IND vs SL : சுழலால் சுருட்டிய இலங்கை 2 தனித்துவ வரலாற்று சாதனை- புதிய திட்டத்துடன் பந்து வீசும் இந்தியா வெல்லுமா?

Dunith Wellalage 2
- Advertisement -

இலங்கையில் உள்ள கொழும்பு நகரில் செப்டம்பர் 12ஆம் தேதி இந்திய நேரப்படி மதியம் 3 மணிக்கு நடைபெற்ற ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடரின் முக்கியமான சூப்பர் 4 போட்டியில் நடைபெற்ற இலங்கை மற்றும் இந்திய அணிகள் பலப்பரீட்சை நடத்தின. குறிப்பாக அப்போட்டில் வென்று ஃபைனல் வாய்ப்பை உறுதி செய்யும் முனைப்புடன் மோதிய அவ்விரு அணிளில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து களமிறங்கிய அந்த அணிக்கு 80 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்தாலும் தடுமாற்றமாக செயல்பட்ட சுப்மன் கில்லை 19 ரன்களில் அவுட்டாக்கிய துணித் வெல்லலேக் அடுத்து வந்த விராட் கோலியையும் 3 ரன்களில் காலி செய்தார்.

அத்துடன் மறுபுறம் அதிரடியாக 7 பவுண்டரி 2 சிக்சர்களை விளாசி 53 ரன்கள் எடுத்து சவாலை கொடுத்த கேப்டன் ரோகித் சர்மாவும் அவரின் சுழலில் அவுட்டானார். அதனால் 91/3 என்ற சுமாரான துவக்கத்தைப் பற்றி தடுமாறிய இந்தியாவை 4வது விக்கெட்டுக்கு 63 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து ஓரளவு காப்பாற்றிய கேஎல் ராகுல் 39 ரன்களில் அவுட்டாக மறுபுறம் போராடிய இசான் கிசானும் 33 ரன்களில் ஆட்டமிழந்தார்.

- Advertisement -

இந்தியா வெல்லுமா:
ஆனால் அப்போது மிகவும் பொறுப்புடன் விளையாட வேண்டிய ஹர்திக் பாண்டியா 5 ரன்களிலும் ரவீந்திர ஜடேஜா 5 ரன்களிலும் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுக்க கடைசியில் அக்சர் பட்டேல் போராடி 26 ரன்கள் எடுத்தார். அதனால் ஓரளவு மட்டுமே தப்பிய இந்தியா 49.1 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து வெறும் 213 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்தளவுக்கு பந்து வீச்சில் அசத்திய இலங்கை சார்பில் அதிகபட்சமாக வெல்லலேக் 5 விக்கெட்டுகளை சாய்த்தார்.

சொல்லப்போனால் இந்த போட்டியில் இந்தியாவின் 10 விக்கெட்டுகளில் துணித் வெல்லலேக் 5, சரித் அசலங்கா 4 என 2 ஸ்பின்னர்கள் சேர்ந்து மொத்தம் 9 விக்கெட்டுகளை சாய்த்த நிலையில் கடைசி விக்கெட்டை மஹீஸ் தீக்சனா எடுத்தார். அதன் வாயிலாக 50 ஓவர் ஆசிய கோப்பை வரலாற்றில் ஒரு போட்டியில் எதிரணியின் 10 விக்கெட்டுகளையும் ஸ்பின்னர்களால் எடுத்த முதல் அணி என்ற தனித்துவமான சாதனையை இலங்கை படைத்துள்ளது.

- Advertisement -

அதே போல ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரு போட்டியில் இந்தியாவின் 10 விக்கெட்டுகளையும் சுழல் பந்து வீச்சாளர்களால் எடுத்த முதல் அணி என்ற தனித்துவமான சாதனையும் இலங்கை படைத்துள்ளது. இந்த நிலையில் இப்போது நடைபெறும் பிட்ச் பேட்டிங்க்கு மிகப்பெரிய சவாலாகவும் சுழலுக்கு சாதகமாகவும் இருப்பது தெரிய வருகிறது.

இதையும் படிங்க: ரோஹித், கில், விராட், ராகுல் பாண்டியாவை சாய்த்து – மாயாஜாலம் செய்த 20 வயது இலங்கை ஸ்பின்னர், வீக்னெஸை அம்பலமாக்கி அசத்தல்

அதை ஆரம்பத்திலேயே எதிர்பார்த்த இந்தியாவும் தாக்கூரை நீக்கி விட்டு எக்ஸ்பிரஸ் ஸ்பின்னரான அக்சர் பட்டேலை அணிக்குள் கொண்டு வந்துள்ளது. அதனால் 3 ஸ்பின்னர்களுடன் இலங்கை பேட்ஸ்மேன்களுக்கு சவாலை கொடுத்து 213 என்ற குறைந்த இலக்கை கட்டுப்படுத்துவதற்காக இந்தியா போராடி வருகிறது. இருப்பினும் அதற்கும் மழையும் வழி விட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement