
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்று முடிந்த நான்காவது டி20 கிரிக்கெட் போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது 48 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி இந்த தொடரில் இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. அதன்படி குயின்ஸ்லாந்து நகரில் நடைபெற்ற அந்த நான்காவது போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.
அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் எட்டு விக்கெட்டுகளை இழந்து 167 ரன்கள் குவித்தது. பின்னர் 168 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 18.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 119 ரன்களை மட்டுமே குவித்ததால் இந்த போட்டியில் இந்திய அணி 48 ரன்கள் அபார வெற்றி பெற்றது.
இந்த நான்காவது போட்டியின் போது இந்திய அணி சார்பாக சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய வருண் சக்கரவர்த்தி நான்கு ஓவர்கள் பந்துவீசி 26 ரன்களை விட்டுக் கொடுத்து 1 விக்கெட்டை வீழ்த்தி அசத்தினார். அதிலும் குறிப்பாக ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர அதிரடி ஆட்டக்காரரான கிளென் மேக்ஸ்வெல்லை வருண் சக்கரவர்த்தி கிளீன் போல்ட் ஆக்கினார்.
இதன் மூலம் அவர் மேக்ஸ்வெல்லின் விக்கெட்டை டி20 கிரிக்கெட்டில் ஐந்தாவது முறையாக எடுத்துள்ளார். இதுவரை 33 வருண் சக்கரவர்த்திக்கு எதிராக 33 பந்துகளை எதிர்கொண்டுள்ள மேக்ஸ்வெல் ஐந்தாவது முறையாக அவரது பந்துவீச்சில் ஆட்டமிழந்துள்ளார்.
இந்நிலையில் கிளென் மேக்ஸ்வெல் இப்படி அடிக்கடி வருண் சக்கரவர்த்தியிடம் ஆட்டமிழந்து வருவது குறித்து பேசியுள்ள முன்னாள் இந்திய வீரரான ஸ்ரீகாந்த் கூறுகையில் : வருண் சக்கரவர்த்தி பந்துவீச வரும்போதெல்லாம் கிளென் மேக்ஸ்வெல்லின் கால்கள் நடுங்குகின்றன.
இதையும் படிங்க : இதுமட்டும் நடந்தா அபிஷேக் சர்மாவை விட சுப்மன் கில் வேகமாக ரன்கள் அடிப்பார் – ஆகாஷ் சோப்ரா கருத்து
குறிப்பாக வருண் சக்கரவர்த்தி சற்று தடுமாறும் பேட்ஸ்மேன்களை மிக எளிதாக வீழ்த்துகிறார். அவர் மேக்ஸ்வெல்லை வீழ்த்தும் விதத்தை பார்க்கும் போது அவர் கேக் துண்டை விழுங்குவது போல உடனடியாக அவரை ஆட்டமிழக்க வைத்து வருகிறார் என்றும் ஸ்ரீகாந்த் கூறியது குறிப்பிடத்தக்கது.