இந்தியாவுக்கு நீங்க இப்படி செஞ்சது எனக்கே பிடிக்கல.. தெஆ மீது ஏபிடி அதிருப்தி

A De Villers
- Advertisement -

தென்னாபிரிக்காவுக்கு எதிராக நிறைவு பெற்ற டெஸ்ட் தொடரை 1 – 1 (2) என்ற கணக்கில் இந்திய கிரிக்கெட் அணி சமன் செய்தது. அதனால் 2010/11க்குப்பின் 13 வருடங்கள் கழித்து அந்நாட்டில் முதல் முறையாக ஒரு டெஸ்ட் தொடரை சமன் செய்த இந்தியா 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் 2வது இடத்திற்கும் முன்னேறியது ரசிகர்களுக்கு ஆறுதலாக அமைந்தது.

இருப்பினும் இந்த தொடர் 2 சர்ச்சைகளை ஏற்படுத்தியது. முதலாவதாக கேப் டவுனில் நடைபெற்ற 2வது போட்டி இரண்டரை நாட்களில் முடியும் அளவுக்கு பிட்ச் ஒருதலைபட்சமாக இருந்தது நிறைய விமர்சனங்களை எழுப்பியது. அதை விட பொதுவாகவே தென்னாப்பிரிக்காவில் மண்ணில் இதற்கு முன் இந்தியா விளையாடிய அனைத்து தொடர்களுமே 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடராக நடைபெற்றது.

- Advertisement -

ஏபிடி அதிருப்தி:
ஆனால் இம்முறை ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் ஐபிஎல் போல தென்னாப்பிரிக்கா வாரியம் ஒரு டி20 தொடரை நடத்துகிறது. அதன் காரணமாக இந்தியாவின் டெஸ்ட் தொடரை வெறும் 2 போட்டிகளாக குறைத்த அந்நாட்டு வாரியம் அடுத்ததாக நடைபெற உள்ள நியூசிலாந்து தொடருக்கு இதுவரை டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமாகாத 7 வீரர்களைக் கொண்ட 3வது தர அணியை அறிவித்துள்ளது.

அதனால் ஸ்டீவ் வாக் போன்ற முன்னாள் ஜாம்பவான் வீரர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டை தென்னாப்பிரிக்கா மதிக்கவில்லை என்று விமர்சித்து வருகின்றனர். அதே போல நேரத்தை வீணடிக்கும் வகையில் 2 போட்டிகளைக் கொண்ட தொடருக்கு விளையாட வாருங்கள் என தென்னாப்பிரிக்கா அழைத்தால் இந்தியா செல்லக்கூடாது என ரவி சாஸ்திரி விமர்சித்திருந்தார்.

- Advertisement -

இந்நிலையில் இந்தியாவுக்கு எதிராக வெறும் 2 போட்டிகளில் மட்டும் தென்னாப்பிரிக்காவில் விளையாடியது தமக்கே மகிழ்ச்சியை கொடுக்கவில்லை என ஏபி டீ வில்லியர்ஸ் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். இது பற்றி அவர் யூடியூப் பக்கத்தில் பேசியது பின்வருமாறு. “3வது டெஸ்ட் போட்டி இல்லை என்பது எனக்கு மகிழ்ச்சியை கொடுக்கவில்லை. இதற்கு உலகம் முழுவதிலும் நடைபெறும் பல்வேறு டி20 கிரிக்கெட்டை தான் நீங்கள் குறை சொல்ல வேண்டும்”

இதையும் படிங்க: அஸ்வின் போன்ற ஸ்பின்னர்களை விட அவங்க தான் சவாலை கொடுப்பாங்க.. ஜானி பேர்ஸ்டோ பேட்டி

“இதற்காக நான் யாரை குறை சொல்வது என்பது எனக்கு தெரியவில்லை. ஆனால் விஷயத்தில் ஏதோ ஒன்று தவறாக உள்ளது. நீங்கள் அனைத்து அணிகளும் போட்டியிடுவதை பார்க்கவும் உலகின் சிறந்த டெஸ்ட் அணி யார் என்பதை பார்க்கவும் விரும்பினால் ஏதாவது மாற வேண்டும். அதே போல நியூசிலாந்து தொடருக்கான தென்னாபிரிக்க அணி அனைவருக்கும் ஆச்சரியத்தை கொடுத்ததுடன் டெஸ்ட், ஒருநாள் போட்டிகள் டி20 கிரிக்கெட்டால் அழுத்தத்திற்கு உள்ளாகியதை காண்பித்தது. வீரர்களும் வாரியமும் ஒளிபரப்பு நிறுவனங்களும் பணத்தை நோக்கி நகர்கின்றன” என்று கூறியுள்ளார்.

Advertisement