- Advertisement -
ஐ.பி.எல்

சி.எஸ்.கே அணியின் புதிய பந்துவீச்சு உதவி பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட தமிழக வீரர் – இவர் யார் தெரியுமா?

இந்தியாவில் கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்ப்பை பெற்று வருகிறது. அந்த வகையில் இதுவரை 17 சீசன்களை வெற்றிகரமாக நிறைவடைந்துள்ள வேளையில் அடுத்த 18-வது சீசன் இந்த ஆண்டு இந்தியாவில் கோலாகலமாக நடைபெற இருக்கிறது. இந்த தொடருக்கான அட்டவணையும் சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டிருந்தது.

தமிழக முன்னாள் வீரரை பதவியில் அமர்த்திய சி.எஸ்.கே :

மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் இந்த தொடருக்கான வீரர்களின் மெகா ஏலம் கடந்த நவம்பர் மாதம் சவுதி அரேபியாவில் உள்ள ஜட்டா நகரில் நடைபெற்றது. இந்த இடத்தில் 577 வீரர்கள் பங்கேற்று ஏலத்தில் விடப்பட்டனர். இந்த ஏலத்தில் பங்கேற்ற அனைத்து அணிகளும் தங்களுக்கு தேவையான வீரர்களை போட்டிக்கு விலைக்கு வாங்கியிருந்தனர்.

- Advertisement -

இந்நிலையில் இந்த மெகா ஏலம் முடிந்து எதிர்வரும் ஐபிஎல் தொடருக்கான போட்டிகளின் அட்டவணை வெளியானதில் இருந்து முன்னணி அணிகள் அனைத்தும் தங்களது அணியில் அதிரடி நடவடிக்கைகளையும், முக்கிய ஏற்பாடுகளையும் செய்து வருகின்றனர்.

அந்த வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது இந்த ஐபிஎல் தொடருக்கான புதிய பந்துவீச்சு உதவி பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள் வீரரும், தமிழக முன்னாள் வீரருமான ஸ்ரீதரன் ஸ்ரீராமை நியமித்துள்ளது. இப்படி சென்னை அணியின் புதிய பந்துவீச்சு துணை பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட இவர் யார்? என்பது குறித்து தகவல் தற்போது அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.

- Advertisement -

அந்த வகையில் சென்னையை பூர்வீகமாக கொண்ட இடதுகை சுழற்பந்து வீச்சாளரான ஸ்ரீதரன் ஸ்ரீ ராம் இந்திய அணிக்காக 8 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். அது தவிர்த்து இரண்டு ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ளார். ஏற்கனவே ஆர்.சி.பி அணியின் பேட்டிங் பயிற்சியாளராக இருந்துள்ளார். அதுமட்டுமின்றி சர்வதேச கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய அணிக்காகவும், வங்கதேச அணிக்காகவும் சில ஆண்டுகள் அவர் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : இந்தியாவுக்கு தோற்கடிக்கலனாலும்.. ஆர்சிபி மாதிரி இதை கூடவா செய்யத் தெரியாது? பாகிஸ்தானை விளாசிய ஜடேஜா

சர்வதேச அளவிலும் சரி, இந்திய அளவிலும் சரி நல்ல அனுபவம் உடைய அவரை சென்னை அணி இந்த பதவியில் நியமித்துள்ளதால் ரசிகர்கள் மத்தியிலும் இந்த செய்தி கவனத்தை ஈர்த்துள்ளது. தற்போது ஸ்ரீதரன் ஸ்ரீராம் நடைபெற்று வரும் சாம்பியன்ஸ் டிராபி தொடரின் தமிழ் வார்னைனையாளராக செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -