எனது கடைசி போட்டி சென்னையில் தான். அது எப்போது ? பாராட்டு விழாவில் பேசிய – தல தோனி

Stalin
- Advertisement -

இந்தியாவில் துவங்கிய 2021 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரானது இங்கு பரவிய கொரோனா வைரஸ் காரணமாக இரண்டாம்பாதி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது. இந்த தொடரில் சென்னை அணி 4-வது முறையாக கோப்பையை கைப்பற்றி வரலாறு படைத்த நிலையில் சென்னை அணிக்கு முதல்வர் ஸ்டாலின் தலைமையில் பாராட்டு விழா நடைபெறும் என ஏற்கனவே சென்னை அணியின் உரிமையாளர் ஸ்ரீனிவாசன் அறிவித்திருந்தார். இந்நிலையில் தற்போது சென்னை கலைவாணர் அரங்கத்தில் சென்னை அணிக்கு பாராட்டு விழா முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்று வருகிறது.

csk 1

- Advertisement -

இந்த நிகழ்ச்சியில் பேசிய சென்னை அணியின் கேப்டன் தோனி சென்னை அணிக்கும் அவருக்கும் இடையேயான உறவு குறித்து பல்வேறு விடயங்களை பகிர்ந்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : சென்னைக்கும் எனக்கும் மிக நீண்ட பந்தம் இருக்கிறது. ஏனெனில் ஐபிஎல் துவங்கும் முன்னரே நான் என்னுடைய முதல் டெஸ்ட் போட்டியை சென்னையில்தான் விளையாடினேன். அப்போதிலிருந்தே என் வாழ்க்கையில் சென்னை உடனான உறவு துவங்கியது.

2008ஆம் ஆண்டு சென்னை அணி என்னை தேர்வு செய்யும் என்று நான் ஒருபோதும் எண்ணியதில்லை. நான் பிறந்தது ராஞ்சியில், வேலை செய்தது கொல்கத்தாவில் ஆனால் என்னை சென்னை தேர்ந்தெடுத்தது மகிழ்ச்சி. சென்னை எனக்கு நிறைய விஷயங்களை கற்றுக் கொடுத்துள்ளது. சேப்பாக்கத்தில் நாங்கள் விளையாடிய ஒவ்வொரு போட்டியிலும் எங்களுக்கு கிடைத்த ரசிகர்களின் ஆதரவு அளப்பரியது.

stalin 1

கிரிக்கெட்டின் மீது தமிழ்நாட்டு மக்கள் வைத்திருக்கும் புரிதல் மற்றும் அன்பு எங்களை எப்போதும் உற்சாகப் படுத்துகிறது என்று கூறினார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் தனது ஓய்வு குறித்து முக்கிய தகவலை வெளியிட்டார். அதன்படி அவர் கூறுகையில் : நான் கடைசியாக ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். கிரிக்கெட்டை எப்போதுமே திட்டமிட்டு விளையாடுவேன். நான் கடைசியாக நம் நாட்டில் விளையாடிய சர்வதேச ஒருநாள் போட்டி எனது சொந்த ஊரான ராஞ்சியில் தான்.

- Advertisement -

இதையும் படிங்க : இவரை பாத்தா முதல் போட்டி விளையாடுற மாதிரியே தெரியல. அவ்ளோ சூப்பரா ஆடுறாரு – கம்பீர் புகழ்ச்சி

அதே போல எனது கடைசி டி20 போட்டி சென்னையில் தான் இருக்கும். அது அடுத்த ஆண்டாகவோ அல்லது அடுத்த 5 ஆண்டுகளுக்குள்ளோ இருக்கலாம். ஆனால் அது எனக்கு தெரியாது என்றும் தோனி கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement