தோனியுடன் கம்பேர் பண்ணல.. ஆனா அந்த விஷயத்துல கேஎல் ராகுல் வேற லெவல் தான் – அஸ்வின் பாராட்டு

KL Rahul Ashwin
- Advertisement -

ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா லீக் மற்றும் சூப்பர் 4 சுற்றில் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்று ஃபைனலுக்கு முதல் அணியாக தகுதி பெற்றது. முன்னதாக 2023 உலக கோப்பைக்கு தயாராகும் வகையில் நடைபெறும் இத்தொடரில் ரிசப் பண்ட்டுக்கு பதிலாக விக்கெட் கீப்பராக விளையாடுவார் என்று கருதப்பட்ட கேஎல் ராகுல் காயத்திலிருந்து குணமடைந்த போது மீண்டும் காயத்தை சந்தித்து லீக் சுற்றில் வெளியேறினார். அதனால் வாய்ப்பு பெற்ற இசான் கிசான் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அசத்தலாக செயல்பட்டதால் உலகக்கோப்பையில் விளையாட வேண்டும் என்ற கோரிக்கைகள் குவிந்தன.

இருப்பினும் சூப்பர் 4 சுற்றில் முழுமையாக குணமடைந்து களமிறங்கிய கேஎல் ராகுல் பாகிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டியிலேயே மிகச் சிறப்பாக விளையாடி சதமடித்து 111* ரன்கள் விளாசி இந்தியாவின் வெற்றியில் முக்கிய பங்காற்றி கம்பேக் கொடுத்தார். அதே போல இலங்கைக்கு எதிரான போட்டியிலும் அழுத்தமான சமயத்தில் 39 ரன்கள் எடுத்த அவர் ஓப்பனிங் இடத்தை விட மிடில் ஆர்டரில் அசத்துவேன் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார்.

- Advertisement -

தோனி மாதிரி:
அது போக இலங்கைக்கு எதிரான போட்டியில் சுழலுக்கு சாதகமான பிட்ச்சில் சிறப்பாக விக்கெட் கீப்பிங் செய்த அவர் குல்தீப் யாதவுக்கு விக்கெட் எடுப்பதற்கு உதவி கிட்டத்தட்ட தோனி போல செயல்பட்டதாக ரசிகர்கள் பாராட்டு தெரிவித்தனர். இந்நிலையில் தோனியுடன் ஒப்பிடும் அளவுக்கு இல்லையென்றாலும் மிடில் ஆர்டரில் அழுத்தமான சூழ்நிலைகளில் அசத்தி பேட்டிங் வரிசையில் வளைவுத்தன்மையை ஏற்படுத்தும் அளவுக்கு கேஎல் ராகுல் சிறப்பாக செயல்படுவதாக ரவிச்சந்திரன் அஸ்வின் பாராட்டியுள்ளார்.

இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “மிடில் ஆர்டரில் இந்தியாவுக்கு தேவையான வளைவுத்தன்மையை கேஎல் ராகுல் கொடுக்கிறார். பொதுவாக மிடில் ஆர்டர் பேட்டிங் செய்வதற்கு மிகவும் கடினமானதாக இருக்கும். அந்தக் கலையில் எம்எஸ் தோனி கலைஞனாக இருந்தார். இருப்பினும் அதற்காக நான் கேஎல் ராகுலை தோனியுடன் ஒப்பிடவில்லை. ஏனெனில் ராகுலை காட்டிலும் தோனி 6, 7 போன்ற இன்னும் கீழ் வரிசையில் பேட்டிங் செய்தார்

- Advertisement -

“ஆனால் மெதுவாக தோனி போல மிடில் ஆர்டரில் கொடுக்கப்பட்ட வேலையை அவர் மாஸ்டர் போல செய்ய துவங்கியுள்ளார் என்று நான் உணர்கிறேன். இலங்கைக்கு எதிரான போட்டியில் அவர் இசான் கிசானுடன் ஒரு முக்கிய பார்ட்னர்ஷிப் அமைத்தார். அத்துடன் வெல்லாலகே நல்ல ஃபார்மில் இருந்த போட்டியில் ராகுல் சில பந்துகளை தவற விட்டு நேர்த்தியாக விளையாடியது நல்ல அறிகுறியாகும்”

இதையும் படிங்க: நாட்டுக்காக விளையாட நாளைக்கே நான் 100% ரெடி ஆனா.. 2023 உ.கோ வாய்ப்பு நொறுங்கியது பற்றி – அஸ்வின் பேட்டி

“அது அவர் நல்ல திட்டத்துடன் விளையாடுவதற்கு வந்துள்ளார் என்பதை காட்டியது” என்று கூறினார். அந்த வகையில் ஆரம்பத்தில் கடுமையான விமர்சனங்களை சந்தித்த ராகுல் தற்போது அதற்கு பதிலடி கொடுத்து பாராட்டுகளை பெற்று வருவதுடன் இஷான் கிசானை விட அதிகமான அனுபவத்தை கொண்டிருப்பதால் உலகக் கோப்பையில் விக்கெட் கீப்பராக விளையாடுவதற்கு முன்னுரிமை பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement