45/0 டூ 156 ஆல் அவுட்.. நடப்பு சாம்பியன் மீது பாய்ந்த இலங்கை.. இந்தியாவை மிஞ்சி இங்கிலாந்து மோசமான சாதனை

- Advertisement -

இந்தியாவில் ரசிகர்களை மகிழ்வித்து வரும் ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் அக்டோபர் 26ம் தேதி மதியம் 2 மணிக்கு பெங்களூருவில் நடைபெற்ற 25வது லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகள் மோதின. அதில் ஏற்கனவே 3 தோல்விகளை பதிவு செய்த இங்கிலாந்து நிச்சயம் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

அதை தொடர்ந்து களமிறங்கிய அந்த அணிக்கு பவர் பிளே ஓவரில் அதிரடியாக விளையாடிய ஜானி பேர்ஸ்டோ டேவிட் மாலன் ஆகியோர் 45 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்த நல்ல துவக்கத்தை கொடுத்தனர். ஆனால் தன்னுடைய கம்பேக் போட்டியில் அந்த ஜோடியில் மாலனை 28 ரன்களில் பிரித்த அனுபவ இலங்கை வீரர் ஏஞ்சேலோ மேத்தியூஸ் அடுத்ததாக வந்த ஜோ ரூட்டை 3 ரன்களில் ரன் அவுட் செய்து போட்டியில் திருப்பு முனையை உண்டாக்கினார்.

- Advertisement -

இலங்கை மிரட்டல்:
அதை பயன்படுத்திய இலங்கை அடுத்த சில ஓவர்களில் ஜானி பேர்ஸ்டோவை 30 ரன்களில் அவுட்டாக்கியது. அதே வேகத்தில் அடுத்ததாக வந்த கேப்டன் ஜோஸ் பட்லரை 8 ரன்களில் அவுட்டாக்கிய லகிரு குமாரா அடுத்து வந்த அதிரடி வீரர் லியம் லிவிங்ஸ்டனை 1 ரன்னில் பெவிலியனுக்கு அனுப்பி இங்கிலாந்துக்கு பெரிய அழுத்தத்தை உண்டாக்கினார்.

அதனால் 45/0 என்ற நல்ல நிலைமையில் இருந்த இங்கிலாந்து திடீரென 85/5 என சரிந்தது. அப்போது அதை சரி செய்வதற்காக நட்சத்திர வீரர்கள் பென் ஸ்டோக்ஸ் மற்றும் மொயின் அலி ஆகியோர் நிதானமாக விளையாட முயற்சித்தனர். ஆனாலும் 6வது விக்கெட்டுக்கு 37 ரன்கள் மட்டுமே பார்ட்னர்ஷிப் அமைத்து இந்த ஜோடியையும் பிரித்த மேத்தியூஸ் மீண்டும் இங்கிலாந்துக்கு பெரிய அழுத்ததை ஏற்படுத்தினார். அதன் காரணமாக மறுபுறம் முடிந்தளவுக்கு போராடிய பென் ஸ்டோக்ஸும் 43 ரன்களில் குமாரா வேகத்தில் ஆட்டமிழந்தார்.

- Advertisement -

இறுதியில் அடுத்து வந்த வீரர்களும் ஏமாற்றத்தை கொடுத்ததால் 33.2 ஓவரிலேயே இங்கிலாந்தை வெறும் 156 ரன்களுக்கு சுருட்டிய இலங்கை சார்பில் அதிகபட்சமாக லகிரு குமாரா 3, ஏஞ்சேலோ மேத்தியூஸ் மற்றும் கௌசன் ரஜிதா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் சாய்த்தனர். மறுபுறம் டாஸ் வென்று பேட்டிங்க்கு சாதகமான சின்னசாமி மைதானத்தில் கூட இங்கிலாந்து மோசமாக செயல்பட்டது அந்நாட்டு ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது.

இதையும் படிங்க: 45/0 டூ 156 ஆல் அவுட்.. நடப்பு சாம்பியன் மீது பாய்ந்த இலங்கை.. இந்தியாவை மிஞ்சி இங்கிலாந்து மோசமான சாதனை

இதன் வாயிலாக உலக கோப்பையில் இலங்கைக்கு எதிராக தங்களுடைய குறைந்தபட்ச ஸ்கோரை பதிவு செய்து இங்கிலாந்து மோசமான சாதனை படைத்தது. அத்துடன் பெங்களூரு மைதானத்தில் ஒருநாள் கிரிக்கெட்டில் குறைந்தபட்ச ஸ்கோர் பதிவு செய்த அணி என்ற இந்தியாவின் மோசமான சாதனையை இங்கிலாந்து வாங்கிக் கொண்டது. இதற்கு முன் 1999இல் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா 168 ரன்களுக்கு சுருண்டதே முந்தைய மோசமான சாதனையாகும்.

Advertisement