இவரை பாத்தா முதல் போட்டி விளையாடுற மாதிரியே தெரியல. அவ்ளோ சூப்பரா ஆடுறாரு – கம்பீர் புகழ்ச்சி

gambhir
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரானது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி வெற்றி பெற்ற நிலையில் நேற்று ராஞ்சி மைதானத்தில் நடைபெற்ற 2வது டி20 போட்டியிலும் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

pant

- Advertisement -

இந்த போட்டியில் முதலில் விளையாடிய நியூசிலாந்து அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 153 ரன்கள் குவிக்க அடுத்ததாக 154 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணியானது 17.2 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 155 ரன்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் அறிமுக வீரராக களமிறங்கிய ஹர்ஷல் படேல் 4 ஓவர்கள் பந்துவீசி 25 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

இதன் காரணமாக அவருக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது. இந்நிலையில் அவரது இந்த அறிமுக ஆட்டம் குறித்து பலரும் தங்களது பாராட்டுக்களை தெரிவித்து வரும் நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீரும் அவரது சிறப்பான பவுலிங் குறித்த தனது கருத்தினை வெளிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : ஹர்ஷல் படேல் பவுலிங் நம்ப முடியாத வகையில் சிறப்பாக இருந்தது.

Harshal-2

அவர் சர்வதேச கிரிக்கெட்டில் முதல் போட்டியில் விளையாடியது போன்று எனக்கு தெரியவில்லை கடந்த 8 முதல் 10 ஆண்டுகள் வரை முதல் தர கிரிக்கெட் மற்றும் ஐபிஎல் தொடரில் விளையாடிய அவர் தனது அனுபவத்தை அப்படியே முதல் போட்டியாக இருந்தாலும் சிறப்பாக செயல்படுத்தி உள்ளார். பல போட்டிகளில் விளையாடி அனுபவம் வாய்ந்த ஒரு வீரரைப் போன்று அவர் தனது முதல் போட்டியிலேயே முதிர்ச்சியை காண்பித்துள்ளார் .
இதையும் படிங்க : ஐ.பி.எல் மெகா ஏலத்தில் இந்திய வீரரான இவர் 20 கோடிக்கு ஏலம் போவார் – ஆகாஷ் சோப்ரா கருத்து

அவரிடமிருந்து ஹை குவாலிட்டி கிரிக்கெட் வெளிப்பட்டுள்ளது. நிச்சயம் அவர் வெற்றிகரமான பந்துவீச்சாளராக திகழ்வார். இந்த மைதானத்தில் இவரது பந்துவீச்சு நிச்சயம் அவருக்கு உள்ள திறனை வெளிக்காட்டி உள்ளது. அவர் அடுத்தடுத்து பெரிய இடங்களுக்கு செல்வார் என கம்பீர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement