தோனி தான் முதல் ஆளா என்னை தூக்குனாரு.. சிஎஸ்கே’வுக்காக அதை செஞ்சா ஆச்சர்யப்படாதீங்க.. கும்ப்ளே கணிப்பு

- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் நடப்புச் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. அந்த போட்டியில் வெற்றி பெற்று தொடர் முழுவதும் சிறப்பாக விளையாடி இம்முறை சென்னை 6வது கோப்பையை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது. அதே போல இந்த வருடத்துடன் ஐபிஎல் தொடரிலும் எம்.எஸ். தோனி ஓய்வு பெறுவாரா என்ற கேள்வியும் இருக்கிறது.

ஏனெனில் 2019 உலகக் கோப்பையுடன் சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வு பெற்ற அவர் கடந்த வருடம் முழங்கால் வலியுடன் விளையாடி வெற்றியும் கண்டார். எனவே தற்போது 41 வயதில் உடல் ஒத்துழைக்காது என்பதால் விரைவில் அவர் ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் 2008இல் தாம் ஓய்வு பெற்ற போது தோனி தான் முதல் ஆளாக தன்னை தோளில் தூக்கி மைதானத்தை வலம் வர வைத்ததாக ஜாம்பவான் அனில் கும்ப்ளே தெரிவித்துள்ளார்.

- Advertisement -

கும்ப்ளே கணிப்பு:
மேலும் சச்சின் போலவே நேரம் தவறாமல் வலைப்பயிற்சியில் கலந்து கொள்வதில் தோனி முதல் ஆளாக இருப்பார் என்றும் கும்ப்ளே கூறியுள்ளார். அந்த வகையில் நல்ல ஃபிட்னஸ் மற்றும் ஆர்வத்தைக் கொண்டுள்ள தோனி சிஎஸ்கே அணிக்காக மேலும் சில வருடங்கள் விளையாடினால் அதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை என்றும் கும்ப்ளே கூறியுள்ளார்.

இது பற்றி ஜியோ சினிமா சேனலில் அவர் பேசியது பின்வருமாறு. “நான் ஐபிஎல் தொடரில் எப்போதும் தோனியுடன் இணைந்து விளையாடியதில்லை. இருப்பினும் இந்திய அணியில் விளையாடிய போது அவர் தான் என்னை முதல் ஆளாக தூக்கினார். அவர் அதிகப்படியான பளு தூக்குவதில் மிகவும் வலுவான மனிதர் என்று நான் கருதுகிறேன். அது எனக்கு சிறந்த தருணமாக அமைந்தது”

- Advertisement -

“ஒருமுறை நான் பயிற்சியாளராக இருந்த போது ராஞ்சியில் நடந்த ஒருநாள் போட்டிக்கான எக்ஸ்ட்ரா வலைப்பயிற்சியில் ஈடுபட்டோம். அது தோனியின் சொந்த ஊரில் நடந்ததால் அவர் வர வேண்டிய அவசியமில்லை. ஆனால் அங்கே முதல் ஆளாக இருந்த அவரை பார்த்து “நீங்கள் இங்கே என்ன செய்கிறீர்கள்? இன்னும் நமக்கு போட்டிக்கு 2 நாட்கள் இருக்கிறது” என்று நான் கேட்டேன். அதற்கு “இங்கே நான் இருக்க விரும்புகிறேன்” என்று தோனி சொன்னார்”

இதையும் படிங்க: சுயநலமற்ற அவர் இந்திய அணிக்கு தேவை.. ஐபிஎல் 2024 தொடரில் அவருடைய பேட் பேசும்.. ஹர்பஜன் நம்பிக்கை

“சச்சினும் இதே போன்றவர். மும்பை இந்தியன்ஸ் அணியில் நான் இருந்த போது சச்சின் 25 – 26 வருடம் கிரிக்கெட்டில் விளையாடியராக இருந்தார். ஆனால் எக்ஸ்ட்ரா வலைப்பயிற்சி செய்வதற்காக சென்றால் முதல் நாளாக அவர் பேருந்தில் இருப்பார். அந்த வகையில் சச்சின், தோனி எப்போதும் ஓய்வு எடுக்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன். எனவே சிஎஸ்கே அணிக்காக தோனி தொடர்ந்து விளையாடினால் நான் ஆச்சரியப்படப் போவதில்லை. ஏனெனில் அங்கே இருக்க வேண்டும் என்று தோனி ஆர்வத்துடன் இருக்கிறார்” எனக் கூறினார்.

Advertisement