அடுத்த டார்கெட்டுக்கு வேலை இருக்கு.. 90 வருட ரஞ்சிக் கோப்பை வரலாற்றில் சாதனை படைத்த முஷீர் கான்

Musheer Khan 3
- Advertisement -

ரஞ்சிக் கோப்பையின் 2024 சீசன் இறுதி போட்டியில் விதர்பா அணியை 169 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த மும்பை சாம்பியன் பட்டம் வென்றது. குறிப்பாக வரலாற்றில் 42வது முறையாக ரஞ்சிக் கோப்பையை வென்று மும்பை கிரிக்கெட் அணி சாதனை படைத்தது. முன்னதாக இங்கிலாந்துக்கு எதிராக நிறைவு பெற்ற டெஸ்ட் தொடரில் அறிமுகமான சர்பராஸ் கான் தம்பி முஷீர் கான் கான் 2024 அண்டர்-19 உலகக் கோப்பையில் 360 ரன்கள் அடித்து இந்தியா ஃபைனல் வரை செல்வதற்கு முக்கிய பங்காற்றினார்.

அதன் காரணமாக ரஞ்சிக் கோப்பையில் மும்பைக்காக முதல் முறையாக விளையாடத் தேர்வான அவர் பரோடாவுக்கு எதிரான காலிறுதிப் போட்டியில் இரட்டை சதமடித்து வெற்றி பெற உதவினார். அதைத் தொடர்ந்து தமிழ்நாட்டுக்கு எதிரான செமி ஃபைனலில் அரை சதமடித்து அசத்திய அவர் இறுதிப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 6 ரன்கள் மட்டுமே அடித்தார்.

- Advertisement -

முஷீர் கான் சாதனை:
ஆனால் முக்கியமான இரண்டாவது இன்னிங்ஸில் 139 ரன்கள் குவித்த அவர் ரஞ்சிக் கோப்பை வரலாற்றின் இறுதிப் போட்டியில் இளம் வயதில் (19 வருடம் 14 நாட்கள்) சதமடித்த மும்பை வீரர் என்ற சச்சின் டெண்டுல்கரின் 30 வருட சாதனையை உடைத்தார் இதற்கு முன் கடந்த 1994/95 ஃபைனலில் பஞ்சாப்புக்கு எதிராக சச்சின் 22 வயதில் சதமடித்ததே முந்தைய சாதனையாகும்.

இறுதியில் அவருடைய சதம் மும்பை 169 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவதற்கு முக்கிய பங்காற்றியது. அதனால் ஆட்டநாயகன் விருதை வென்ற முஷீர் கான் 1934 முதல் நடைபெற்று வரும் ரஞ்சிக் கோப்பை வரலாற்றின் மாபெரும் இறுதிப்போட்டியில் மிகவும் இளம் வயதில் ஆட்டநாயகன் விருது வென்ற வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

- Advertisement -

தற்போது 19 வருடம் 16 நாட்களில் இந்த சாதனையை அவர் படைத்துள்ள நிலையில் இதற்கு முன் 2016 ரஞ்சிக்கோப்பை ஃபைனலில் சௌராஷ்ட்ராவுக்கு எதிராக ஸ்ரேயாஸ் ஐயர் 21 வருடம் 83 நாட்களில் ஆட்டநாயகன் விருது வென்றதே முந்தைய சாதனையாகும். இந்நிலையில் அடுத்ததாக இந்திய அணிக்காக விளையாட நிறைய வேலை செய்ய வேண்டியுள்ளதாக தெரிவிக்கும் முஷீர் கான் இது பற்றி ஃபைனல் பேசியது பின்வருமாறு. “இது எனக்கு மிகவும் முக்கியமான இன்னிங்ஸ். முடிந்தளவுக்கு களத்தில் நின்று அனைவரிடமும் சேர்ந்து பார்ட்னர்ஷிப் அமைக்க முயற்சித்தேன்”

இதையும் படிங்க: இஷான் கிஷானுக்கு டாட்டா.. விட்டதை பிடித்த ஸ்ரேயாஸ் ஐயர்? ஐபிஎல் வாய்ப்பு பற்றியும் வெளியான தகவல்

“ரகானேவுடன் விளையாடிய போது தொடர்ந்து அவர் பேசியதால் எங்களுடைய நல்ல புரிதல் இருந்தது. நாங்கள் நேரான பேட்டை வைத்து முடிந்தளவுக்கு விளையாட முயற்சித்தோம். மும்பை அணியின் நட்சத்திரங்களுடன் சேர்ந்து விளையாடியது பெருமையான தருணமாகும். 42வது கோப்பையை வென்றது மகிழ்ச்சியை கொடுக்கிறது. ஆனால் எனக்கு இன்னும் நிறைய வேலைகள் இருக்கிறது அதை செய்ய விடுங்கள். என்னுடைய வேலையில் நான் கவனம் செலுத்துகிறேன்” என்று கூறினார்.

Advertisement