நான் தேர்வுக்குழு தலைவரா இருந்தா இவர்தான் அடுத்த கேப்டன். அப்போதான் இந்தியா ஜெயிக்கும் – ஸ்ரீகாந்த் கருத்து

Srikkanth
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று முடிந்த டி20 உலக கோப்பையில் அரையிறுதியோடு இந்திய அணி வெளியேறியதை தொடர்ந்து இந்திய அணி குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. அதோடு இந்திய அணியின் எதிர்காலம் குறித்தும் பல்வேறு முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் தங்களது கருத்துக்களை வெளிப்படையாக பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரரும், தமிழக ஜாம்பவானுமான கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் இந்திய அணியின் எதிர்காலம் குறித்து தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியை அளித்துள்ளார்.

KL Rahul Virat Kohli Matthew Wade Hardik Pandya

- Advertisement -

அந்த பேட்டியில் இந்திய அணியின் எதிர்காலம் குறித்து பல்வேறு விடயங்களை பகிர்ந்து கொண்டுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் : இந்திய அணி இப்போதிலிருந்தே அடுத்த டி20 உலக கோப்பையை கருத்தில் கொண்டு அணியை தயார்படுத்த வேண்டும். அந்த வகையில் தேர்வுக்குழு சரியான வீரர்களை தேர்வு செய்ய வேண்டும்.

மேலும் வீரர்களின் திறமை மற்றும் தனித்துவம் ஆகியவற்றை அவர்களை புரிந்துகொண்டு அதற்கேற்றாற்போல் அணியை கட்டமைக்க வேண்டும். இந்திய அணி அடுத்த டி20 உலக கோப்பையை கைப்பற்ற வேண்டுமெனில் அணியில் சிறப்பான வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் ஆல்ரவுண்டர்கள் தேவை என்பதை உணர வேண்டும்.

David Miller Hardik Pandya IND vs SA

இந்திய அணி அடுத்த டி20 உலக கோப்பை தொடரை நோக்கி பயணிக்க புதிய கேப்டன் அவசியம். அந்த வகையில் நான் தேர்வுக்குழு தலைவராக இருந்தால் நிச்சயம் அடுத்த கேப்டனாக வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டரான ஹர்திக் பாண்டியாவை தான் நேரடியாக தேர்வு செய்திருப்பேன்.

- Advertisement -

இந்திய அணி கடைசியாக ஜெயித்த 1983, 2007, 2011 ஆகிய உலகக் கோப்பையை நாம் கருத்தில் கொண்டால் அதில் நல்ல வேகப்பந்து வீச்சாளர்களும், ஆல்ரவுண்டர்களும் இருந்தனர். அந்த வகையில் அடுத்த டி20 உலக கோப்பை தொடருக்கான அணியில் நல்ல வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் ஆல்ரவுண்டர்களை அணியில் வைத்திருந்தால் நிச்சயம் நமக்கு வெற்றி கிடைக்கும்.

இதையும் படிங்க : தோனியை மிஞ்சவே முடியாது, கடைசி வரை அதற்கு சரிப்பட்டு வராத டிகே – தமிழக ரசிகர்களே விரும்பதாக அதிர்ச்சி புள்ளிவிவரம் இதோ

எனவே அதற்கு ஏற்றவாறு அணியை தற்போதிலிருந்தே தயார் தேர்வு செய்ய வேண்டும். மேலும் கூடுதலாக இந்திய டி20 அணியின் கேப்டனாக உடனடியாக ஹார்டிக் பாண்டியாவை நியமிக்க வேண்டும் என ஸ்ரீகாந்த் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement