நாட்டுக்காக விளையாட நாளைக்கே நான் 100% ரெடி ஆனா.. 2023 உ.கோ வாய்ப்பு நொறுங்கியது பற்றி – அஸ்வின் பேட்டி

Ravichandran Ashwin 77
Advertisement

உலக கிரிக்கெட்டின் புதிய சாம்பியனை தீர்மானிப்பதற்காக ஐசிசி நடத்தும் 2023 உலகக் கோப்பை வரும் அக்டோபர் 5 முதல் அகமதாபாத் நகரில் கோலாகலமாக துவங்கி நவம்பர் 19 வரை இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடைபெற உள்ளது. அதில் 2011 போல கோப்பையை வென்று சரித்திர படைப்பதற்காக அறிவிக்கப்பட்ட ரோகித் சர்மா தலைமையிலான 15 பேர் கொண்ட இந்திய கிரிக்கெட் அணியில் ஷிகர் தவான், சஹால் ஆகியோர் சேர்க்கப்படாதது சிலருக்கு ஏமாற்றமாக அமைந்தது.

அதே சமயம் ரவிச்சந்திரன் அஸ்வின் உட்பட எந்த தமிழக வீரரும் இடம் பெறாதது தமிழக ரசிகர்களிடம் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. கடந்த 2010இல் அறிமுகமாகி 2011 உலகக் கோப்பை மற்றும் 2013 சாம்பியன்ஸ் ட்ராபி தொடர்களில் சாம்பியன் பட்டம் இந்தியா வெல்வதற்கு முக்கிய பங்காற்றிய அவர் 2017 சாம்பியன்ஸ் ட்ராபி வரை 3 வகை அணி கிரிக்கெட்டிலும் முதன்மை ஸ்பின்னராக விளையாடி வந்தார்.

- Advertisement -

100% தயார்:
இருப்பினும் அதன்பின் தம்மை வளர்த்த தோனி கேப்டன் பதவியிலிருந்து வெளியேறிய நிலையில் புதிய கேப்டன் விராட் கோலி பெரியளவு ஆதரவு கொடுக்காததால் 2019 உலக கோப்பையில் கழற்றி விடப்பட்ட அவர் மனம் தளராமல் ஐபிஎல் தொடரில் போராடி 2021 டி20 உலக கோப்பையில் நேரடியாக தேர்வாகி 2022 டி20 உலகக்கோப்பையிலும் விளையாடினர். இருப்பினும் அதில் பெரியளவு தாக்கத்தை ஏற்படுத்த தவறியதால் அவரை கழற்றி விட்டுள்ள தேர்வுக்குழு நல்ல ஃபார்மில் இருக்கும் குல்தீப் யாதவை தேர்வு செய்துள்ளது.

இந்நிலையில் இந்தியாவுக்காக விளையாடுவதற்கு நாளை அழைத்தால் கூட தாம் 100% தயாராக இருப்பதாக அஸ்வின் கூறியுள்ளார். ஆனால் வாய்ப்பு கிடைக்காததற்காக யாரையும் குறை சொல்லாமல் இந்திய அணிக்கு ஆதரவு கொடுக்க உள்ளதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் பேசியது பின்வருமாறு. “இந்திய அணிக்காக கடந்த 14 15 வருடங்கள் நான் விளையாடி வருகிறேன். அதில் எனக்கு நிறைய மகத்தான மறக்க முடியாத நினைவுகள் இருக்கின்றன”

- Advertisement -

“அதே சமயம் நான் சில நியாயமான தோல்விகளையும் பகிர்ந்து கொண்டேன். அன்றைய நாளில் நான் அபினவ் பிந்த்ராவிடம் பேசினேன். அப்போது அவர் “நான் சந்தித்த வெற்றிகளை விட தோல்விகள் தான் அதிகம்” என்று என்னிடம் சொன்னார். அதே போல நானும் என்னுடைய கேரியரில் வெற்றி மற்றும் தோல்விகளை பகிர்ந்து கொண்டுள்ளேன். ஆனால் இப்போதும் நான் இந்திய கிரிக்கெட்டை என்னுடைய நெஞ்சில் வரைந்துள்ளேன்”

இதையும் படிங்க: இந்தியா பாகிஸ்தான் பைனல்ல மோதுனா ஜெயிக்கபோறது இந்த டீம் தான் – மொயின் கான் கருத்து

“அதனால் என்னுடைய சேவை நாளையே அவர்களுக்கு தேவைப்பட்டால் நான் என்னுடைய 100% சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்துவதற்கு தயாராகவே இருக்கிறேன்” என்று கூறினார். முன்னதாக சொந்த மண்ணில் எப்போதுமே சிறப்பாக செயல்படக்கூடிய ரவிச்சந்திரன் அஸ்வின் ஆஸ்திரேலிய போன்ற எதிரணிகளில் இருக்கும் இடது கை பேட்ஸ்மேன்களை திணறடிப்பதற்கு இந்த உலகக் கோப்பையில் விளையாட வேண்டுமென எம்எஸ்கே பிரசாத் போன்ற சில முன்னாள் வீரர்கள் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement