டி20 உ.கோ விளையாடதது ஏமாற்றமே, அதைவிட என்னுடைய அடுத்த டார்கெட் அதுதான் – இந்திய வீரர் சபதம்

Shardhul Thakur India Dhawan Shreyas Iyer
- Advertisement -

உலகப் புகழ்பெற்ற ஐசிசி டி20 உலகக் கோப்பை 2022 கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் 16ஆம் தேதி முதல் ஆஸ்திரேலியாவில் கோலாகலமாக நடைபெறுகிறது. இத்தொடரில் 2007க்குப்பின் 2வது முறையாக கோப்பையை வெல்லும் லட்சியத்துடன் ரோகித் சர்மா தலைமையில் ஆஸ்திரேலியா பயணித்துள்ள இந்தியா தீவிர வலைபயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. இந்த அணியில் ரவீந்திர ஜடேஜா மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் காயத்தால் வெளியேறியுள்ளது பெரிய பின்னடைவாக பார்க்கப்படும் நிலையில் சஞ்சு சாம்சன் போன்ற சில வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்காதது அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்தியாவுக்காக உலகக் கோப்பையில் விளையாட வேண்டும் என்ற லட்சிய கனவுடன் இருக்கும் பெரும்பாலான வீரர்களுக்கு இத்தொடருக்கான 15 பேர் இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காதது ஏமாற்றமாகவே அமைந்துள்ளது.

Thakur

- Advertisement -

அந்த வகையில் இந்த டி20 உலக கோப்பையில் தமக்கு வாய்ப்பு கிடைக்காதது மிகப் பெரிய ஏமாற்றத்தை கொடுத்துள்ளதாக பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் ஷர்துல் தாகூர் சோகத்தை வெளிப்படுத்தியுள்ளார். மும்பையைச் சேர்ந்த இவர் கடந்த 2012 முதல் உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடி 2017இல் அறிமுகமானாலும் 2018ஆம் ஆண்டு எம்எஸ் தோனி தலைமையிலான சென்னை அணியில் சிறப்பான செயல்பாடுகளை வெளிப்படுத்தியதால் டெஸ்ட் மற்றும் டி20 கிரிக்கெட்டில் அறிமுகமாகி நிலையான வாய்ப்புகளை பெற்றார்.

அடுத்த டார்கெட்:
ஆரம்பத்தில் தடுமாறினாலும் நாட்கள் செல்லச் செல்ல நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்திய அவருக்கு சமீப காலங்களில் காயத்தால் தடுமாற்றமாக செயல்பட்ட ஹர்திக் பாண்டியாவுக்கு மாற்று வீரராக உருவாக்கும் நோக்கில் அணி நிர்வாகமும் வாய்ப்பு கொடுத்தது. மித வேகப்பந்து வீச்சாளராக அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் எதிரணிகள் பார்ட்னர்ஷிப் போடும்போது அதைப் பிரிப்பவராகவும், ஒரே ஓவரில் அல்லது அடுத்தடுத்த ஓவரில் 2 விக்கெட்டுகளை எடுப்பவராகவும் தன்னை அடையாளப்படுத்திய இவர் பேட்டிங்கிலும் அவ்வப்போது லோயர் ஆர்டரில் அதிரடியாக ரன்களைக் குவித்து வெற்றிகளில் பங்காற்றினார்.

thakur 1

குறிப்பாக 2021இல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா பதிவு செய்த மறக்க முடியாத “காபா” வெற்றியிலும், லண்டன் ஓவலில் இந்தியா பதிவு செய்த வரலாற்று வெற்றியிலும் ஆல்-ரவுண்டராக முக்கிய பங்காற்றிய இவரை ரசிகர்கள் “லார்ட்” எனக் கொண்டாடுகின்றனர். இருப்பினும் பந்து வீச்சில் ரன்களை வாரி வழங்குவதாலும் பாண்டியா மீண்டும் ஃபார்முக்கு திரும்பியதாலும் வாய்ப்பை இழந்த இவர் டி20 உலகக்கோப்பையில் இடம் பெறாவிட்டாலும் 2023இல் நடைபெறும் ஒருநாள் உலகக்கோப்பையில் இந்தியாவுக்கு விளையாடுவதே தம்முடைய லட்சியம் என்று கூறியுள்ளார்.

- Advertisement -

தற்போது தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடி வரும் இவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “டி20 உலகக்கோப்பையில் விளையாடாதது எனக்கு மிகப்பெரிய பின்னடைவு. ஒவ்வொரு வீரரும் உலக கோப்பையில் விளையாடிய வெல்ல வேண்டும் என்பதேயே கனவாக வைத்திருப்பார்கள். இம்முறை நான் தேர்வாகவில்லை, இருந்தாலும் பரவாயில்லை. ஆனால் எனக்குள் இன்னும் நிறைய கிரிக்கெட் மீதமுள்ளது போலவே அடுத்த வருடம் ஒருநாள் உலக கோப்பை வர உள்ளது. எனவே எனக்கு கிடைக்கும் வாய்ப்புகளில் சிறப்பாக விளையாடி வெற்றிகளில் பங்காற்றி அந்த உலக கோப்பையில் விளையாடுவதே என்னுடைய கவனமாகும்”

Thakur

“சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடும் அணிகள் சிறப்பாக செயல்படுவதற்கு அவர்களது பேட்டிங் வரிசை ஆழமாக இருப்பதே காரணமாகும். எடுத்துக்காட்டாக ஆஸ்திரேலியாவில் பட் கமின்ஸ், மிட்சேல் ஸ்டார்க் போன்றவர்கள் 8, 9 ஆகிய இடங்களில் விளையாடுகிறார்கள். இங்கிலாந்திலும் அதே மாதிரிதான். அந்த வகையில் என்னுடைய பேட்டிங்கில் நான் நீண்ட காலமாக கவனம் செலுத்தி வருகிறேன். குறிப்பாக 7 – 9 வரையிலான இடத்தில் நீங்கள் அச்சத்தினால் உங்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைக்கும்”

- Advertisement -

“அவர்களை போலவே நம்முடைய பேட்டிங் வரிசையையும் ஆழமாக மாற்றுவது வெற்றியில் வித்தியாசத்தை ஏற்படுத்தும். குறிப்பாக வெள்ளை பந்து கிரிக்கெட்டில் கடைசி நேரத்தில் அடிக்கும் 10 – 15 ரன்கள் வெற்றியில் முக்கிய பங்காற்றும்” என்று கூறினார். காபா, லண்டன் டெஸ்ட் போட்டிகளில் இவரது கவர் ட்ரைவ் ஜாம்பவான் ஸ்டீவ் வாக் போல் இருப்பதாக ஆஸ்திரேலிய ஜாம்பவான் மைக் ஹஸ்சி பாராட்டியிருந்தார்.

இதையும் படிங்க : டி20 உலகக்கோப்பையை ஜெயிக்கப்போறதே அவங்கதான் – இங்கிலாந்து வெளிப்படையான அறிவிப்பு

அந்த அளவுக்கு பேட்டிங்கில் நல்ல திறமை கொண்டிருக்கும் இவர் பந்து வீச்சில் ரன்களை கொடுப்பது மட்டுமே பிரச்சனையாக உள்ளது. எனது அதில் சற்று மெனக்கெட்டால் நிச்சயம் இவரால் உலகக்கோப்பை அணியில் இடம்பிடிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement