ஒரே மேட்ச்ல என்னோட கருத்தை பொய்யாக்கிட்டாரு.. 2023 உ.கோ அணியில் அவருக்கு தாராளமா இடம் கொடுங்க – கம்பீர் உல்ட்டா பேட்டி

Gautam Gambhir 555
Advertisement

ஐசிசி நடத்தும் 2023 உலகக்கோப்பை வரும் அக்டோபர் 5 முதல் இந்தியாவில் துவங்கி கோலாகலமாக நடைபெற உள்ளது. அதில் 2011 போல கோப்பையை வென்று சரித்திரம் படைப்பதற்காக அறிவிக்கப்பட்ட ரோகித் சர்மா தலைமையிலான 15 பேர் கொண்ட இந்திய கிரிக்கெட் அணியில் விக்கெட் கீப்பராக ரிஷப் பண்ட்க்கு பதிலாக கேஎல் ராகுல் விளையாடுவார் என்று அறிவிக்கப்பட்டது. இருப்பினும் சமீப காலங்களாகவே துவக்க வீரராக தடவலான பேட்டிங்கை வெளிப்படுத்தி விமர்சனங்களை வாங்கி கட்டிக்கொண்ட அவர் கடந்த ஜனவரி, பிப்ரவரியில் நடைபெற்ற தொடர்களில் மிடில் ஆர்டரில் விக்கெட் கீப்பராக விளையாடும் வாய்ப்பை பெற்று ஓரளவு சிறப்பாக செயல்பட்டார்.

அதை தொடர்ந்து ஐபிஎல் 2023 தொடரிலும் சுமாராகவே செயல்பட்டு காயமடைந்து வெளியேறிய அவர் குணமடைந்து வந்த போது மீண்டும் லேசான காயத்தை சந்தித்ததால் 2023 ஆசிய கோப்பையில் லீக் போட்டியில் விளையாடவில்லை. அந்த சமயத்தில் வாய்ப்பு பெற்ற இசான் கிசான் பாகிஸ்தானுக்கு எதிராக மிகச்சிறப்பாக விளையாடி சமீபத்திய வெஸ்ட் இண்டீஸ் தொடரில் ஹாட்ரிக் சதங்கள் அடித்து நல்ல ஃபார்மில் இருப்பதால் உலகக்கோப்பையிலும் வாய்ப்பு பெற வேண்டும் என்று சில முன்னாள் விமர்சித்தனர்.

- Advertisement -

ஒரே போட்டியில்:
குறிப்பாக கேஎல் ராகுலை தேர்வு செய்தால் உலகக் கோப்பை வெல்ல முடியாது என்று வெளிப்படையாக விமர்சித்த கௌதம் கம்பீர் பெரிய பெயரை கொண்டுள்ள அவரைப் போன்றவரை விட நல்ல ஃபார்மில் இருக்கும் கிஷான் கிசானை தேர்வு செய்ய வேண்டுமென கூறியிருந்தார். அந்த நிலையில் பாகிஸ்தானுக்கு எதிரான சூப்பர் 4 போட்டியில் 111* ரன்கள் விளாசி சூப்பர் கம்பேக் கொடுத்த ராகுல் இலங்கைக்கு எதிரான போட்டியிலும் 39 ரன்கள் அடித்து விக்கெட் கீப்பராக அசத்தி வெற்றிகளில் பங்காற்றினார்.

அதனால் ஒரே போட்டியில் தம்முடைய கருத்தை பொய்யாக்கிய ராகுல் உலகக்கோப்பையில் விளையாடலாம் என்று தற்போது தெரிவிக்கும் கம்பீர் இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பேசியது பின்வருமாறு. “5வது இடம் தற்போது ஓப்பனாக இருக்கிறது. அதில் ஸ்ரேயாஸ் ஐயர், சூரியகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா அல்லது ஜடேஜா விளையாடுவார்களா என்பது தெரியாது”

- Advertisement -

“ஏனெனில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டி வரை விளையாட மாட்டார் என்று கருதப்பட்ட அவர் மிகப்பெரிய சதமடித்து சவாலான சூழ்நிலையில் விக்கெட் கீப்பராகவும் அசத்தினார். எனவே கேஎல் தற்போது 4வது இடத்தை விக்கெட் கீப்பராக உறுதி செய்து விட்டார். தற்போது 4வது இடத்தில் விக்கெட் கீப்பராக விளையாடும் கேஎல் ராகுலுக்கு அணி நிர்வாகம் தொடர் வாய்ப்புகளை கொடுத்தது இந்திய கிரிக்கெட்டுக்கு நன்மையாகும்”

இதையும் படிங்க: அஸ்வின், முரளிதரன் அப்றம் தான்.. அவர் தான் வரலாற்றின் மகத்தான ஆஃப் ஸ்பின்னர் – பாக் வீரரை ஓப்பனாக பாராட்டிய கெளதம் கம்பீர்

“இதிலிருந்து உலகக் கோப்பையில் இஷான் கிசான் இருந்தாலும் ராகுல் தான் விக்கெட் கீப்பராக விளையாடுவார் என்பதையும் அணி நிர்வாகம் காண்பிக்கிறது. ஒருவேளை இசான் கிசான் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் உலகக் கோப்பை போட்டியில் விக்கெட் கீப்பராக களமிறங்கினால் ஆசிய கோப்பையிலேயே அந்த வேலையை செய்திருக்க வேண்டும். ஆனால் கடந்த 2 போட்டிகளில் ராகுல் விக்கெட் கீப்பராக செயல்பட்டதால் அனைத்தும் தெளிவாகியுள்ளது” என்று கூறினார்.

Advertisement