இந்தியாவை தோற்கடிக்கலனாலும்.. ஆர்சிபி மாதிரி இதை கூடவா செய்யத் தெரியாது? பாகிஸ்தானை விளாசிய ஜடேஜா

Ajay Jadeja
- Advertisement -

ஐசிசி 2025 சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நடைபெற்று வருகிறது. அந்தத் தொடரில் நடப்பு சாம்பியனாக விளையாடும் பாகிஸ்தான் தங்களது முதல் போட்டியில் நியூசிலாந்திடம் தோற்றது. அதை விட பரம எதிரி இந்தியாவுக்கு எதிராக துபாயில் நடைபெற்ற இரண்டாவது போட்டியிலும் பாகிஸ்தான் 6 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது. பிப்ரவரி 23ஆம் தேதி நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய பாகிஸ்தான் ரன்களை மட்டுமே இலக்காக நிர்ணயித்தது.

அதை துரத்திய இந்தியாவுக்கு விராட் கோலி சதத்தை அடித்து 100*, சுப்மன் கில் 46, ஸ்ரேயாஸ் ஐயர் 56 ரன்கள் அடித்து எளிதாக வெற்றி பெற வைத்தனர். அதனால் அடுத்தடுத்த தோல்விகளைப் பெற்ற பாகிஸ்தான் தங்களது சொந்த மண்ணில் தொடரிலிருந்து வெளியேறும் பரிதாபத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இந்தியா செமி ஃபைனல் வாய்ப்பை உறுதி செய்துள்ளது.

- Advertisement -

அஜய் ஜடேஜா ஏமாற்றம்:

இந்நிலையில் இந்தியாவுக்கு எதிராக கொஞ்சமும் போராடாமலேயே பாகிஸ்தான் தோல்வியை சந்தித்ததாக முன்னாள் வீரர் அஜய் ஜடேஜா ஏமாற்றத்தைத் தெரிவித்துள்ளார். ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணி வெற்றி பெறாவிட்டாலும் பல தருணங்களில் அபாரமாக போராடி ரசிகர்களின் இதயங்களை வெல்லும் செயல்பாடுகளை வெளிப்படுத்தும். ஆனால் அதைக் கூட பாகிஸ்தான் செய்யவில்லை என்று அவர் விமர்சித்துள்ளார்.

இது பற்றி டென் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் ஜடேஜா பேசியது பின்வருமாறு. “கண்டிப்பாக எனது இந்திய அணிக்காக நான் பெருமை பெறுகிறேன். ஆனால் இன்று நான் மகிழ்ச்சியான நபராக இல்லை. ஏனெனில் நீங்கள் போட்டி நிறைந்த போட்டியைக் காண விரும்புவீர்கள். ஆம் நாம் நம்முடைய நாட்டுக்காக விளையாடும் நமது சொந்த அணி வெற்றிப் பெறுவதை விரும்புவோம்”

- Advertisement -

போராடாத பாகிஸ்தான்:

“ஆனால் இப்போட்டி சென்ற விதத்தில் எனக்கு ஏமாற்றம். சொல்லப்போனால் அதில் போட்டியே இல்லை. டாஸ் தவிர்த்து நீங்கள் எதை வென்றீர்கள்? இதயங்களை கூட வெல்லவில்லை. தோல்வியை சந்திப்பது சகஜம். ஆனால் அந்தத் தோல்விகளிலும் போராடினால் உங்களால் இதயங்களை வெல்ல முடியும். அதைக்கூட பாகிஸ்தான் இன்று செய்யவில்லை”

இதையும் படிங்க: டெஸ்ட் கிரிக்கெட்டில் முன்னேறலனாலும்.. சுப்மன் கில் இதுக்கு தகுதியானவர் தான்.. ரிக்கி பாண்டிங் பாராட்டு

“இந்தியா 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்தது. முதலில் ரோகித்தை அப்ரிடி போல்டாக்கினார். 2வதாக கில்லை பந்து சுழன்று வந்து போல்ட்டாக்கியது. ஷ்ரேயாஸ் ஐயரை அவுட்டாக்க சிறப்பான கேட்ச் தேவைப்பட்டது. பாண்டியாவுக்கு எதிராக மட்டுமே இந்தப் போட்டி முழுவதும் பவுன்சர் வீசப்பட்டது. இந்த 4 விக்கெட்டுகள் மட்டுமே பாகிஸ்தானுக்கு நடந்த நல்ல விஷயமாகும். இப்படி சொல்வதற்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” எனக் கூறினார்.

Advertisement