி பெறாமல் முதல் அணியாக வெளியேறியது. அதன் பின்பு அடுத்த ஆண்டு மீண்டும் சென்னை அணி பலம் வாய்ந்த அணியாக திரும்பும் என்று கூறியது மட்டுமில்லாமல் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரை கைப்பற்றும் கேப்டன் தல தோனி அசத்தியிருந்தார். ஏற்கனவே 3 முறை கோப்பையை கைப்பற்றியிருந்த சென்னை அணியானது தற்போது நடப்பு சாம்பியனாக நான்காவது கோப்பையையும் கைப்பற்றி வெற்றி நடைபோட்டு வருகிறது.

csk 1

- Advertisement -

இந்நிலையில் சென்னை சிஎஸ்கே அணிக்கு முதல்வர் ஸ்டாலின் தலைமையில் பாராட்டு விழா நடைபெறும் என்று ஏற்கனவே சென்னை அணியின் உரிமையாளர் ஸ்ரீனிவாசன் அறிவித்திருந்தார். ஆனால் ஐபிஎல் முடிந்த சில நாட்களிலேயே இந்திய அணியின் ஆலோசகராக உலக கோப்பை தொடரில் தோனி பணியாற்றியதால் பாராட்டு விழா நடைபெற சற்று தாமதமானது.

தற்போது மீண்டும் இந்தியா திரும்பியுள்ள தோனியை சென்னைக்கு அழைத்து இன்று சிஎஸ்கே அணியின் பாராட்டு விழாவினை வெற்றிகரமாக நடத்தியுள்ளனர். அதில் தோனி ஐபிஎல் கோப்பையை முதல்வர் ஸ்டாலினிடம் வழங்கியது மட்டுமின்றி சிஎஸ்கே அணியின் வீரர்கள் கையொப்பமிட்ட ஜெர்சி ஒன்றினையும் ஸ்டாலினுக்கு பரிசளித்தார். அதன் பின்பு சென்னை அணி குறித்த பல்வேறு விடயங்களையும் தோனி பகிர்ந்துகொண்டார்.

Stalin

அதனைத் தொடர்ந்து இந்த பாராட்டு விழாவில் தோனியை பற்றி பேசிய முதல்வர் ஸ்டாலின் கூறுகையில் : எனது குடும்பத்தில் உள்ள அனைவரும் சென்னை ரசிகர்கள் தான். அதிலும் குறிப்பாக எனது பேரப்பிள்ளைகள் எனது குடும்பம் என எல்லோரும் தோனியின் ரசிகர்கள் தான். சென்னை என்றால் எப்போதும் சூப்பர் தான். அதை மீண்டும் ஒருமுறை நம் அணி நிரூபித்து காட்டியுள்ளது.

- Advertisement -

இதையும் படிங்க : எனது கடைசி போட்டி சென்னையில் தான். அது எப்போது ? பாராட்டு விழாவில் பேசிய – தல தோனி

தோனி ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் என்றாலும் தமிழகத்தின் செல்லப்பிள்ளை ஆகிவிட்டார். நாம் அனைவரும் பச்சை தமிழர்கள் என்றால் தோனி மஞ்சள் தமிழர் என ஸ்டாலின் சிறப்பாகப் பேசினார். இந்த பாராட்டு விழாவின்போது தோனி தனது ஓய்வு குறித்து முக்கிய அறிவிப்பையும் வெளியிட்டிருந்தார். அதன்படி இந்த ஆண்டோ அல்லது ஐந்து ஆண்டுகளுக்குளோ தான் ஓய்வு பெற்றாலும் கடைசி போட்டி சென்னை மைதானத்தில்தான் என்றும் அவர் உறுதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement