மெகா ட்விஸ்ட் வைத்த அப்ரிடி.. கடைசி பந்தில் ஹீரோவாக இலங்கையை காப்பாற்றிய அசலங்கா.. பாகிஸ்தானை வீட்டுக்கு அனுப்பியது எப்படி?

SL vs PAK 2
- Advertisement -

ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடர் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில் செப்டம்பர் 14ஆம் தேதி நடைபெற்ற முக்கியமான சூப்பர் 4 போட்டியில் நடப்பு சாம்பியன் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. அதில் இந்தியாவிடம் கடந்த போட்டியில் தோற்று தலா 2 புள்ளிகளை பெற்ற இவ்விரு அணிகளும் ஃபைனலுக்கு செல்வதற்கு இப்போட்டியில் நிச்சயம் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கின. அதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பந்து பேட்டிங் செய்வதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய அந்த அணிக்கு பகார் ஜமான் 4 ரன்னில் அவுட்டாகி மீண்டும் ஏமாற்றத்தை கொடுத்தார்.

அதே போல் அடுத்ததாக வந்து 2வது விக்கெட்டுக்கு 62 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தாலும் தடுமாற்றமாக செயல்பட்ட கேப்டன் பாபர் அசாம் 29 (35) ரன்களில் வெல்லாலகே சுழலில் சிக்கிய நிலையில் அடுத்த சில ஓவர்களில் மறுபுறம் நங்கூரமாக போராடிய அப்துல்லா சபிக் 52 ரன்களில் பதிரனா வேகத்தில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார். ஆனால் அப்போது வந்த முகமது ஹாரிஸ் 3, முகமது நவாஸ் 12 என முக்கிய விரைவில் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர்.

- Advertisement -

பரபரப்பான போட்டி:
அதற்கிடையே மழை வந்ததால் போட்டி 42 ஓவர்களாக குறைக்கப்பட்ட பின் அதிரடியாக விளையாடிய நம்பிக்கை நட்சத்திரம் முகமது ரிஸ்வானுடன் ஜோடி சேர்ந்து 6வது விக்கெட்டுக்கு 108 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்திய இப்திகார் அகமது 47 (40) ரன்களை எடுத்தார். ஆனால் மறுபுறம் கடைசி வரை அவுட்டாகாமல் அசத்திய முகமது ரிஸ்வான் 86* (73) ரன்கள் அதிரடியாக எடுத்ததால் 42 ஓவரில் பாகிஸ்தான் 252/7 ரன்கள் எடுக்க இலங்கை சார்பில் அதிகபட்சமாக பதிரனா 3 விக்கெட்களை சாய்த்தார்.

அதை தொடர்ந்து 42 ஓவரில் 252 என்ற புதிய இலக்கை துரத்திய இலங்கைக்கு குசால் பெரேரா 17 ரன்களில் ரன் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தாலும் அடுத்து வந்த குசால் மெண்டிசுடன் சேர்ந்து 2வது விக்கெட்டுக்கு 57 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்திய மற்றொரு தொடக்க வீரர் நிசாங்கா 29 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அந்த நிலைமையில் வந்த சமரவிக்ரமா – குஷால் மெண்டிஸ் ஆகியோர் நிதானமான பேட்டிங்கை வெளிப்படுத்தி பாகிஸ்தான் பவுலர்களை திறம்பட எதிர்கொண்டு வெற்றி பாதைக்கு அழைத்து வந்தனர்.

- Advertisement -

நேரம் செல்ல 3வது விக்கெட்டுக்கு 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து கிட்டத்தட்ட வெற்றியை உறுதி செய்த இந்த ஜோடியில் சமரவிக்ரமா 48 ரன்களில் ஆட்டமிந்தார். ஆனால் மறுபுறம் பாகிஸ்தானுக்கு சிம்ம சொப்பனமாக மாறிய குசால் மெண்டிஸ் 8 பவுண்டரி 1 சிக்சருடன் வெற்றியை உறுதி செய்து சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 91 (87) ரன்களில் ஆட்டமிழந்தார்.

அந்த நிலைமையில் அசலங்கா 42* ரன்கள் எடுத்ததால் வெற்றியை நெருங்கிய இலங்கைக்கு கடைசி நேரத்தில் கேப்டன் சனாக்கா 2 ரன்னில் அவுட்டாக அடுத்ததாக வந்த டீ சில்வாவை 5 ரன்களில் அவுட்டாக்கிய ஷாஹீன் அப்ரிடி வெல்லாலகேவை டக் அவுட்டாக்கி ட்விஸ்ட் கொடுத்தார். அதனால் ஜமான் கான் வீசிய கடைசி ஓவரில் 8 ரன்கள் தேவைப்பட்ட போது 1, 0, 1 என முதல் 3 பந்துகளில் இலங்கை 3 ரன்கள் எடுத்த நிலையில் 4வது பந்தில் பிரமோத் அவுட்டானதால் போட்டியில் மேலும் பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் படிங்க: தோனியுடன் கம்பேர் பண்ணல.. ஆனா அந்த விஷயத்துல கேஎல் ராகுல் வேற லெவல் தான் – அஸ்வின் பாராட்டு

ஆனால் 5வது பந்தில் பவுண்டரி அடித்த அசலங்கா கடைசி பந்தில் 2 ரன்கள் தேவைப்பட்ட போது டபுள் எடுத்து 49* (47) ரன்கள் விளாசி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்து நடப்பு சாம்பியன் இலங்கையை செப்டம்பர் 17இல் நடைபெறும் இந்தியாவுக்கு எதிரான ஃபைனலுக்கு அழைத்து சென்றார். அதனால் ஷாஹீன் அப்ரிடி 2, இப்திகார் அகமது 3 விக்கெட் எடுத்தும் பாகிஸ்தான் பரிதாபமாக வெளியேறியது.

Advertisement