அஸ்வின், முரளிதரன் அப்றம் தான்.. அவர் தான் வரலாற்றின் மகத்தான ஆஃப் ஸ்பின்னர் – பாக் வீரரை ஓப்பனாக பாராட்டிய கெளதம் கம்பீர்

gautam gambhir 99
- Advertisement -

அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் சுழல் பந்து வீச்சாளர்களின் தாக்கம் வெற்றியில் இன்றியமையாததாக இருந்து வருகிறது. சொல்லப்போனால் வேக வேகமாக ஓடி வந்து பந்து வீசும் பவுலர்களை விட மிகவும் குறைந்த தூரத்தில் ஓடி வந்து பந்தை சுழற்றி பல மேஜிக் செய்து பேட்ஸ்மேன்கள் திணறடிக்கும் ஸ்பின்னர்கள் தான் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக விக்கெட்களை எடுத்த வீரர்களின் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார்கள். குறிப்பாக இலங்கையை சேர்ந்த முத்தையா முரளிதரன் ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஷேன் வார்னே ஆகியோர் உலகின் மகத்தான ஸ்பின்னர்களாகவும் அதிக விக்கெட்டுகளை எடுத்த டாப் 2 வீரர்களாகவும் ஜொலிக்கிறார்கள்.

அதிலும் குறிப்பாக இலங்கை சேர்ந்த முத்தையா முரளிதரன் வலது கையில் பந்தை சுழற்றி உலகின் அனைத்து பேட்ஸ்மேன்களையும் திணறடித்து யாராலும் எளிதில் எட்ட முடியாத 800 டெஸ்ட் விக்கெட்டுகளை எடுத்து மாபெரும் சரித்திர சாதனை படைத்துள்ளார். அத்துடன் ஒட்டுமொத்தமாக சர்வதேச கிரிக்கெட்டில் அதிக விக்கெட்களை எடுத்த பவுலர் என்ற சாதனை படைத்துள்ள அவர் வரலாற்றின் மிகச் சிறந்த ஆஃப் ஸ்பின்னராக போற்றப்படுகிறார்.

- Advertisement -

கம்பீர் பாராட்டு:
அவரைத் தொடர்ந்து தற்போது நவீன கிரிக்கெட்டில் தமிழகத்திலிருந்து இந்தியாவுக்காக நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்து வரும் ரவிச்சந்திரன் அஸ்வின் 726 விக்கெட்களை வீழ்த்தி ஹர்பஜன் சிங்கை தாண்டி அதிக சர்வதேச விக்கெட்கள் எடுத்த இந்திய ஆஃப் ஸ்பின்னராக சாதனை படைத்துள்ளார். இந்நிலையில் முத்தையா முரளிதரன், அஸ்வின் ஆகியோரை காட்டிலும் பாகிஸ்தானை சேர்ந்த நட்சத்திரம் முன்னாள் வீரர் சக்லைன் முஸ்டாக் தான் உலகின் சிறந்த ஆஃப் ஸ்பின்னர் என்று கௌதம் கம்பீர் பாராட்டியுள்ளார்.

பொதுவாக சாகித் அப்ரிடி போன்ற பாகிஸ்தான் வீரர்களுடன் களத்திலும் களத்திற்கு வெளியேயும் சண்டையிடுபவராக அறியப்படும் அவர் முதல் முறையாக அந்நாட்டு ஜாம்பவான் வீரரை பாராட்டி பேசியது பின்வருமாறு. “சக்லைன் முஷ்டாக்கை விட யாரும் சிறந்தவர் இருக்க முடியாது என்று நான் நினைக்கிறேன். நான் முரளிதரனுக்கு எதிராக நிறைய விளையாடியுள்ளேன். அதே போல ஹர்பஜன் சிங், அஸ்வின் ஆகியோருக்கு எதிராகவும் பேட்டிங் செய்துள்ளேன்”

- Advertisement -

“ஆனால் உச்சத்தில் இருக்கும் போது முஸ்டாக் மிகவும் வித்தியாசமானவர். மேலும் அவர் தான் தூஸ்ரா பந்தை அறிமுகப்படுத்தியவர். அத்துடன் 90களில் எத்தனை ஸ்பின்னர்கள் கடைசி 10 ஓவர்களில் பந்து வீசினார்கள்? மேலும் அனைவரும் நான் சுழல் பந்து வீச்சை சிறப்பாக எதிர்கொள்வேன் என்று சொல்வார்கள். ஆனால் ஒருமுறை இங்கிலாந்தில் நான் சக்லைன் முஷ்டாக்கை எதிர்கொண்டேன். அங்கே ஃபிட்டாக இல்லாமல் இருந்த போதிலும் அவருடைய கைகளில் இருந்து பந்து மிகவும் துல்லியமாக வந்தது”

இதையும் படிங்க: விராட்டை விட பாபர் தான் பெஸ்ட்ன்னு நான் சொல்லல அது சொல்லுது.. இலங்கையை சம்பவம் செய்வாரு பாருங்க.. ஹெய்டன் பாராட்டு

“எனவே உச்சத்தில் அவரை விட ஒரு சிறந்த ஆஃப் ஸ்பின்னர் இருக்க முடியாது என்று நான் கருதுகிறேன்” என கூறினார். 1995 – 2004 வரையிலான காலகட்டங்களில் 49 டெஸ்ட் மற்றும் 129 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய முஷ்டாக் சச்சின் உட்பட நிறைய பேட்ஸ்மேன்களுக்கு சவாலை கொடுத்து 400க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை எடுத்து பாகிஸ்தானின் ஜாம்பவான் ஆஃப் ஸ்பின்னராக செயல்பட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement