விட்டதை பிடிப்பாரு.. இனிமேல் ஆட்டம் வேற மாதிரி இருக்கும்.. இந்திய வீரருக்கு ஸ்ரீகாந்த் அதிரடி ஆதரவு

- Advertisement -

ஆப்கானிஸ்தானுக்கு எதிராக நடைபெறும் டி20 தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 2024 டி20 உலகக் கோப்பைக்கு தயாராக உதவும் இத்தொடரில் ஹர்திக் பாண்டியா மற்றும் சூரியகுமார் யாதவ் ஆகியோர் காயத்தை சந்தித்துள்ளதால் கேப்டனாக ரோகித் சர்மா செயல்படுவார் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது. அதே போல நட்சத்திர வீரர் விராட் கோலியும் இத்தொடரில் நீண்ட நாட்கள் கழித்து தேர்வாகியுள்ளது ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

கடைசியாக கடந்த டி20 உலக கோப்பையில் விளையாடிய இந்த இருவரும் மேற்கொண்டு எந்த ஒரு டி20 போட்டியிலும் விளையாடாமல் இருந்து வந்தனர். அப்போது கடந்த டி20 உலகக் கோப்பையில் தோல்வியை சந்திப்பதற்கு முக்கிய காரணமாக இருந்த சீனியர் வீரர்களை விடுவித்து ஹர்திக் பாண்டியா தலைமையில் புதிய அணியை பிசிசிஐ களமிறக்க உள்ளதாக நிறைய செய்திகள் வெளிவந்தன.

- Advertisement -

விட்டதை பிடிப்பாரு:
அந்த சூழ்நிலையில் தற்போதைய அறிவிப்பால் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் 2024 டி20 உலகக் கோப்பையில் விளையாடுவது ஏறத்தாழ உறுதியாகியுள்ளது. இந்நிலையில் 2022 டி20 உலகக் கோப்பை, 2023 ஐபிஎல் உட்பட சமீப காலங்களாகவே டி20 கிரிக்கெட்டில் தடுமாறி வரும் ரோகித் சர்மா இந்த வாய்ப்பில் அதிரடியாக விளையாடுவார் என்று எதிர்பார்ப்பதாக ஸ்ரீகாந்த் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

குறிப்பாக 2023 உலகக் கோப்பையில் அதிரடியாக விளையாடியும் வெல்ல முடியாத சாம்பியன் பட்டத்தை 2024 டி20 உலகக் கோப்பையில் ரோகித் சர்மா வெல்வார் என்று நம்புவதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி தன்னுடைய யூடியூப் பக்கத்தில் பேசியது பின்வருமாறு. “இந்த அறிவிப்பு ரோகித் சர்மா 2024 டி20 உலகக் கோப்பையில் இந்தியாவை வழி நடத்துவார் என்பதை காட்டியுள்ளது”

- Advertisement -

“ஆம் ஹர்திக் பாண்டியா, சூரியகுமார் யாதவ் ஆகியோர் காயமடைந்துள்ள நிலையில் பும்ரா இல்லாததால் ரோஹித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அதே போல மும்பை இந்தியன்ஸ் அணி பாண்டியாவை கேப்டனாக நியமித்துள்ளது அவர்களுடைய சொந்த முடிவாகும். ஆனால் இந்திய அணியைப் பொறுத்த வரை ரோஹித் சர்மா தான் டி20 உலக கோப்பையின் கேப்டனாக நியமிக்க அதிகப்படியான வாய்ப்புள்ளது”

இதையும் படிங்க: என்னோட கரியர்ல என்னை கஷ்டப்படுத்திய ஒரே பேட்ஸ்மேன்.. அந்த இந்திய வீரர் மட்டும் தான் – முரளிதரன் வெளிப்படை

“எனவே இந்த ஐபிஎல் தொடரில் ரோஹித் முழு சுதந்திரத்துடன் 2023 உலகக்கோப்பை போல அட்டாக் செய்யும் கிரிக்கெட்டை விளையாடுவார். ஒருவேளை நவம்பர் 19ஆம் தேதி ஆஸ்திரேலியாவை நாம் தோற்கடித்திருந்தால் அனைத்தும் வித்தியாசமாக இருந்திருக்கும். அந்த உலக கோப்பையை ரோஹித் கேப்டனாக வெல்ல விரும்பினார். டி20 உலகக் கோப்பையை விட 50 ஓவர் உலகக் கோப்பை பெரிது என்பது உண்மை தான். ஆனால் டி20 உலக கோப்பையை வென்றாலும் நீங்கள் உலக கோப்பையை வென்ற கேப்டனாகவே கருதப்படுவீர்கள். எனவே இம்முறை அவர் அதை கண்டிப்பாக வெல்வதற்காக காத்திருக்கிறார்” என்று கூறினார்.

Advertisement