என்னோட கரியர்ல என்னை கஷ்டப்படுத்திய ஒரே பேட்ஸ்மேன்.. அந்த இந்திய வீரர் மட்டும் தான் – முரளிதரன் வெளிப்படை

Muralitharan
- Advertisement -

இலங்கை அணியை சேர்ந்த முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான முத்தையா முரளிதரன் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்ற சாதனையில் முதலிடத்தில் உள்ளவர். இலங்கை அணிக்காக சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் கடந்த 1992-ஆம் ஆண்டு அறிமுகமான அவர் 2010-ஆம் ஆண்டு வரை 133 போட்டிகளில் பங்கேற்று 800 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

அது தவிர்த்து ஒருநாள் கிரிக்கெட்டில் 534 விக்கெட்டுகள், டி20 கிரிக்கெட்டில் 13 விக்கெட்டுகள் என சர்வதேச கிரிக்கெட்டில் மட்டும் 1347 விக்கெடுகளை கைப்பற்றி இருக்கும் இவர் சுழற்பந்து வீச்சாளர்களின் முன்னோடி என்றும் அழைக்கலாம்.

- Advertisement -

அந்த அளவிற்கு உலகின் பலதரப்பட்ட பேட்ஸ்மேன்களை தனது அசாத்தியமான பந்துவீச்சின் மூலம் திணறடித்து தற்போது ஜாம்பவான் பட்டியலில் இருப்பவர். இந்நிலையில் கடந்த சனிக்கிழமை அன்று தனியார் கல்லூரி மாணவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற முத்தையா முரளிதரன் தனது கரியரில் நடந்த பல்வேறு சுவாரசியமான தகவல்களை பகிர்ந்து கொண்டார்.

அதிலும் குறிப்பாக ஒரு மாணவர் நீங்கள் “பந்து வீசியதிலேயே மிகக் கடினமான பேட்ஸ்மேன் யார்?” என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த முரளிதரன் கூறுகையில் : நான் பந்துவீசியதிலேயே கடினமான பேட்ஸ்மேன் என்றால் அது இந்திய வீரேந்திர சேவாக் தான் என்று கூறியுள்ளார்.

- Advertisement -

மேலும் தான் எப்போதும் போற்றக்கூடிய ஒரு பேட்ஸ்மேன் என்றால் வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் விவ் ரிச்சர்ட்ஸன் என்று பதில் அளித்துள்ளார். மேலும் பந்துவீச்சில் தனக்கு தூஸ்ரா வகை பந்துவீச்சை கற்றுக் கொடுத்தது பாகிஸ்தான் வீரர் சக்லைன் முஷ்டாக் தான் என்று வெளிப்படையாக பல்வேறு விடயங்களை அவர் பகிர்ந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : இந்தியாவுக்கு நீங்க இப்படி செஞ்சது எனக்கே பிடிக்கல.. தெஆ மீது ஏபிடி அதிருப்தி

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து முரளிதரன் ஓய்வு பெற்றாலும் தொடர்ந்து கிரிக்கெட் தொடர்பான பணிகளையே தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார். ஐ.பி.எல் தொடரில் கூட சன் ரைசர்ஸ் அணியின் பயிற்சியாளரிகளில் ஒரு அங்கமாக அவரும் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement