துருவ் ஜுரேல் மற்றும் படிக்கல் ஆகியோர் டெஸ்ட் அணியில் அறிமுகமாக அவரே முக்கிய காரணமாம் – வெளியான தகவல்

Jurel-and-Padikkal
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே அண்மையில் நடைபெற்று முடிந்த 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரை இந்திய அணியானது நான்குக்கு ஒன்று (4-1) என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. இந்த தொடரில் முகமது ஷமி, விராட் கோலி, கே.எல் ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர் போன்ற முக்கிய வீரர்கள் இல்லாமலேயே இளம் வீரர்களைக் கொண்ட இந்திய அணியானது அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி தொடரை கைப்பற்றியதின் காரணமாக இந்திய அணிக்கு பாராட்டுக்களும் குவிந்து வருகிறது.

இந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது இந்திய அணியின் சார்பாக ரஜத் பட்டிதார், சர்பராஸ் கான், துருவ் ஜுரேல், ஆகாஷ் தீப், தேவ்தத் படிக்கல் என ஐந்து வீரர்களுக்கு அறிமுக வாய்ப்பு வழங்கப்பட்டது. அப்படி வழங்கப்பட்ட வாய்ப்புகளை அந்த ஐந்து வீரர்களும் அற்புதமாக பயன்படுத்தி தங்களது தேர்வினை நியாயப்படுத்தியிருந்தனர்.

- Advertisement -

அதிலும் குறிப்பாக விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக கே.எஸ் பரத்திற்கு பதிலாக மாற்றுவீரராக அறிமுகமாகிய துருவ் ஜுரேல் அறிமுகப் போட்டியிலேயே அசத்தலான செயல்பாட்டை வெளிப்படுத்தியதோடு சேர்த்து நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெறுவதற்கு மிக முக்கியமான காரணமாக திகழ்ந்தார்.

அதேபோன்று ஐந்தாவது போட்டியில் தேவ்தத் படிக்கல்லும் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அறிமுக போட்டியிலேயே அரைசதம் அடித்து அசத்தியிருந்தார். இப்படி இளம் வீரர்கள் மிகச் சிறப்பாக விளையாடியிருந்தாலும் துருவ் ஜுரேல் மற்றும் படிக்கல் ஆகிய இருவருக்குமே வாய்ப்பு கிடைப்பதற்கு தேர்வுக்குழு தலைவர் அஜித் அகார்கர் மட்டும் தான் காரணம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

- Advertisement -

ஏனெனில் துருவ் ஜுரேல் முதல்தர போட்டிகளில் பெரியளவில் அனுபவம் இல்லாதவர் என்பதனாலும் படிக்கல்லும் இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடாதவர் என்பதனாலும் அவர்கள் மீது டிராவிட் மற்றும் ரோஹித் சர்மா ஆகியோருக்கு நம்பிக்கையில்லாமல் இருந்திருக்கிறது.

இதையும் படிங்க : அடுத்த டார்கெட்டுக்கு வேலை இருக்கு.. 90 வருட ரஞ்சிக் கோப்பை வரலாற்றில் சாதனை படைத்த முஷீர் கான்

ஆனால் பிசிசிஐ தரப்பில் தேர்வுக்குழு தலைவரான அஜித் அகார்கர் தான் இளம் வீரர்களாகிய அவர்கள் மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தியதாலே இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டதாகவும் நிச்சயம் அவர்களால் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முடியும் என்று அறிவுறுத்தினாராம். அதன்காரணமாகவே அவர்களுக்கு அறிமுக வாய்ப்பு கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அப்படி கிடைத்த வாய்ப்பினை இளம்வீரர்கள் சிறப்பாக பயன்படுத்தியுள்ளது அனைவரது மத்தியிலும் வரவேற்பினை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement