சுயநலமற்ற அவர் இந்திய அணிக்கு தேவை.. ஐபிஎல் 2024 தொடரில் அவருடைய பேட் பேசும்.. ஹர்பஜன் நம்பிக்கை

harbhajan singh 5
- Advertisement -

ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடர் மார்ச் 22ஆம் தேதி கோலாகலமாக துவங்க உள்ளது. அதில் இந்தியாவின் மகத்தான முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனியுடன் ரோகித் சர்மா, விராட் கோலி போன்ற நட்சத்திர வீரர்களும் களமிறங்குவது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக இம்முறை விராட் கோலியை போலவே ரோகித் சர்மாவும் கேப்டன்ஷிப் அழுத்தம் இல்லாமல் சாதாரண பேட்ஸ்மேனாக விளையாட உள்ளார்.

ஏனெனில் 2013இல் கேப்டனாக பொறுப்பேற்ற குறுகிய காலத்திலேயே 5 கோப்பைகளை வென்று கொடுத்த அவர் மும்பை வெற்றிகரமாக அணியாக ஜொலிப்பதற்கு முக்கிய காரணமாக திகழ்கிறார். இருப்பினும் சமீபத்திய ஐபிஎல் தொடர்களில் தடுமாற்றமாக விளையாடியதால் வருங்காலத்தை கருத்தில் கொண்டு அவரை கழற்றி விட்டுள்ள மும்பை ஹர்திக் பாண்டியாவை புதிய கேப்டனாக நியமித்துள்ளது.

- Advertisement -

ஹர்பஜன் நம்பிக்கை:
ஆனால் 2023 உலகக் கோப்பையில் அபாரமாக விளையாடி இந்தியாவை ஃபைனல் வரை அழைத்துச் சென்ற ரோகித் சர்மா இப்போதும் சிறந்த கேப்டன் மற்றும் பேட்ஸ்மேனாக இருக்கிறார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இந்நிலையில் ரோகித் சர்மா எப்போதுமே தன்னுடைய சொந்த சாதனைகளைப் பற்றி கவலைப்படாமல் அணிக்காக சுயநலமின்றி விளையாடக் கூடியவர் என்று ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.

எனவே 2024 டி20 உலகக் கோப்பையில் இந்தியா வெற்றி பெறுவதற்கு ரோகித் சர்மா அவசியம் என்றும் ஹர்பஜன் கூறியுள்ளார். மேலும் போட்டியின் எந்த நேரத்திலும் சிக்ஸர்கள் பறக்க விடக்கூடிய அவருடைய திறமையை சந்தேகித்த மும்பைக்கு 2024 ஐபிஎல் தொடரில் ரோஹித் சர்மா பேட்டால் பதிலடி கொடுப்பார் என்றும் ஹர்பஜன் மறைமுக பதிலடியை கொடுத்துள்ளார். இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“ரோகித் சர்மா சுயநலமற்றவர். எப்போதும் தன்னுடைய சொந்த சாதனைகளைப் பற்றி பார்க்காமல் அணியை முன்னிலைப்படுத்துபவர். கேப்டனாகவும் பேட்ஸ்மேனாகவும் இன்று வழி நடத்தக் கூடிய ரோஹித் சர்மா இந்திய அணிக்கு தேவையானவர். அதே போல மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் ரோஹித் சர்மா நன்றாக விளையாடுவது முக்கியம். மும்பைக்கு அவர் ரன்கள் அடிப்பது அவசியமாகிறது”

இதையும் படிங்க: துருவ் ஜுரேல் மற்றும் படிக்கல் ஆகியோர் டெஸ்ட் அணியில் அறிமுகமாக அவரே முக்கிய காரணமாம் – வெளியான தகவல்

“ரோகித் சர்மா முதல் 6 ஓவரில் அதிரடியான ஷாட்டுகளை அடிக்கும் வீரர் கிடையாது. மாறாக போட்டியின் எந்த தருணத்திலும் சிக்சர் அடிக்கும் திறமை அவரிடம் இருக்கிறது” என்று கூறினார். முன்னதாக 2023 உலகக் கோப்பையில் 10 தொடர்ச்சியான வெற்றிகளை பெற்றுக் கொடுத்து ஃபைனல் வரை அழைத்துச் சென்ற ரோகித் சர்மா 2024 டி20 உலகக் கோப்பையில் மீண்டும் இந்தியாவின் கேப்டனாக செயல்படுவார் என்பதை பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா கடந்த மாதம் உறுதிப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement