இதுமட்டும் நடந்தா அபிஷேக் சர்மாவை விட சுப்மன் கில் வேகமாக ரன்கள் அடிப்பார் – ஆகாஷ் சோப்ரா கருத்து

Aakash Chopra
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் துணை கேப்டனும், நட்சத்திர துவக்க வீரருமான சுப்மன் கில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த நான்காவது டி20 போட்டியின் போது இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக 46 ரன்கள் குவித்து அசத்தியிருந்தார். ஆனாலும் 39 பந்துகளை சந்தித்த அவர் நான்கு பவுண்டரி மற்றும் ஒரு சிக்சர் என 117 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 46 ரன்கள் அடித்து பொறுமையாக விளையாடியது பலரது மத்தியிலும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

சுப்மன் கில் அபிஷேக் சர்மாவை விட அதிரடியாக ஆடுவார் : ஆகாஷ் சோப்ரா

ஏற்கனவே அதிரடியான ஆட்டத்தை துவக்க வீரராக வெளிப்படுத்தி வந்த சஞ்சு சாம்சன் இடத்தில் விளையாடி வரும் சுப்மன் கில் தொடர்ச்சியாக மெதுவான ஸ்ட்ரைக் ரேட்டுடன் விளையாடி வருவது பலரது மத்தியிலும் பேசும் பொருளாக மாறியுள்ளது. டி20 போட்டிகளில் தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் விளையாடி வரும் அவர் அழுத்தம் காரணமாகவே பொறுமையாக விளையாடி வருவதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

- Advertisement -

ஆனாலும் அவர் டி20 போட்டிகளில் இன்னும் சிறப்பாக விளையாட வேண்டியது அவசியம் என்று பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது சுப்மன் கில் ரன் குவிக்க வேண்டிய அழுத்தத்தில் இருப்பதால் மட்டுமே மெதுவாக விளையாடுகிறார் என்றும் அவர் மீதுள்ள அழுத்தம் போகும் போது அவர் மீண்டும் பார்மிற்கு வந்தால் அபிஷேக் சர்மாவை விட அதிரடியாக விளையாடுவார் என முன்னாள் இந்திய அணியின் வீரரான ஆகாஷ் சோப்ரா தனது கருத்தினை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய ஆகாஷ் சோப்ரா கூறுகையில் : தற்போது சுப்மன் கில்லின் மீது அழுத்தம் இருப்பதாக நினைக்கிறேன். அதன் காரணமாக அவர் ரன் குவிக்க வேண்டிய கட்டாயத்தில் விளையாடுவதாலே பொறுமையாக விளையாடுகிறார்.

- Advertisement -

முதல் 10 முதல் 12 பந்துகளை அவர் எடுத்துக்கொண்டு பார்மிற்கு வந்து ரன் அடிக்க ஆரம்பித்தால் நிச்சயம் அபிஷேக் சர்மாவை விட அதிரடியாக விளையாடுவார் என்று நான் உறுதியாக நம்புகிறேன். தற்போது அவர் டி20 கிரிக்கெட்டில் பொறுமையாக விளையாடி வந்தாலும் இனிவரும் போட்டிகளில் அதிரடியாக ஆடுவார் என்று நினைக்கிறேன்.

இதையும் படிங்க : சஞ்சு சாம்சன் பிளேயிங் லெவனில் தனது இடத்தை இழக்க இதுதான் காரணம் – முகமது கைப் கொடுத்த விளக்கம்

ஆனால் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து அதிரடியான துவக்கத்தை அளிக்கும் போது அவர் பார்முக்கு வரும் பட்சத்தில் நிச்சயம் அவருடைய அதிரடியான ஆட்டம் வெளிப்படும் என ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement