தோனியை மிஞ்சவே முடியாது, கடைசி வரை அதற்கு சரிப்பட்டு வராத டிகே – தமிழக ரசிகர்களே விரும்பதாக அதிர்ச்சி புள்ளிவிவரம் இதோ

dinesh
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் கோலாகலமாக நடைபெற்று முடிந்துள்ள 2022 ஐசிசி டி20 உலக கோப்பையில் 2007க்குப்பின் 2வது கோப்பையை வெல்லும் லட்சியத்துடன் களமிறங்கிய ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா வழக்கம் போல நாக் அவுட் சுற்றில் சொதப்பி வெளியேறியது. இந்த தொடரில் கேப்டன் ரோகித் சர்மா உட்பட சுமாராக செயல்பட்ட சீனியர் வீரர்களில் தமிழகத்தின் தினேஷ் கார்த்திக் முக்கியமானவராக கருதப்படுகிறார். முன்னதாக கடந்த 2004ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான அவருக்கு அதே காலகட்டத்தில் அறிமுகமாகி இந்திய விக்கெட் கீப்பர்களின் இலக்கணத்தை மாற்றும் அளவுக்கு அதிரடியான பேட்டிங், மின்னல் வேக விக்கெட் கீப்பிங், 3 விதமான உலக கோப்பைகளை வென்ற கேப்டன் போன்ற பல பரிணாமங்களை கொண்ட எம்எஸ் தோனி இருந்ததால் தொடர்ச்சியான வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

DInesh Karthik

- Advertisement -

இருப்பினும் தோனி வெளிப்படுத்திய செயல்பாடுகளில் பாதியளவு செயல்பாடுகளை கூட வெளிப்படுத்தத் தவறியதே தொடர்ச்சியாக தினேஷ் கார்த்திக் இந்திய அணியில் இடம் பிடிக்காததற்கு உண்மையான காரணமாகும். ஆனால் தோனி தான் அவரது வாழ்க்கையை கெடுத்ததாக நிறைய ரசிகர்கள் வெளிப்படையாக சமூக வலைதளங்களில் விமர்சித்ததை பார்க்க முடிந்தது. அப்படியே காலங்கள் உருண்டோடிய நிலையில் 2018 நிதியாஸ் முத்தரப்பு கிரிக்கெட் கோப்பையில் வங்கதேசத்துக்கு எதிராக சிக்சர் அடித்து மீண்டும் கம்பேக் கொடுத்த தினேஷ் கார்த்திக் 2019 உலகக்கோப்பையில் கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்த தவறியதால் மீண்டும் கழற்றி விடப்பட்டார்.

சரிப்பட்டு வராதா டிகே:

அதை தொடர்ந்து கடந்த 2021இல் வர்ணனையாளராக அவதரித்ததால் இந்திய கேரியர் முடிந்ததாக கருதப்பட்ட தினேஷ் கார்த்திக் தம்மால் இந்த உலகக் கோப்பையில் விளையாட முடியும் என்ற நம்பிக்கையுடன் கடினமாக உழைத்து ஐபிஎல் 2022 தொடரில் சிறப்பாக செயல்பட்டு 3 வருடங்கள் கழித்து அபார கம்பேக் கொடுத்தார். அதில் டி20 கிரிக்கெட்டில் 37 வயதுக்குப்பின் அதிக ரன்கள் குவித்து 2 ஆட்டநாயகன் விருதுகளை வென்ற இந்திய வீரர் என்ற தோனியை மிஞ்சும் சாதனைகளை படைத்ததால் இந்த உலகக்கோப்பையில் அசத்தி கோப்பையை வென்று கொடுப்பார் என்ற நம்பிக்கை உருவானது.

Dinesh-Karthik

அதற்கிடையே பினிஷிங் செய்வதற்காக மட்டும் ஒரு இடத்தை வீணடிக்கக்கூடாது என்ற அவருக்கு எதிராக எழுந்த எதிர்ப்புகளையும் தாண்டி கேப்டன் ரோகித் சர்மா ஆரம்பம் முதலே வாய்ப்பு கொடுத்தார். அதில் பாகிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டியிலேயே விராட் கோலி போராடிக் கொண்டு வந்த வெற்றியை கடைசி ஓவரில் ஸ்டம்பிங் முறையில் அவுட்டாகி வீணடிக்க தெரிந்த அவர் நெதர்லாந்துக்கு எதிரான போட்டியில் விக்கெட் கீப்பராக எளிதான ஸ்டம்பிங்கை கோட்டை விட்டார். மேலும் தென்னாபிரிக்காவுக்கு எதிரான போட்டியில் நன்கு செட்டிலாகியும் பினிஷிங் செய்யாமல் கடைசி வரை மெதுவாகவே விளையாடி 6 (15) ரன்களில் அவுட்டான அவர் வங்கதேசத்துக்கு எதிரான முக்கிய போட்டியில் வழக்கம் போல ஏற்பட்ட அழுத்தத்தில் ரன் அவுட்டாகி சென்றார்.

- Advertisement -

ஆனால் பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் தினேஷ் கார்த்திக் செய்யத் தவறிய அதே வேலையை எப்படி சுலபமாக வெற்றிகரமாக செய்யலாம் என்பதை டெயில் எண்டரான அஸ்வின் செய்து காட்டினார். மொத்தத்தில் முதல் 4 போட்டிகளில் சொதப்பியதால் அதிரடியாக நீக்கப்பட்ட அவருக்கு பதிலாக வாய்ப்பு பெற்ற ரிஷப் பண்ட் வழக்கம் போல சொதப்பியது வேறு கதை. ஆனால் இத்தனை வருடங்களாக காத்திருந்து போராடி பெற்ற வாய்ப்பில் தினேஷ் கார்த்திக் சொதப்பியது தான் தமிழக ரசிகர்களை ஏமாற்றமடைய வைத்தது. இதை வாய் வார்த்தையாக கூறவில்லை.

DInesh Karthik

1. உண்மையாகவே அழுத்தம் நிறைந்த 50 ஓவர் ஐசிசி உலகக் கோப்பைகளில் இதுவரை தினேஷ் கார்த்திக் விளையாடிய 2 போட்டிகளில் முறையே 8, 6 என 14 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார்.

- Advertisement -

2. அதை விட டி20 உலக கோப்பை வரலாற்றில் வாய்ப்பு பெற்ற 8 போட்டிகளில் முறையே 11, 17, 0, 16, 13, 1, 6, 7 என வெறும் 71 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார். அதாவது போராடி பெற்ற எந்த உலக கோப்பை வாய்ப்பிலம் ஒரு போட்டியில் கூட தினேஷ் கார்த்திக் 20 ரன்களை தாண்டவில்லை.

Dinesh-Karthik

3. அது மட்டுமல்லாமல் அடித்து நொறுக்க வேண்டிய டி20 உலக கோப்பைகளில் இதுவரை அவர் 1 சிக்சர் கூட அடித்ததில்லை என்பது தமிழக ரசிகர்களே அதிர்ச்சியடையும் புள்ளிவிவரமாகும்.

இதனால் சாதாரண போட்டிகளில் தினேஷ் கார்த்திக் அசத்துவார் உலக கோப்பைகளில் சொதப்புவார் என்பதும் தோனியை எப்போதுமே நெருங்க கூட முடியாது என்பதும் நிரூபணமாகிறது. மேலும் அடுத்ததாக நடைபெறும் நியூசிலாந்து தொடரில் சேர்க்கப்படாத நிலையில் தற்போது 37 வயதை கடந்து விட்ட அவரை இந்திய ஜெர்சியில் இந்த உலக கோப்பையில் பார்த்ததே கடைசியாக இருக்கலாம்.

Advertisement