விராட்டை விட பாபர் தான் பெஸ்ட்ன்னு நான் சொல்லல அது சொல்லுது.. இலங்கையை சம்பவம் செய்வாரு பாருங்க.. ஹெய்டன் பாராட்டு

Matthew Hayden 3
- Advertisement -

உச்சக்கட்டத்தை எட்டியுள்ள ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் செப்டம்பர் 14ஆம் தேதி கொழும்புவில் துவங்கிய முக்கியமான சூப்பர் 4 போட்டியில் நடப்பு சாம்பியன் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. அதில் இரு அணிகளுமே தலா 2 புள்ளிகளை சமமாக பெற்றுள்ளதால் ஃபைனலுக்கு செல்வதற்கு நிச்சயம் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கிய போதிலும் மழை வந்து ஆரம்பத்திலேயே பாதிப்பை ஏற்படுத்தியது. இந்த நிலைமையில் போட்டி ரத்து செய்யப்பட்டால் பாகிஸ்தானை விட அதிக ரன் ரேட் கொண்டுள்ள இலங்கை ஃபைனலுக்கு தகுதி பெறும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

முன்னதாக கடந்த 2015ஆம் ஆண்டு சர்வதேச அரங்கில் அறிமுகமான பாபர் அசாம் 2017க்குப்பின் ஓரளவு சிறப்பாக செயல்பட்டு 2019 முதல் 3 வகையான கிரிக்கெட்டிலும் நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தி பாகிஸ்தானின் வெற்றிகளில் பங்காற்றி நிலையான இடத்தைப் பிடித்தார். அதனால் கேப்டனாகவும் அறிவிக்கப்பட்ட அவர் நீண்ட காலம் கழித்து பாகிஸ்தானின் மகத்தான பேட்ஸ்மேனாக உருவெடுத்து மேட்ச் வின்னராக அவதரித்துள்ளார்.

- Advertisement -

ஹெய்டன் தடலாடி:
அதன் காரணமாக விராட் கோலியை விட பாபர் அசாம் தான் சிறந்தவர் என்று நாட்டவர்கள் பேசுகின்றனர். குறிப்பாக கடந்த 15 வருடங்களாக 3 வகையான கிரிக்கெட்டிலும் கிட்டத்தட்ட தலா 50 என்ற அபாரமான சராசரியில் 77 சதங்கள் அடித்து 25000க்கும் மேற்பட்ட ரன்களை விளாசி இந்தியாவுக்கு நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்து நவீன கிரிக்கெட்டின் ஜாம்பவானாக செயல்பட்டு வரும் விராட் கோலியை ஓரிரு வருடங்கள் அசத்திய பாபர் அசாமுடன் அவர்கள் நியாயமின்றி ஒப்பிட்டு வருகிறார்கள்.

ஆனால் உண்மையில் ஒருநாள் கிரிக்கெட்டில் உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக இருக்கும் பாபர் அசாம் இதுவரை இந்தியாவுக்கு எதிராக ஒரு அரை சதம் கூட அடித்ததில்லை. இந்நிலையில் புள்ளி விவரங்களின் படி விராட் கோலியை விட பாபர் அசாம் சிறந்த வீரராக இருப்பதாக தெரிவிக்கும் மேத்தியூ ஹெய்டன் இந்த போட்டியில் இலங்கையை வீழ்த்தி பாகிஸ்தானை வெற்றி பெற வைப்பார் என்று பாராட்டியுள்ளார்.

- Advertisement -

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “பாபர் அசாம் சாம்பியன். அவர் சாம்பியன் வீரர்களைப் போல இது போன்ற கடினமான தருணங்களை கடந்து மீண்டும் மீண்டும் வந்துள்ளார். மேலும் புள்ளி விவரங்களின்படி நீங்கள் விராட் கோலியிடன் ஒப்பிடும் போது பாபர் அசாம் முன்னிலையில் இருக்கிறார். அதனாலேயே பாகிஸ்தான் பேட்டிங் வரிசையில் அவர் முக்கியமான வீரராக இருக்கிறார்”

இதையும் படிங்க: கஷ்டம் தான்.. இங்கயே திணறும் அவர் எப்படி 2023 உ.கோ தொடரில் அசத்துவாரு – இந்திய பவுலர் பற்றி சல்மான் பட் பேட்டி

“எனவே இலங்கைக்கு எதிரான போட்டியில் அவர் சிறப்பாக செயல்படுவார் என்று நான் உறுதியாக நம்புகிறேன். கேப்டனாக இருப்பதால் மட்டும் அவர் பாகிஸ்தான் அணியில் முக்கியவராக இல்லை. மாறாக திறமை அடிப்படையில் அவர் முதன்மையானவராக இருக்கிறார். காலம் காலமாக பாகிஸ்தான் அணியில் டாப் ஆர்டர் அதிக எடையுடையதாக இருப்பதை நான் அறிவேன். அதனால் அவர் தடுமாறும் போது பாகிஸ்தான் அணியும் வெற்றி பெற தடுமாறுகிறது” என்று கூறினார்.

Advertisement