IND vs RSA : டாஸ் போடும்போதே இப்படி ஒரு சம்பவமா? மைதானத்தில் எழுந்த சிரிப்பலை – வீடியோ இதோ

INDvsRSA
- Advertisement -

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையே லக்னோவில் நடைபெற்று முடிந்த முதலாவது ஆட்டத்தில் ஒன்பது ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்த இந்திய அணியானது இந்த தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் பின்தங்கியுள்ளது.

இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது கிரிக்கெட் போட்டி இன்று மதியம் ராஞ்சியில் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணியானது முதலில் பேட்டிங் செய்து முடித்துள்ளது. அதன்படி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 278 ரன்கள் குவித்தது.

- Advertisement -

தென்னாப்பிரிக்க அணி சார்பாக அதிகபட்சமாக எய்டன் மார்க்ரம் 79 ரன்களையும், ரீசா ஹென்ட்ரிக்ஸ் 74 ரன்களையும் குவித்து அசத்தினர். பின்னர் 279 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தற்போது இந்திய அணியானது சேசிங் செய்து வருகிறது.

இந்நிலையில் இந்த இரண்டாவது போட்டியின் போது டாஸ் போட இரண்டு அணிகளை சேர்ந்த கேப்டன்களும் வந்து நின்ற பின் நடைபெற்ற ஒரு சம்பவம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் பிசிசிஐ-யும் அந்த சம்பவத்தை வீடியோவாக தங்களது அதிகாரபூர்வ டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. அதன்படி இரண்டு அணியின் கேப்டன்கள் மற்றும் போட்டி நடுவர் ஸ்ரீநாத் என அனைவருமே டாஸ் போடுவதற்கு மைதானத்தின் மத்தியில் வந்து நின்றனர்.

- Advertisement -

அப்போது வர்ணனையாளர் சஞ்சய் மஞ்ரேக்கர் சில நொடிகளில் டாஸ் போடுவார்கள் என்று கூறிய வேளையில் இரு அணியின் கேப்டன்களுமே அமைதியாக நின்று கொண்டிருந்தனர். பின்னர் தான் போட்டியின் நடுவரான ஸ்ரீநாத் டாசிற்கான காயினை கொடுக்கவில்லை என்பதை உணர்ந்து அதன் பின்னர் சிரித்தவாறு தனது பாக்கெட்டில் இருந்து காயினை எடுத்து தவான் இடம் கொடுத்தார்.

இதையும் படிங்க : டி20 உ.கோ விளையாடதது ஏமாற்றமே, அதைவிட என்னுடைய அடுத்த டார்கெட் அதுதான் – இந்திய வீரர் சபதம்

இந்த சம்பவத்தை கண்ட மைதானத்தில் இருந்த ரசிகர்கள் பலரும் சிரிக்கத் துவங்கினர். இந்த கலகலப்பான சம்பவத்தின் வீடியோவானது தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement