இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் மற்றும் நேபாள் ஆகிய ஆறு அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது கடந்த ஆகஸ்ட் 30-ஆம் தேதி துவங்கி செப்டம்பர் 17-ஆம் தேதி வரை நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் லீக் சுற்று ஆட்டங்கள் முடிந்து தற்போது சூப்பர் ஃபோர் சுற்று போட்டிகளானது தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த தொடரில் ஏற்கனவே இந்திய அணி பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளை வீழ்த்திய வேளையில் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. அதனை தொடர்ந்து இந்த ஆசிய கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் விளையாடப் போகும் அணி எது? என்பது குறித்த முடிவு இன்னும் சில போட்டிகளில் தெரிந்து விடும்.
அந்த வகையில் பாகிஸ்தான் மற்றும் ஸ்ரீலங்கா ஆகிய அணிகளுக்கு இடையேயான போட்டியில் வெற்றி பெறும் அணி இந்திய அணியுடன் இறுதிப்போட்டியில் விளையாடும் என்பதால் இந்த ஆசிய கோப்பை தொடரில் வெற்றி பெறப்போகும் அணி எது? என்று குறித்து எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் காணப்படுகிறது.
இந்நிலையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகள் இந்த ஆசிய கோப்பை தொடரில் இறுதிப் போட்டியில் பங்கேற்றால் பாகிஸ்தான் அணி தான் வெற்றி பெறும் என்று அந்த அணியின் முன்னாள் வீரரான மொயின் கான் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் :
இந்த ஆசிய கோப்பை தொடரின் இறுதி போட்டியில் இந்திய அணி செட்டிலான வீரர்களுடன் இறங்குகிறது. ஆனாலும் பாகிஸ்தான் இனி இலங்கை அணிக்கு எதிராக மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி எவ்வளவு பெரிய அணி என்பதை நிரூபித்துள்ளது. அதோடு இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகள் இறுதிப் போட்டியில் விளையாடினால் நிச்சயம் பாகிஸ்தான் அணி தான் வெற்றி பெறும்.
இதையும் படிங்க : ஒரே மேட்ச்ல என்னோட கருத்தை பொய்யாக்கிட்டாரு.. 2023 உ.கோ அணியில் அவருக்கு தாராளமா இடம் கொடுங்க – கம்பீர் உல்ட்டா பேட்டி
ஏனெனில் தற்போதைய பாகிஸ்தான் அணி இந்திய அணியின் டாப் ஆர்டரை துவக்கத்திலேயே வீழ்த்தினால் நிச்சயம் இந்திய அணிக்கு பாகிஸ்தான் அணியால் நெருக்கடி தர முடியாது. எனவே என்னை பொறுத்தவரை இந்திய அணியுடன் பாகிஸ்தான அணி சற்று முன்னிலையில் உள்ளதாகவே கூறுவேன் என மொயின் கான் கூறியது குறிப்பிடத்தக்கது.