உங்களுக்கெல்லாம் வேலையே இல்லையா? 100% இந்தியா ஜெய்க்குமா? விராட் கோலி பற்றிய செய்தியால் கொதித்த ஸ்ரீகாந்த்

Srikkanth 2
- Advertisement -

நட்சத்திர கிரிக்கெட் வீரர் விராட் கோலி கடந்த 15 வருடங்களாக சர்வதேச கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடி இந்தியாவின் நிறைய வெற்றிகளில் பங்காற்றி வருகிறார். குறிப்பாக உலகின் பல பேட்ஸ்மேன்கள் ஏதேனும் ஒரு வகையான கிரிக்கெட்டில் மட்டுமே அசத்தும் நிலையில் டெஸ்ட், ஒருநாள், டி20 ஆகிய 3 வகையான கிரிக்கெட்டிலும் கிட்டத்தட்ட 50 என்ற சராசரியில் ரன்கள் குவித்து வருவதே விராட் கோலியின் ஸ்பெஷலாகும்.

அப்படிப்பட்ட அவரும் யானைக்கும் அடி சறுக்கும் என்பது போல் 2019க்குப்பின் சதமடிக்காமல் தடுமாறி வந்தார். அப்போது விராட் கோலியை இந்திய அணியிலிருந்து நீக்க வேண்டும் என்று ஏகப்பட்ட விமர்சனங்கள் எழுந்தன. இருப்பினும் அதற்கெல்லாம் அசராத விராட் கோலி கடினமாக போராடி 2021 ஆசிய கோப்பையில் சதமடித்து ஃபார்முக்கு திரும்பி தன்னுடைய விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

- Advertisement -

வேலை இல்லையா:
அப்போதிலிருந்து மீண்டும் கில்லியாக செயல்பட்டு வரும் அவர் 2022 டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக முடியாத மகத்தான வெற்றியைப் பெற்றுக் கொடுத்து 2023 உலகக் கோப்பையில் தொடர் நாயகன் விருது வென்று சாதனை படைத்தார். ஆனால் அப்படிப்பட்ட அவரை 2024 டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியிலிருந்து நீக்குவதற்கு தேர்வுக் குழு பரிசீலித்து வருவதாக கடந்த சில தினங்களாக செய்திகள் வலம் வருகின்றன.

குறிப்பாக வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் உள்ள மைதானங்கள் சற்று மெதுவாக இருக்கும் என்பதால் அங்கே நங்கூரமாக விளையாடக்கூடிய விராட் கோலியின் அணுகுமுறை பொருந்தாது என்று தேர்வுக்குழு கருதுவதாக தெரிகிறது. அதனால் அவரை கழற்றி விட முடிவெடுத்துள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் இப்படி பேசுபவர்களுக்கு வேறு வேலை இல்லையா? என்று முன்னாள் இந்திய கேப்டன் ஸ்ரீகாந்த் விமர்சித்துள்ளார்.

- Advertisement -

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “விராட் கோலி இல்லாமல் டி20 உலகக் கோப்பை அசாத்தியமற்றது. அவர் தான் நம்மை 2022 டி20 உலகக் கோப்பை செமி ஃபைனல் அழைத்துச் சென்றார். அவர் கடந்த உலகக் கோப்பையின் தொடர்நாயகன். எனவே இதையெல்லாம் யார் சொல்கிறார்கள்? இப்படி வதந்தியை கிளப்புவர்களுக்கு வேறு வேலை இல்லையா? எதன் அடிப்படையில் இந்த கருத்துக்கள் வெளி வருகின்றன”

இதையும் படிங்க: தோனி தான் முதல் ஆளா என்னை தூக்குனாரு.. சிஎஸ்கே’வுக்காக அதை செஞ்சா ஆச்சர்யப்படாதீங்க.. கும்ப்ளே கணிப்பு

“இந்தியா டி20 உலகக் கோப்பையை வெல்ல வேண்டுமெனில் விராட் கோலி அணியில் இருக்க வேண்டும். எந்த உலகக் கோப்பையாக இருந்தாலும் இந்தியாவுக்காக நங்கூரமாக விளையாடுவதற்கு ஒருவர் உங்களுக்கு தேவை. எனவே விராட் கோலி இல்லாமல் இந்திய அணி செல்ல முடியாது. 100% கண்டிப்பாக அவர் தேவை. 2011இல் சச்சினுக்கு கொடுக்கப்பட்டதை போல விராட் கோலிக்கும் மரியாதை கொடுக்கப்பட வேண்டும் என்று நான் நம்புகிறேன். விராட் கோலிக்காக நாம் உலகக் கோப்பையை வெல்ல வேண்டும்” என்று கூறினார்.

Advertisement